Homeகாய்கறிகள்கத்தரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் நன்மைகள் என்ன ? கத்தரிக்காயை எப்படி தேர்வு...

கத்தரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் நன்மைகள் என்ன ? கத்தரிக்காயை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று சித்தர்கள் கூறும் விளக்கம்

THATSTAMIL-GOOGLE-NEWS

கத்தரிக்காய் -Brinjal

சித்தர் பாடல் :

பண்டு மாண்ட கிரந்தியைப் பாலிக்கு
முண்ட கைக்குந் தினவை யுண்டாக்கிடு நண்டு கண்டுங் குரங்கென நாளுமாங் கண்டு விட்டது கத்தரிக் காயதே

பொதுவாகவே-
கத்தரிக்காயை (Brinjal)உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்பதே சித்தர்களின் கருத்தாகும். நம் உணவிலோ, உடலிலோ இந்தக் கத்தரிக்காய் சேருவதை மாமுனிவர்கள் விரும்பவில்லை.

கத்தரிக்காய்

ஏனென்றால்–

கத்தரிக்காய் நம் உடலுக்கு எவ்வித நன்மையையும் செய்வதில்லை. ருசியாக இருக்கிறது, என்பதற்காக உண்டு விடுவதால் வியாதிக்கு நாமே அழைப்பிதழ் அனுப்பியவர்களாகிறோம்.

சில மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது நம் நாட்டுப் பெரியவர்கள் ‘உபகாரம் செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்பவர்கள் இவர்கள் ’ என்பர்.

அந்த மனிதர்களைப் போலவே காய்கறிகளில் இக்கத்தரிக்காயானது நம் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களைத் தந்து ஊட்டி வளர்க்கா விட்டாலும் —

உடலுக்கு நோயாக மாறி நம்மை வாட்டி வதைக்கிறது.

‘இந்த மனிதன் கத்தரிக்காய் மாதிரி இருக் கிறான்’ என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. உடனே மற்றவர்கள். அவன் குள்ளமாய் இருப்ப தாலேயே இவ்வாறு சொல்லுகின்றனர்’ என்று தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்ளுவர்

ஆனால்—

உண்மை அப்படியா?

இல்லவே இல்லை!

கத்தரிக்காயை விட அளவில் குறைந்த அநேகம் காய்கறிகள் இருக்கின்றனவே! சுண்டைக் காயை விட சிறிய காய் உள்ளதா?

ஏன் சுண்டைக்காய் மாதிரி இருக்கிறான்? என்று நம் மூதாதையர் சொல்வது இல்லை? அவர்களுக்குத் தெரியும் சுண்டைக்காய் நன்மையைச் செய்யக் கூடியது என்று!

ஆனால், கத்தரிக்காய்?

நன்மையை ஒரு போதும் செய்வது இல்லை. எனவே இந்த மனிதனுடன் பழக வேண்டாம், இவனுடைய நட்பு நமக்குத் தேவையற்றது.

கத்தரிக்காய்

கத்தரிக்காய் முதலில் சாப்பிடும்போது ருசியை அதிகமாகத் தருவது போல-

இந்த மனிதன் பழகும்போது மிகவும் இனிமை யானவனாகவும், கவர்ச்சிகரமானவனாகவும் இருக்கின்றான். கத்திரிக்காய் உண்ட பிறகு உடலுக்குக் கெடுதியைச் செய்வது போல்-

நம்முடன் ஒன்றுக்கொன்றாகப் பழகி நம்மைப் பற்றி அறிந்து கொண்டவுடன் கத்திரிக்காயைப் போலவே நம்முடைய கண்ணுக்குத் தெரியாத பல் வேறு விதமான இடர்களையும் உண்டாக்கி விடு கின்றான்.

எனவே இவன் சேர்க்கையை விலக்குவது அவசியம்.

கத்திரிக்காய் (Brinjal) உண்ட பின் உடலுக்குக் கேடாவதைப் போல்-இம் மனிதன் பழகிய பின் உயிருக்குக் கேடாவான் என்பதையே மறைமுகமாகக் குறிக்க நம் நாட்டுப் பெரியவர்கள் தீய மனிதர்களை மட்டுமே கத்திரிக்காய் போன்றவன் என்றனர்.

நம்முடைய அறிவிற்கு எட்டியபடி குள்ளமானவர்களை மட்டுமே இது குறிக்கும் என்று குள்ளமானவர்களை கேலி பேசி மகிழ்கிறோம்.

ஏனென்றால், கத்திரிக்காய் எள்ளளவு கூட நன்மையைத் தராதா என்று சிலர் கேட்கலாம். ஒன்றிரணடு சிறு நன்மைகளை இது செய்யத்தான் செய்யும்.

வஞ்சகர் செய்யும் சுயநலம் மிகுந்த உதவியைப் போல-

இப்போது கத்தரிக்காய் செய்யும் நன்மை தீமைகளைப் பார்ப்போம். அப்போது அது நல்லது அதிகம் செய்கிறதா? தீமை அதிகம் செய்கிறதா என்பதை நீங்களே உணர்வீர்கள்.

கத்தரிக்காய் (Brinjal) செய்யும் நன்மை என்று சித்தர்கள் ஒதுக்கித் தந்த ஒரு முழு வரி இதுதான்:-

கத்தரிக்காய் பித்தங் கனன்ற கபந் தீர்த்துவிடும் அதற்கு அடுத்த வரியைப் பாருங்கள்-

தொத்து சொறி சிரங்கைத் தூண்டிவிடு மெத்தவுந்தான்

மீண்டும் பழைய பாடலைப் பாருங்கள்… உங்களுக்குப் பொருள் சொல்லத் தேவை இல்லைஎன்றாகி விடும். இருப்பினும்
விளக்குகிறேன் கேளுங்கள்:-

1. முன்பொரு சமயம் எப்போதோ வந்து மறைந்து போன மேகம் என்னும் நோயினை மீண்டும் புதிதாகக் கிளறித் தோற்றுவிக்கும்.

2. சொறி, சிரங்கு போன்ற வியாதிகளைத் தூண்டி விடும்.

3.உடலெங்கும் ‘நமநம’வென்று அரிப்பினை ஏற்படுத்தும்.

4. தோல் வியாதிகளை ஏற்படுத்துவதிலும், அதன் எதிரொலியாக அரிப்பைக் கொடுத்து சொறிந்த இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு பரவி வர வழி அமைத்துக் கொடுப்பதிலும் இதற்கு நிகர் இதுவேதான்!

5. உடலில் ஏதாவது ஒரு வியாதி இருந்தால் அந்த வியாதியைத் தட்டிக்கொடுத்து ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தி வியாதி பரவவோ, அதிகமாகவோ வழியை உண்டாக்கும்.

இவையெல்லாம் கத்தரிக்காய் செய்யும் தீமைகளாகும்.

கத்தரிக்காய்

இந்தக் கத்தரிக்காய் செய்யும் நன்மைதான் என்ன ?

இது உடலில் ஏற்படும் பித்தத்தினால் உண்டான கபம் என்ற நெஞ்சுச் சளியை முறியடிக்கிறது.

ஐயோ, கத்தரிக்காய் சுவையான உணவுப் பொருளாயிற்றே, இதை விட முடியாதே என்று சிலரும்—

பின்னாளில் வருவது வரட்டும், இப்போதைக்கு அனுபவித்துக் கொள்வதுதான் நல்லது என்ற எண்ணத்தில் கத்தரிக்காயை வாங்கிச் சுவை பார்க்கத் துடித்திடும் பலரும்–

இன்றைய நிலைமையில் காய்கறிகளின் இமயமலை உயர விலைக்கு இந்தக் கத்தரிக்காயே போதும், என்ன செய்வது? சாப்பிடக் கூடாதுதான் ஆனாலும் வழி இல்லையே என்று ஏங்குகின்ற ஏழைக் குடும்பங்களில் வறுமை நோயினால் வாடும் சிலரும் —

அப்போதே சித்த முனிவர்களிடம் கேட்டிருப்பார்கள் போலத் தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களுக்கு வெண்பாவின் கடைசி இரண்டு அடிகளாக-

————– மெத்தவுந்தான்
பிஞ்சான கத்தரிக்காய் பேசுமுத் தோஷம் போக்கு
மஞ்சார் குழலே வழுத்து

என்று முடித்துள்ளனர்.

அதாவது —

கத்தரிக்காயை மிக மிகப் பிஞ்சுகளாகத் தேர்ந்து எடுங்கள். அதனை வேண்டுமானால். நன்கு உண்டு மகிழுங்கள் என்கின்றனர்.

இந்தப் பிஞ்சுக் கத்தரிக்காயை உண்ணுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

இந்தப் பிஞ்சுகள்—

  • வாதத்தினால் ஏற்படும் நோய்களை நீக்குகிறது.
  • பித்தத்தினால் விளையும் வியாதிகளை விரட்டியடிக்கிறது.
  • சிலேட்டுமம் என்று கூறப்படும் உடல்குளிர்ச்சியினால் ஏற்படும் கபம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வென்று உடலை ஆரோக்கியபடுத்துகிறது.
  • எனவே கத்தரிக்காயை நோய் தீர்க்கும் மருந்துப் பொருளாகக் கருதி நோயுள்ளவர்கள் சேர்த்துக் கொள்ளலாமே தவிர-

ஆரோக்கியமுள்ள மனிதனுக்குத் தேவை இல்லாத ஒன்று என்று நமக்கே புலனாகின்றது. அல்லவா? ஆகையால் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதை விட தவிர்ப்பதே நல்லது .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments