Homeசினிமாரஜினியின் ஜெயிலர் படம் எப்படி இருக்கு தெரியுமா? | Jailer Movie Review in Tamil...

ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி இருக்கு தெரியுமா? | Jailer Movie Review in Tamil 2023

THATSTAMIL-GOOGLE-NEWS

ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி இருக்கு தெரியுமா? | Jailer Movie Review in Tamil

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. நண்பர்களே, இந்த ஜெயிலர் திரைப்படத்தின் விமர்சனத்தை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169வது படமான “ஜெயிலர்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்த ஜெயிலர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த ஜெயிலர் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார்.

Jailer Movie Review in Tamil | ஜெயிலர் படம் விமர்சனம்

jailer review tamil

இந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, சிவராஜ்குமார், சுனில், விநாயக் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு இன்றைய தினம் திருவிழா தான். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தலைவரை திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலாக இருக்கின்றனர். ரசிகர்கள் வெடி வெடித்து படத்திற்கு கட்டவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து ஒரு திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர்.

jailer movie review in tamil

படம் பார்த்த ரஜினி ரசிகர் ஒருவர் ஜெயிலர் திரைப்படம் முதல் பாதி சிறப்பாக உள்ளதாகவும், குறிப்பாக படத்தில் ரஜினி மற்றும் யோகி பாபு வரும் காட்சிகள் செம காமெடியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜெய்லர் திரைப்படத்தின் முதல் பாதியில் செண்டிமெண்ட் காட்சிகளுடன் ஆக்சன் மற்றும் காமெடியும் சேர்ந்து அனைத்தும் சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஜெயிலர் படத்தில் அனிருத் அவர்களின் இசை வெறித்தனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Jailer Movie Review in Tamil | ஜெயிலர் விமர்சனம்

jailer movie review in tamil ஜெயிலர் படம் விமர்சனம்

ஜெயிலர் படத்தின் இன்டர்வெல் சீனில் வரும் ஆக்சன் பிளாக் செம மாஸாக இருக்கிறது. படத்தின் முதல் பாதி செமையாக இருப்பதாகவும் படத்தின் இரண்டாவது பாதியில் ஒரு சர்ப்ரைஸ் ஆன சிறப்பு தோற்றமும் இருப்பதாக ரசிகர்கள் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாதியில் வரும் ட்விஸ்ட் படத்திற்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. ஜெயிலர் படத்தில் ஒரு காட்சி கூட போர் அடிக்காத வகையில் செண்டிமெண்ட் காட்சிகள், காமெடி காட்சிகள், மற்றும் அனிருத் இசை, தமன்னா அவர்களின் நடன காட்சிகள் மற்றும் ஆக்சன் பிளாக் என பல இடங்களில் ரசிகர்களுக்கு தகுந்தவாறு நெல்சன் அவர்கள் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நெல்சன் அவர்கள் தான் யார் என்று நிரூபித்துள்ளார்.

நண்பர்களே, நீங்களும் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை நமது கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும். நன்றி.

 

இதையும் படிக்கலாமே,

‘எதிர்நீச்சல்’ சீரியலில் வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் உண்மையாக ஒரு நபர் இருக்கிறார் என இயக்குனர் திருச்செல்வம் சொன்ன தகவல்..யாராக இருக்கும்?
Independence Day Wishes in Tamil 2023 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments