‘எதிர்நீச்சல்’ சீரியலில் வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் உண்மையாக ஒரு நபர் இருக்கிறார் என இயக்குனர் திருச்செல்வம் சொன்ன தகவல்..யாராக இருக்கும்?
சன் டிவியில் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக வலம் வந்து கொண்டிருப்பது எதிர்நீச்சல் சீரியல். அந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து தான் எதிர்நீச்சல் சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சன் டிவியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வருபவர் தான் நடிகர் மாரிமுத்து. அடிப்படையிலேயே இயக்குனராக இருந்தவர்தான் இந்த மாரிமுத்து. இவர் இயக்குனர் வசந்த் மற்றும் மணிரத்தினம் போன்றோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். பல திரைப்படங்களில் வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
பிரபலமான யூடியூப் சேனலில் எதிர்நீச்சல் தொடரின் இயக்குனர் திருச்செல்வம் அவர்கள், தனக்குத் தெரிந்த ஒருவரை அடிப்படையாக வைத்து தான் இந்த எதிர்நீச்சல் சீரியலில் வரும் முக்கிய கதாபாத்திரமான ஆதி குணசேகரன் என்ற கேரக்டரை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.
நான் அதிகம் ஊர் சுத்திட்டு இருப்பேன்.. தமிழகத்தின் தென்பகுதியில் ட்ராவல் செய்து கொண்டிருந்த நேரத்தில ஒரு நண்பர் ஒருத்தர் அவரிடம் கூட்டிட்டு போனதாகவும் அப்போதுதான் அந்த நபரை சந்தித்ததாகவும், அந்த நபர் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை சொல்லி முடித்ததும் நான் அவர்கிட்ட கேட்டேன் இத வச்சு ஒரு கதாபாத்திரம் பண்ணலாமா என்று அவரும் சம்மதம் தெரிவித்தார்.
அப்படி எதார்த்தமாக ரியல் லைஃபில் நான் சந்தித்த ஒரு மனிதர் தான் இவர். இவரை மையமாக வைத்து தான் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை தான் உருவாக்கியதாக youtube சேனலில் பேசியுள்ளார். அவரை விரைவில் அறிமுகப்படுத்துவதாகவும் திருச்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே,
அதிர்ஷ்டம் தரும் எலுமிச்சை மற்றும் மிளகாயை பற்றி உங்களுக்கு தெரியுமா ? |