மகளிருக்கு மாதம் ரூ.1000 தற்போது தமிழக அரசு அறிவித்த முக்கிய தகவல்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளது.
இதுவரை இரண்டு கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
முதற்கட்ட முகாம்கள் ➨ ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.
இரண்டாம் கட்ட முகாம்கள் ➨ ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த இரண்டு கட்ட முகாம்களில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் ஆகஸ்ட் 20 ஆம் தேதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசு சார்பில் வெளியிட்ட முக்கிய தகவல் என்னவென்றால், முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரி பார்க்க அரசு சார்பில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிக்கலாமே,
குடும்பத் தலைவிக்கு முதலமைச்சர் வழங்கும் ரூபாய் 1000 யாருக்கு ? எங்கு சென்று விண்ணப்பிப்பது ? |
Thanglish to Tamil Typing |