Homeதமிழ்Pongal Wishes in Tamil 2023 | இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2023

Pongal Wishes in Tamil 2023 | இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2023

THATSTAMIL-GOOGLE-NEWS

Pongal Wishes in Tamil 2023 | இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2023

உழவர்கள் தைப்பொங்கல் திருநாளில் தமது வேளாண்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். உங்கள் அனைவருக்கும் தட்ஸ் தமிழ் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

உழவர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இந்த தைப்பொங்கலை நாம் கொண்டாடி வருகிறோம். இது தமிழர்களின் சிறப்பு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் திருவிழா நாளை தொடங்குகிறது. முதல் பண்டிகையாக போகி தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என வரிசைக் கட்டி வரும் பண்டிகைக்கு வாழ்த்துகளை பரிமாறுவது இயல்பான ஒன்று.

ஜனவரி 14, 2023 ➨ தைப்பொங்கல் அல்லது சூரிய பொங்கல் அல்லது பெரும் பொங்கல்

 

நாம் தைப்பொங்கல் திருநாளை பல்வேறு விதமாக அழைக்கின்றோம். தைப்பொங்கல் திருநாளை நாம் சூரிய பொங்கல் எனவும் பெரும் பொங்கல் எனவும் குறிப்பிடுகிறோம்.

இன்று பொங்கல் வைக்க நல்ல நேரம்

தெரிந்துக்கொள்ள க்ளிக்

 

Pongal Wishes in Tamil 2023 | தைப்பொங்கல் 2023

தை முதல் நாள் ஆனது பெரும் பொங்கல் அல்லது சூரியப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பொங்கல் ஆனது சூரிய பகவானின் வழிபாட்டுக்குரிய நாளாகும். அனைவருக்கும் இனிய பெரும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தை பொங்கல் நாளில் சூரிய உதயத்தில் திறந்த வெளியில் உணவு சமைக்கப்படுகிறது.

பக்தர்கள் சூரிய பகவானுக்கு பால் மற்றும் வெல்லம் காணிக்கையாக வைத்து பெரும் பொங்கல் படைக்கின்றனர். நான்கு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நாள் இதுவாகும். சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ஒன்று சர்க்கரை பொங்கல் ஆகும். அதனால்தான் அதை சூரிய பகவானுக்கு படைத்து பெரும் பொங்கல் கொண்டாடுகிறோம்.

பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்..

தமிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்… உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாகப்படுத்தும் திருநாள்…

Pongal Wishes in Tamil 2023 | பொங்கல் வாழ்த்துக்கள் 2023

இந்த இனிய பொங்கல் திருநாளில் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து புகைப்படங்களை நீங்கள் அனுப்பி மகிழ, நாங்கள் பொங்கல் வாழ்த்து கவிதைகள் (Pongal Wishes in Tamil) மற்றும் பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் (Pongal Wishes Images in Tamil) என பல்வேறு புகைப்படங்களை தொகுத்து கொடுத்துள்ளோம். அவையெல்லாம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையட்டும்.

வாருங்கள் நண்பர்களே தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 2023 புகைப்படங்களை நாம் இங்கே பார்க்கலாம்.

pongal wishes in tamil 2023

அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

எனது அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களுக்கு எனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

pongal wishes in tamil பொங்கல் வாழ்த்துக்கள்

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க

இன்பம் பொங்க, இனிமை பொங்க

என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க

பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

 

Pongal Wishes in Tamil இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 2023

அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில்

தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும்

நலமும், வளமும் பெருகட்டும்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

 

Pongal Wishes in Tamil 2023 | பொங்கல் வாழ்த்து கவிதை

 

உங்கள் இல்லங்களிலும்

உங்கள் உள்ளங்களிலும்

மகிழ்ச்சி பொங்கட்டும்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

2023

 

pongal wishes in tamil

 

அனைவருக்கும்

இனிய

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

அன்பு பொங்க, நேர்மை தங்க

வளமை செழிக்க, வலிமை சிறக்க

அறிவு பெருக, இனிமை பொங்க

அனைவருக்கும்

இனிய

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

pongal wishes in tamil பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள்

கரும்பின் சுவை போல

உங்கள் வாழ்க்கையில்

என்றென்றும் மகிழ்ச்சி

தித்திக்கட்டும்

அனைவருக்கும் இனிய

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

Pongal Wishes in Tamil 2023 | பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை

தை பிறந்தால் வழி பிறக்கும்

தரணி எங்கும் வளம் செழிக்கும்

இதயங்களில் புன்னகை பூக்கும்

உதயமாகும் செங்கதிர் போல…

இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கை

இனிக்கும் செங்கரும்பை போல…

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

அனைத்து

தமிழர்களுக்கும்

பொங்கல்

நல்வாழ்த்துக்கள்

 

வருகிறது தைப்பொங்கல்

வளம் தரும் சூரிய பொங்கல்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை

அன்பும் ஆனந்தமும் பொங்க

அறமும் வளமும் தழைக்க

இல்லமும் உள்ளமும் சிறக்க

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

அனைவருக்கும்

இனிய

தமிழர் திருநாள்

நல்வாழ்த்துக்கள்

 

Pongal Wishes in Tamil 2023 | தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்கள்

குடும்பத்தினருக்கும்

இனிய

தைப்பொங்கல் திருநாள்

நல்வாழ்த்துக்கள்

 

உங்கள் அனைவருக்கும்

என் இதயம் கனிந்த

பொங்கல்

நல்வாழ்த்துக்கள்

pongal wishes in tamil தை பொங்கல் வாழ்த்துக்கள்

வளமும் நலமும் செழிக்க

அன்பும் பண்பும் பெருக

உறவும் நட்பும் சேர்ந்திட

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

pongal wishes in tamil

 

HAPPY PONGAL

அனைவருக்கும்

இனிய

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

பொங்கலோ

பொங்கல்

சகோதர சகோதரிகளுக்கு

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

அனைவருக்கும்

இனிய

தைப்பொங்கல்

தமிழர் திருநாள்

நல்வாழ்த்துக்கள்

 

நல்லதொரு வாழ்க்கை அமைய

இல்லத்தில் அஷ்ட லட்சுமிகளும் தங்க

இந்நாளைப் போல் எந்நாளும்

கரும்பை போல் தித்திக்க

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

உங்களுக்கும் உங்கள்

குடும்பத்தினருக்கும்

இனிய

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

 

Pongal Wishes in Tamil | மாட்டுப் பொங்கல் கவிதை

தங்களது வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி..

வெயில் மழை என பாராமல் பாடுபட்டு…

விளைத்தெடுத்த நெல்மணிகளை

புதுப்பானையில் போட்டு பொங்கலிட்டு…

தைப்பொங்கலை கொண்டாடும்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

 

மாட்டுப் பொங்கல்

  • தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் ஆகும்.

திங்கள் கிழமை (16 ஜனவரி, 2023)

இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதன் நோக்கம் விவசாயத்திற்கு பங்கு வகிக்கும் பசுக்கள், காளைகள் மற்றும் பிற பண்ணை விலங்குகள் போன்ற கால்நடைகளுக்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நாம் நமது நன்றியை செலுத்தும் விதமாக கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து பொங்கல் வைத்து படைத்து மாட்டுப் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

மாடுகளுக்கு நோய் நொடி தாக்காதிருக்கவும், அவை விருத்தியாகவும் மற்றும் உறுதியுடன் உழைக்கும் வல்லமை பெறவும் அன்றைய நாள் தெய்வங்களிடம் பிரார்த்திக்கப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் நாளில் மாடுகளை ஊர்வலமாக ஓட்டிச் சென்று வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். வீட்டினுள் மாடுகள் நுழையும் போது ஒரு உலக்கையை தாண்டி வரும்படி செய்கின்றனர். இதற்குக் காரணம் மாடுகளோடு தொற்றிக் கொண்டு வரும் தீய சிறு துர்சக்திகள் உலக்கையை தாண்டி வருவதில்லை என்பதால் தான் இப்படி செய்து வருகின்றனர்.

Pongal Wishes in Tamil 2023 | உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கல்

உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கல்

  • தை மாதத்தின் மூன்றாம் நாள் காணும் பொங்கல் ஆகும்.

செவ்வாய் கிழமை (17 ஜனவரி, 2023)

காணும் பொங்கல் விழாவானது ஓய்வு மற்றும் மகிழ்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விழாவாகும். இந்த நன்னாளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்து இனிப்புகளை பரிமாறிக்கொள்வார்கள்.

இந்த நாளில் வீடுகளுக்கு வெளியே ரங்கோலி வரையப்படுகிறது. இது செழிப்பு மற்றும் நல்வாழ்வின் ஒரு அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.

Read Also,

What is Valentine’s Day and it’s History and How did it Start and Valentine’s Day Images
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments