Homeதமிழ்2024 பொங்கல் வைக்க நல்ல நேரம் | பொங்கல் பண்டிகை வரலாறு

2024 பொங்கல் வைக்க நல்ல நேரம் | பொங்கல் பண்டிகை வரலாறு

THATSTAMIL-GOOGLE-NEWS

2024 பொங்கல் வைக்க நல்ல நேரம் | பொங்கல் பண்டிகை வரலாறு

தமிழர்களின் பொங்கல் திருநாள் பண்டிகை

வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் நாம் காண இருப்பது தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் (Pongal) விழாவின் சிறப்பு மற்றும் பொங்கல் விழா கொண்டாடுவதன் நோக்கம் பற்றியதுதான். இந்தப் பதிவினை தொடங்குவதற்கு முன்பு உங்களுக்கு 2024 இல் பொங்கல் வைக்கும் நல்ல நேரத்தைப் பற்றி கூறிவிட்டு நமது கட்டுரையை ஆரம்பிப்போம்.

Pongal Wishes in Tamil 2024 | இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024

Click Here

 

தட்ஸ் தமிழ் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் 2024

தைப்பொங்கல் (Thai Pongal) வைக்க நல்ல நேரம் 2024

நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 1ஆம் தேதி 15 – 01 – 2024

கிழமை ➨ திங்கள் கிழமை

பொங்கல் வைக்க நல்ல நேரம்

காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் பொங்கல் வைப்பது உத்தமம்.

 

மாட்டுப் பொங்கல் (Mattu Pongal) வைக்க நல்ல நேரம் 2024

  • தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் ஆகும்.

காலை நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் அவரவர் சம்பிரதாயப்படி மாட்டுப் பொங்கல் கொண்டாடலாம். உங்களுக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் மாட்டுப் பொங்கல் வைக்க நேரத்தை கீழே குறிப்பிட்டுள்ளோம். படித்துப் பயன் பெறுங்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 2ஆம் தேதி 16 – 02 – 2024

கிழமை ➨ செவ்வாய் கிழமை

 

அவரவர் சம்பிரதாயப்படி மாட்டுப் பொங்கலை (Mattu Pongal) கொண்டாடலாம். உங்களுக்காக காலை அல்லது மாலை நேரத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடும் நேரத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.

மாலை நேரத்தில் மாட்டுப் பொங்கல் (Mattu Pongal)

பொங்கல் பானை வைக்க நேரம்

மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள்

16 – 01 – 2024 செவ்வாய் கிழமை அன்று மதியம் 12.45 மணி முதல் 1.45 மணிக்குள் குரு ஓரையில் மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து, மாட்டுக் கொட்டைகளை சுத்தம் செய்து மாலை 05.00 மணி முதல் 6.00 மணிக்குள் கோபூஜை செய்து நைவேத்தியம் படைத்த பின்பு,மாடுகளை வணங்கிவிட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றுக்கு உண்ணக் கொடுப்பது சிறப்பு.

 

pongal wishes in tamil

எப்படி நாம் பொங்கல் வைக்க வேண்டும்?

பொதுவாக பொங்கல் திருநாளில் வீட்டின் முற்றத்தில் நடுவில் புதிய அடுப்பு வைத்து பெரிய பானைகளில் பொங்கல் வைப்பதே நமது வழக்கம். இதற்கென்று தனியாக ஒரு சிலர் அடுப்புகளை வைத்திருப்பார்கள். கிராமத்தில் பெரும்பாலும் விறகு அடுப்பை பயன்படுத்துவார்கள். பொங்கல் வைப்பதற்கு சமையலறையை பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் நடுவில் உள்ள முற்றத்தில் கிழக்கு நோக்கியவாறு சிறிய இடத்தில் சாணத்தாலும் மற்றும் களிமண்ணாலும் பூஜை மாடம் அமைப்பார்கள். இதில் பசு சாணாத்தால் செய்த தெய்வ உருவங்கள் நிலைப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றை இந்நாளின் ‘சாணி பிள்ளையார்’ என்று குறிப்பிடுவர். இவையே நாம் பழங்காலத்தில் வழிபட்டு வந்த தொன்மை கடவுள் வழிபாட்டு முறையாகும். இவற்றிற்கு அருகு சூட்டி,நெல்லும், மலரும் தூவி வழிபடுவார்கள். பூசணிப்பூக்களை கொண்டும் அலங்கரிப்பார்கள். பொதுவாக காய்கறிகள், கரும்பு ஆகியவற்றை இங்கே வைத்து படைத்த பின்னரே சமைப்பது தமிழர்களின் வழக்கம்.

முற்றத்தில் அடுப்புக்கு அருகில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த தெய்வங்களை வழிபட்டு, தீபாராதனை செய்து பின்பு அச்சுடரை கொண்டே பொங்கல் அடுப்பை மூட்டுவர்.

சமைத்த உணவினை பொங்கலுடன் பானையில் பொங்கிய குழம்பு,கூட்டு முதலியவற்றை இந்த தெய்வங்களுக்கு படைக்கின்றார்கள். அப்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்குகிறார்கள். இதற்கென நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து பூஜை அடுப்பு மூட்டுவது வழக்கம்.

மேலும் பானைகளுக்கு இரட்சையாக இஞ்சி, மஞ்சள் கிழங்குகளை கட்டி தயாரித்த காப்பினை இங்கு வைத்து பூஜித்த பின்னரே பானைகளுக்கு அணிவிக்கின்றனர். பின்பு பானையை அடுப்பில் ஏற்றியதும் பாலை விட்டு தண்ணீரால் பூரிப்பார்கள். அந்த சமயத்தில் பால் சூடாகி பொங்கும். அது வடக்கு திசையிலும் மேற்கு திசையிலும் பொங்கினால் அந்த ஆண்டு முழுவதும் நற்பலன் விளையும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. பிறகு மேலும் நீர் விட்டு உலை கொதித்ததும் புது அரிசியை இட்டு பொங்குகின்றார்கள்.

பொங்கல் தயாரான பிறகு பானையை இறக்கி வெளிப்புறத்தை துடைத்து, விபூதி அல்லது நாமமிட்டு , சந்தனத்தை தெளித்து ஆவாரம் கொத்து, பிரண்டைகளால் தொடுத்த மாலையை கழுத்தில் கட்டி அலங்கரிப்பார்கள். இதற்கு தீபாராதனை செய்கின்றார்கள். பிறகு வாழை இலையில் பொங்கல் வைத்து அதனோடு காய்கறி, பூசணி கூட்டுடன் சேர்த்து சூரிய பகவானுக்கு படையல் இடுவார்கள்.

பின்பு சாணம் அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படைப்பார்கள். பொங்கல் விழா முடிந்த பிறகு இவற்றை ஆற்றில் அல்லது குளத்தில் விட்டுவிடுவார்கள். ஒரு சிலர் அதை வீட்டு மாடத்தில் வைத்து மழை வரும் போது கரைந்து போக செய்வதும் வழக்கத்தில் உண்டு.

பொங்கல்

பொங்கல் பண்டிகை வரலாறு

தென்னிந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும் பொங்கல் பண்டிகை. தமிழர்களின் சிறப்பு பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் பிற பகுதிகளில் பொங்கல் விழாவானது “மகர சங்கராந்தி” என்று பிரபலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் இது தைப்பொங்கல் என்றும், முழு காலமும் உத்தராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது நான்கு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

நான்கு நாள் திருவிழாக்கள் விபரம்

மார்கழி மாதத்தின் இறுதி நாள்

முதல் நாள் விழா ➨ போகிப் பண்டிகை

 

தை மாதத்தின் முதல் நாள்

இரண்டாம் நாள் விழா ➨ தைப்பொங்கல் (Thai Pongal)

 

தை மாதத்தின் இரண்டாம் நாள்

மூன்றாம் நாள் விழா ➨ மாட்டுப் பொங்கல் (Mattu Pongal)

 

தை மாதத்தின் மூன்றாம் நாள்

நான்காம் நாள் விழா ➨ உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கல்

 

முதல் நாள் ➨ போகிப் பண்டிகை

ஞாயிற்றுக் கிழமை (14 ஜனவரி, 2024)

போகிப் பொங்கல் என்பது பொங்கலின் முதல் நாளாகும். மார்கழி மாதத்தின் இறுதி நாள் போகிப் பண்டிகையாகும். இந்த போகிப் பண்டிகையானது இந்திரனுக்கு உரிய நாளாகும். இந்த நாளில் மக்கள் நிலத்திற்கு உரிய மழையை வேண்டி இந்திர பகவானுக்காக மேற்கொள்ளப்படும் விழாவாகும். அனைவருக்கும் இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்

போகிப் பண்டிகை சிறப்பு

  • பழையன கழிதலும் புதியன புகுவதும் இந்த நாளில் மேற்கொள்ளப்படும்.
இரண்டாம் நாள் ➨ தைப்பொங்கல் (Thai Pongal)

திங்கள் கிழமை (15 ஜனவரி, 2024)

சூரியப் பொங்கல் அல்லது தைப்பொங்கல் (Thai Pongal)

தை முதல் நாள் ஆனது பெரும் பொங்கல் அல்லது சூரியப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பொங்கல் ஆனது சூரிய பகவானின் வழிபாட்டுக்குரிய நாளாகும். அனைவருக்கும் இனிய பெரும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தை பொங்கல் (Thai Pongal) நாளில் சூரிய உதயத்தில் திறந்த வெளியில் உணவு சமைக்கப்படுகிறது.

பக்தர்கள் சூரிய பகவானுக்கு பால் மற்றும் வெல்லம் காணிக்கையாக வைத்து பெரும் பொங்கல் படைக்கின்றனர். நான்கு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நாள் இதுவாகும். சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ஒன்று சர்க்கரை பொங்கல் ஆகும். அதனால்தான் அதை சூரிய பகவானுக்கு படைத்து பெரும் பொங்கல் கொண்டாடுகிறோம்.

மூன்றாம் நாள் ➨ மாட்டுப் பொங்கல் (Mattu Pongal)

செவ்வாய்க் கிழமை (16 ஜனவரி, 2024)

தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் ஆகும். மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதன் நோக்கம் விவசாயத்திற்கு பங்கு வகிக்கும் பசுக்கள், காளைகள் மற்றும் பிற பண்ணை விலங்குகள் போன்ற கால்நடைகளுக்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நாம் நமது நன்றியை செலுத்தும் விதமாக கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து பொங்கல் வைத்து படைத்து மாட்டுப் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மாடுகளுக்கு நோய் நொடி தாக்காதிருக்கவும், அவை விருத்தியாகவும் மற்றும் உறுதியுடன் உழைக்கும் வல்லமை பெறவும் அன்றைய நாள் தெய்வங்களிடம் பிரார்த்திக்கப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் (Mattu Pongal) நாளில் மாடுகளை ஊர்வலமாக ஓட்டிச் சென்று வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். வீட்டினுள் மாடுகள் நுழையும் போது ஒரு உலக்கையை தாண்டி வரும்படி செய்கின்றனர். இதற்குக் காரணம் மாடுகளோடு தொற்றிக் கொண்டு வரும் தீய சிறு துர்சக்திகள் உலக்கையை தாண்டி வருவதில்லை என்பதால் தான் இப்படி செய்து வருகின்றனர்.

நான்காம் நாள் ➨ உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கல்

புதன் கிழமை (17 ஜனவரி, 2024)

தை மாதத்தின் மூன்றாம் நாள் காணும் பொங்கல் ஆகும். காணும் பொங்கல் விழாவானது ஓய்வு மற்றும் மகிழ்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விழாவாகும். இந்த நன்னாளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்து இனிப்புகளை பரிமாறிக்கொள்வார்கள்.

இந்த நாளில் வீடுகளுக்கு வெளியே ரங்கோலி (Rangoli) வரையப்படுகிறது. இது செழிப்பு மற்றும் நல்வாழ்வின் ஒரு அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.

இதையும் படிக்கலாமே

திருவள்ளுவர் தினம்
சனியின் பிடியில் சிக்கித் தவிப்பவரா நீங்கள் இதோ உங்களுக்கான வாழ்வியல் பரிகாரங்கள்
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments