Republic Day Speech in Tamil | குடியரசு தின பேச்சு போட்டி 2023
ஒரு வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும் நமது இந்திய நாட்டின் சிறப்பை போற்றும் மிகவும் முக்கியமான ஒரு தினமாக இந்திய குடியரசு தினம் திகழ்கிறது.
இந்திய குடியரசு தினம் ➨ ஜனவரி 26
Republic Day Speech in Tamil | குடியரசு தினம் பேச்சு போட்டி ஒரு பார்வை
நண்பர்களே, மன்னர் ஆட்சியை பற்றி தெரிந்தால்தான் உங்களுக்கு குடியரசு ஆட்சியைப் பற்றி புரியும். அந்த வகையில் மன்னராட்சியை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
மன்னர் ஆட்சி பற்றிய ஒரு பார்வை
பண்டைய காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் மன்னராட்சி முறை இருந்தது. அதாவது ஒரு நாட்டின் மன்னர் இறந்த பிறகு அவருக்கு மகனாக இருக்கும் இளவரசன் மன்னராக பொறுப்பேற்று ஆட்சி நடத்துவது. இதை மன்னர் ஆட்சி என்கிறோம்.
Republic Day Wishes in Tamil 2023 | இந்தியக் குடியரசு தினம் வாழ்த்துக்கள் 2023 |
இந்த மன்னராட்சி முறையில் பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே மக்களை ஆட்சி செய்யும். இதற்கு மாறாக சமீப நூற்றாண்டுகளில் உருவான ஆட்சி முறை தான் “குடியரசு ஆட்சி” முறையாகும்.
Republic Day Speech in Tamil | குடியரசு என்றால் என்ன ?
குடியரசு என்றால் என்ன ?
குடியரசு ஆட்சி முறை
குடியரசு என்றால் மக்களாட்சி முறையாகும்.
குடியரசு ஆட்சியில் தலைவராக இருப்பவர் ஜனாதிபதி ஆவார். இவரே அரசின் தலைவர் ஆவார்.
குடியரசு தலைவரை மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வழியாகவோ தேர்வு செய்வர்.
நமது இந்திய நாட்டைப் பொறுத்தவரையில் குடியரசு தலைவரை மறைமுகமாக தேர்வு செய்கிறோம். அதாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குடியரசு தலைவரை தேர்வு செய்வர்.
குடியரசு தலைவர் நாட்டின் மூத்த குடிமகன் என்று அழைக்கப்படுகிறார்.
குடியரசு ஆட்சியில் எந்தவித பாகுபாடும் இருக்காது. அதாவது இன, மத,மொழி, நிற, பாலின அடிப்படையில் சமுதாயத்தில் எந்த பாகுபாடும் இன்றி குடியரசு தலைவரை நாம் தேர்வு செய்கின்றோம். அது மட்டுமல்லாமல் குடியரசு ஆட்சியில் அரசாங்கம் ஆனது மக்களுக்காக அமைக்கப்படும்.
குடியரசு ஆட்சியில் மக்களே அதிகாரம் உடையவர்கள் ஆவர். இதை தான் நாம் மக்களாட்சி என்கிறோம்.
இந்தியா சுதந்திரம் அடைந்தது ➨ ஆகஸ்ட் 15, 1947 இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த பொழுது ‘குடியரசு ஆட்சி முறை’ தான் இந்திய நாட்டிற்கான சிறந்த ஆட்சி முறை என இந்திய அரசியல் தலைவர்கள் கருதினார்கள். இதன் அடிப்படையில் ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு இந்திய நாட்டை குடியரசு நாடாக அறிவித்தனர். நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமும் எழுதப்பட்டது. இந்திய குடியரசு தினம் ➨ ஜனவரி 26 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர் ➨ டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் |
Republic Day Speech in Tamil | இந்திய குடியரசு தினம் உருவான வரலாறு
சுமார் 190 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேய மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் காலணி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நமது இந்திய நாடானது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
இந்தியா சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக் கொண்ட நிலையில், இந்திய நாட்டிற்கான நிரந்தரமான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை இந்தியாவின் முதல் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களிடம் ஒப்படைத்தார்.
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் மற்றும் அவரது குழுவினர் தங்களது அயராத உழைப்பினால் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரைவை நாடாளுமன்ற குழுவிடம் ஒப்படைத்தார். எனினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 26 ஆம் தேதி தான் அந்த அரசியலமைப்பு சட்ட வரைவு நடைமுறைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினமே இந்திய நாட்டின் முதல் குடியரசு தலைவராக திரு. ராஜேந்திர பிரசாத் அவர்கள் பதவியேற்றார். இந்த தினமே இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினம் பேச்சு போட்டி கட்டுரை
காமராஜர் |
சத்தியமூர்த்தி |
திருப்பூர் குமரன் |
இராஜாஜி |
வ.உ.சிதம்பரனார் |
சுப்பிரமணிய சிவா |
பாரதிதாசன் |
பாரதியார் |
Republic Day Speech in Tamil | நமது தேசிய கீதம் சிறப்பு
ஜன, கண மன… நமது தேசிய கீதம் ஆகும்.
நமது தேசிய கீதம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது.
நமது தேசிய கீதத்தை எழுதியவர் ➨ இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதினார்.
இதன் இந்தி மொழியாக்கம் ஜனவரி 24, 1950 இல் இந்திய அரசியலமைப்பு சபையால் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நமது தேசிய கீதத்தை சுமார் 52 வினாடிகளில் இசைக்க வேண்டும்.
Republic Day Speech in Tamil | நமது தேசியக்கொடி சிறப்பு
மூவர்ணக் கொடி நமது தேசியக்கொடி ஆகும்.
தேசியக் கொடியின் நீளம் மற்றும் அகலம் 3:2 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது.
நடுவில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களை கொண்டுள்ளது.
மூன்று வண்ணங்களும் சம அளவில் கிடைமட்டமாக அமைந்திருக்கும்.
- மேல்பகுதி காவி நிறம் ➨ தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
- கீழ்பகுதி பச்சை நிறம் ➨ செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது.
- இடையில் உள்ள வெள்ளை நிறம் ➨ நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது.
- நடுவில் கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோக சக்கரம் ➨ அறவழியையும், அமைதியையும் வலியுறுத்துகிறது.
Republic Day Speech in Tamil | நமது தேசிய இலச்சினை (National Emblem)
இந்தியாவின் தேசிய இலச்சினை சாராநாத் அசோகத் தூணில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தியாவின் தேசிய இலச்சினை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ➨ ஜனவரி 26, 1950 (முதல் குடியரசு தினம் அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.)
நமது இலச்சினை நான்முகச் சிங்கம் ஆகும். இதன் அடிப்பகுதியில் ‘சத்யமேவ ஜெயதே’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
தேசிய இலச்சினை மேல்பகுதி மற்றும் அடிப்பகுதி என இரண்டு பகுதிகளைக் கொண்டது. மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தி இருக்குமாறு வட்ட வடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நமது இலச்சினையில் மூன்று சிங்க உருவங்களை மட்டுமே காண இயலும்.
அடிப்பகுதியில் யானை,குதிரை,காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன. இவ்வுருவங்களுக்கிடையே “தர்மசக்கரம்” அமைந்துள்ளது.
Happy Republic Day 2023 and 26 January Wishes Images Quotes |
Republic Day Speech in Tamil | பாசறைக்கு திரும்புதல் விழா
இந்திய குடியரசு நாளின் மூன்றாவது நாளான ஜனவரி 29 அன்று “பாசறைக்கு திரும்புதல் விழா” சிறப்பாக நடைபெறும். அந்நாளில் தரைப்படை,கடற்படை, விமானப்படையை சேர்ந்த குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்துவர். இந்நிகழ்வின் முதன்மை விருந்தினர் குடியரசுத் தலைவர் ஆவார். இவ்விழாவின் ஒரு பகுதியாக மாலை 6.00 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
இந்திய குடியரசு தின விழாவில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்
1. 2023 ஆம் ஆண்டு எத்தனையாவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது?
74வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
2. இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவினை முன்வைத்தது யார்?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
3. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?
டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
4. குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் எங்கு சென்று தேசியக்கொடி ஏற்றுவார்?
நமது இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் கொடி ஏற்றம் மற்றும் அணிவகுப்பு நடைபெறும்.
5. இந்திய குடிமக்களில் தங்களது நாட்டின் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக புள்ளி விவரங்களின் சதவீதம் ➨ 79 சதவீதம்
6. உலக அளவில் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் ➨ முதலிடம்
7. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ➨ ஆந்திராவைச் சேர்ந்த பிங்கலி வெங்கைய்யா
8. விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி நெய்யப்பட்டது ➨ தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தம் (வேலூர் மாவட்டம்)
குறிப்பு
- இக்கொடியை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் 15.08.1947 இல் செங்கோட்டையில் ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இக்கொடியானது தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
9. நமது இந்திய நாட்டின் தேசிய கீதம் முதன்முதலாக பாடப்பட்டது ?
- 1911 டிசம்பர் 27ஆம் நாள் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது நமது நாட்டின் “தேசிய கீதம்” முதன் முதலாக பாடப்பட்டது.
10. நமது இந்திய நாட்டின் தேசிய சின்னங்கள்
இந்தியாவின் தேசிய மரம் ➨ ஆலமரம் (1950 இல் அறிவிப்பு)
இந்தியாவின் தேசிய பழம் ➨ மாம்பழம் (1950 இல் அறிவிப்பு)
இந்தியாவின் தேசிய மலர் ➨ தாமரை (1950 இல் அறிவிப்பு)
இந்தியாவின் தேசிய பறவை ➨ மயில் (1963 இல் அறிவிப்பு)
இந்தியாவின் தேசிய விலங்கு ➨ புலி (1973 இல் அறிவிப்பு)
இந்தியாவின் தேசிய ஆறு ➨ கங்கை (2008 இல் அறிவிப்பு)
இந்தியாவின் புராதன விலங்கு ➨ யானை (2010ல் அறிவிப்பு)
இந்தியாவின் தேசிய நன்னீர் வாழ் விலங்கு ➨ ஆற்று ஓங்கில் (2010ல் அறிவிப்பு)
இந்தியாவின் தேசிய பாக்டீரியா (தோழமை பாக்டீரியா) ➨ லேக்டோ பேசில்லஸ் (2012ல் அறிவிப்பு)