Homeசினிமா2023 துணிவு படம் எப்படி இருக்கு? | Thunivu Movie Review in Tamil

2023 துணிவு படம் எப்படி இருக்கு? | Thunivu Movie Review in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

துணிவு படம் எப்படி இருக்கு ? | Thunivu Movie Review in Tamil

துணிவு படத்தின் ஒன்லைன் மெசேஜ்

சாமானிய மக்கள் மீது வங்கிகள் நடத்தும் அத்துமீறல்களை அம்பலப்படுத்த துணிபவனின் போராட்டம் தான் ஹெச்.வினோத் அவர்கள் இயக்கியுள்ள தல அஜித் அவர்களின் துணிவு படம்.

துணிவு கதையின் மையக்கருத்து | Thunivu Movie Review in Tamil

சென்னையில் பிரதான பகுதியில் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘யுவர் பேங்க்’ என்ற வங்கியில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அதற்குப் பிறகு வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது.

இதில் வாடிக்கையாளர்களைப் போல வரும் அஜித் அவர்கள் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுகள் கொண்டு வருகிறார்.

அதற்குப் பிறகு காவல்துறையும், அரசு எந்திரமும் தல அஜித்தை பிடிக்க அலர்ட்டாக இருக்கிறார்கள்… இறுதியில் காவல்துறை கையில் தல அஜித் சிக்கினாரா? எதற்காக அவர் வங்கியை கொள்ளையடிக்க நினைக்கிறார்? அங்கிருக்கும் பணம் யாருடையது? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் மெசேஜ் உடன் கலந்த திரைக்கதையில் சொல்லும் படம் தான் ‘துணிவு’

துணிவு படத்தில் தல அஜித்தின் அசத்தலான ஸ்டைல் | Thunivu Movie Review in Tamil

Thunivu Movie Review in Tamil

வெள்ளை நிற காஸ்டியூமும், நேர்த்தியாக வளர்ந்த தாடி, தேவைக்கு அதிகம் இல்லாத தலைமுடி என வயதுக்கேற்ற தோற்றத்தில் ஸ்மார்ட் லுக்கில் ஈர்க்கிறார் தல அஜித் அவர்கள். படம் முழுவதிலும் ஜாலி கலந்த வில்லத்தனத்துடன் அசத்துகிறார் தல அஜித் அவர்கள். அதே நேரத்தில் ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் ‘பீஸ்ட்’ மோடில் நடித்து படத்தில் அழுத்தம் கூட்டுகிறார். தல அஜித்தின் சின்ன சின்ன நடன அசைவுகளும் (குறிப்பாக மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப்பில்) அதற்கேற்ற பின்னணி இசையும் கொண்டு ரசிகர்களை ரசிக்க வைப்பதுடன் மொத்த திரையரங்கையும் அதிரவைக்கிறார்.

ஸ்டண்ட் காட்சியில் ஹீரோயின் மஞ்சு வாரியார் | Thunivu Movie Review in Tamil

கண்மணியாக மஞ்சு வாரியார் வழக்கமான ரொமான்ஸ் ஹீரோயினாக இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். அழுத்தமான நடிப்புடன் அஜித்துக்கும் மஞ்சு வாரியாருக்கும் ஆன கெமிஸ்ட்ரி பொருந்தி போகிறது.

துணிவு படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் | Thunivu Movie Review in Tamil

தர்ஷன்,ஜி.எம்.சுந்தர், ஜான்கொக்கேன், சமுத்திரக்கனி, ‘பக்ஸ்’ பகவதி, அஜய் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்துகின்றனர்.

‘மைபா’வாக நடித்துள்ள மோகனசுந்தரம் அவர்கள் தனது அசால்ட்டான உடல்மொழி மற்றும் வசனங்கள் மூலம் அப்ளாஸ் அள்ளுகிறார். ‘மகாநதி’ ஷங்கருக்கான கதாபாத்திரம் பொருந்தவில்லையோ என்ற உணர்வும் எனக்கு எழுகிறது. உங்களது கருத்துக்களை நமது கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும் நண்பர்களே…

கதையின் கருத்தும் ஸ்டைலான வசனமும் | Thunivu Movie Review in Tamil

துணிவு படத்தின் வாயிலாக இயக்குநர் ஹெச்.வினோத் அவர்கள் சொல்ல வந்த கருத்து முக்கியமானது. இஎம்ஐ முதலானவற்றில் சிக்கித் தவிக்கும் மக்கள், அவர்களை முதலீடாக்கி காசு பார்க்கும் வங்கிகள், இவர்களுக்கிடையிலான மார்க்கெட்டிங் ஊழியர்கள், அவர்களின் டார்கெட் டார்ச்சர் என பணத்தை அச்சாணியாக கொண்டு சுழலும் இந்த ரோலர் கோஸ்ட் பார்வையாக விரிகிறது துணிவு படம்.

‘மனுச ஏன் சுயநலமா இருக்கான். சுயநலமா இருக்கறதால தான் அவன் மனுசனாவே இருக்கான்’ மற்றும் மனிதநேயத்தை உணர்த்தும் வசனங்கள் சில வரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. வங்கிகள் கையாளும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், அதற்கான அவர்களின் எழுத்துரு அளவு, பங்குச்சந்தையை கைகாட்டி நகரும் அலட்சியப்போக்கு உள்ளிட்டவற்றை தோலுரிக்கும் விதமான காட்சி ஒன்று திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.

துணிவு படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் அதீத ஆக்‌ஷன் காட்சிகள், தெறிக்கும் தோட்டாக்களுடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில் அஜித்துக்கான பின்புலக் கதை மெதுவாக நகர்கிறது.

ஜிப்ரான் இசையில் பாடல்களை ரசிக்க வைத்தாலும் கதைக்கு தேவையில்லாத இடைச்செருகல். பின்னணி இசை காட்சிகளுக்கு அடர்த்தி கூட்டி, சில இடங்களில் கூஸ்பம்ப்ஸ் தருணங்களை உருவாக்குவது பார்வையாளர்களுக்கு விருந்து. நீரவ் ஷா ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பும் துணிவு படத்தின் தரத்தை கூட்ட உதவுகின்றன.

மொத்தத்தில் அடர்த்தியான கருத்தை ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் ஹீரோ தல அஜித்தின் வழியாக சொல்ல முனைந்திருக்கிற படம் தான் துணிவு.

நண்பர்களே, நீங்கள் துணிவு படத்தைப் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை நமது கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

thunivu tamil vimarsanam in tamil,thunivu review tamil

Read Also,

பொங்கல் பரிசு தொகுப்பு 2022
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments