தில்லையாடி வள்ளியம்மை பற்றிய தகவல்கள் | thillaiyadi valliammai life history in tamil
தில்லையாடி வள்ளியம்மை
- தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பார்க் நகரில் 1898ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி பிறந்தார்.
- இவரது தந்தை முனுசாமி முதலியார். தாய் மங்களத்தம்மாள் ஆவர். இவரது பெற்றோர்களின் பூர்வீகம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி என்ற கிராமம் ஆகும்.
- இந்தியாவிற்கு ஒருமுறை கூட வந்து பார்த்திராத நிலையில், வள்ளியம்மை இந்தியா மீது கொண்டிருந்த நாட்டு பற்று போற்றத்தக்கது.
- இவர் தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டத்தில் கலந்து கொண்டார்.
- இதனால் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறைத் தண்டனை பெற்றார். நோய்வாய்ப்பட்ட நிலையில் விடுதலையான வள்ளியம்மை தனது 16வது வயதில் 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 22 நாள் (அகவை 16) இறந்தார்.
- 1971ம் ஆண்டு இந்திய அரசு இவரது நினைவாக தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் பொது நூலகத்துடன் கூடிய தில்லையாடி வள்ளியம்மை நினைவு அரங்கை அமைத்துள்ளது.
- சிறையில் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் விடுதலையாகும்போது வெறும் எலும்பும் தோலுமாக இருந்தார்.
- அப்போது ஒருவர், நீங்கள் இந்தியராக இருந்து கஷ்டப்படுவதை விட ஏன் தென்னாப்பிரிக்கராக உங்களை பதிவு செய்யக்கூடாது?
- தேசியக் கொடி கூட இல்லாத இந்தியாவுக்காக போராடி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு,
வள்ளியம்மை, தனது காவி, வெள்ளை, பச்சை நிற சேலையை கிழித்து இதோ “எங்கள் கொடி எங்கள் தாய்நாடு” என்று முழங்கினார்.
- வள்ளியம்மை வழங்கிய வடிவிலேயே காந்தியடிகள் தேசியக் கொடியை வடிவமைத்தார்.
- 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் இவரது நினைவாக நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
நினைவு மண்டபம்
- தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.
- காந்தி தில்லையாடிக்கு 01/05/1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் இந்த நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில் ‘தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம்’ கட்டப்பட்டுள்ளது.
- இங்கு தில்லையாடி வள்ளியம்மையின் சிலை ஒன்று முன்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.
நூற்றாண்டு நினைவு
- தரங்கம்பாடி மற்றும் தில்லையாடிக்குச் செல்வதற்காக காந்தி தம் மனைவி கஸ்தூரிபாயுடன் 1915 ஏப்ரல் 29ஆம் தேதி இரவு தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் மயிலாடுதுறைக்கு வந்து, மறுநாள் அங்கிருந்து இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தரங்கம்பாடி வந்தடைந்தார்.
- தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மைதானத்தில் அவருக்கு சத்தியாகிரகவாதிகளும் பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர்.
- மே 1ஆம் தேதி தரங்கம்பாடியிலிருந்து தில்லையாடிக்கு சென்றார் காந்தி. தில்லையாடி பகுதியை சேர்ந்த பலரும் தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் அறப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
- தில்லையாடியில் காந்தி அமர்ந்து பொதுமக்களிடம் பேசிய இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது
- காந்தி தில்லையாடிக்கு வந்ததன் நூற்றாண்டு நினைவு விழா தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் 01/05/2015 அன்று நடைபெற்றது.
- தில்லையாடியில் ‘காந்தி நினைவுத் தூண்’ அருகில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவுக் கல்வெட்டு திருப்பனந்தாள் காசிமட இணை அதிபரால் திறந்துவைக்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே
சத்தியமூர்த்தி பற்றிய தகவல்கள் | Sundara Sastri Satyamurti History in Tamil | thatstamil |