HomeTNPSC GROUP 4TNPSC Group 4 Tamil Answer Key 2024

TNPSC Group 4 Tamil Answer Key 2024

THATSTAMIL-GOOGLE-NEWS

TNPSC Group 4 Tamil Answer Key 2024

பகுதி-அ (தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு)
Part-A (Tamil Eligibility-Cum-Scoring test)
வினாக்கள் : 1-100
Questions: 1-100
மொத்த மதிப்பெண்கள் : 150
Total Marks : 150

 

1.மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்

(A) கூரை வேய்ந்தனர்
(B) கூரை முடைந்தனர்
(C) கூரை செய்தனர்
(D) கூரை வனைந்தார்
(E) விடை தெரியவில்லை

 2.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(A) செப்பல் ஓசை
(B) துள்ளல் ஓசை
(C) அகவல் ஓசை
(D) ஓங்கல் ஓசை
(E) விடை தெரியவில்லை

3.எதிர்ச்சொல் அறிதல் : ஊக்கம்

(A) ஆர்வம்
(B) உற்சாகம்
(C) சோர்வு
(D) தெளிவு
(E) விடை தெரியவில்லை

4.பிரித்து எழுதுக:
‘நீளுழைப்பு’ என்பதைப் பிரித்து எழுதுக.

(A) நீளு + உழைப்பு
(B) நீண் + உழைப்பு
(C) நீண்ட + உழைப்பு
(D) நீள் + உழைப்பு
(E) விடை தெரியவில்லை

5.கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி

(A) அருளப்பன்
(C) சந்தாசாகிப்
(B) யோவான்
(D) சன்னியாசி
(E) விடை தெரியவில்லை

6. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?

(A) இயேசு
(B) மரியாள்
(C) யூதாஸ்
(D) வளன்
(E) விடை தெரியவில்லை

7. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு

(A) தொண்டை நாடு
(B) சேர நாடு
(C) பாண்டிய நாடு
(D) சோழ நாடு
(E) விடை தெரியவில்லை

8. “சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப் புலனுணர்ந் தோரே” – தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்

(A) தூது
(B) குறவஞ்சி
(C) கலம்பகம்
(D) பள்ளு
(E) விடை தெரியவில்லை

9.சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது

(A) பள்ளு
(B) தூது
(C) குறவஞ்சி
(D) கலம்பகம்
(E) விடை தெரியவில்லை

10.உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்

(A) விளக்கப்படம்
(B) கருத்துப்படம்
(C) செய்திப்படம்
(D) பிரசாரப்படம்
(E) விடை தெரியவில்லை

11.தமிழ் மொழியில் தொடக்கத்திலேயே நவீனக்கதை இலக்கியத்தினை  செழுமைப்படுத்தியவர்

(A) பி.எஸ்.ராமையா
(B) கு.ப. ராஜகோபாலன்
(C) கல்கி
(D) புதுமைப்பித்தன்
(E) விடை தெரியவில்லை

12.தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்

(A) ந. முத்துசாமி
(B) கலாப்ரியா
(C) சுரதா
(D) பாவாணர்
(E) விடை தெரியவில்லை

13. காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?

(A) பகவத் கீதை
(B) அன்பு உள்ளம்
(C) அரிச்சந்திர நாடகம்
(D) சிரவண பிதுர்பத்தி
(E) விடை தெரியவில்லை

14. பிறவினைச் சொற்களைக் கண்டறிக.

(A) நனைந்தான், படித்தான்
(B) திருத்தினான், நனைந்தான்
(C) வருவித்தான், திருத்தினான்
(D) படித்தான். வருவித்தான்
(E) விடை தெரியவில்லை

15.பின்வரும் தொடரைக் கண்டறிக. ‘பூங்குழலி யாழ் மீட்டினாள்’

(A) எதிர்மறைத் தொடர்
(B) செய்வினைத் தொடர்
(C) செய்ப்பாட்டு வினைத் தொடர்
(D) விழைவுத் தொடர்
(E) விடை தெரியவில்லை

16.விடைக்கேற்ற வினா அமைத்தல். வணிக அறிவியல் முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது.

(A) வணிக அறிவியல் என்றால் என்ன?
(B) எத்தகைய முதலீட்டைப் பெருக்குவதற்காகப் பொருள்களைக் கண்டுபிடிக்கிறது?
(C) வணிக அறிவியல் முதலீட்டைப் பெறுவதற்கு பொருள்களை கண்டுபிடிக்கிறதா?
(D) எந்த முதலீட்டை பெருக்க வேண்டும்?
(E) விடை தெரியவில்லை

17.பதினெண் என்றால்

(A) 18
(B) 20
(C) 11
(D) 17
(E) விடை தெரியவில்லை

18.‘இனியவை நாற்பது’ பாடலின் ஆசிரியர் யார்?

(A) நப்பசலையார்
(B) பூதஞ்சேந்தனார்
(C) பூங்குன்றனார்
(D) குடப்புலவியனார்
(E) விடை தெரியவில்லை

19. “பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்” குறிக்கும். இவ்வடியில் பூவையும் என்பது

(A) மயில்கள்
(B) பெண்கள்
(C) நாகணவாய்ப் பறவைகள்
(D) மரங்கொத்திப் பறவைகள்
(E) விடை தெரியவில்லை

20.உத்தர காண்டம்’ எழுதியவர்

(A) ஒட்டக்கூத்தர்
(B) கம்பா
(C) வில்லிபுத்தூரார்
(D) புகழேந்தி
(E) விடை தெரியவில்லை.

21.’திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்’ என்று கூறியவர் யார்?

(A) அண்ணல் அம்பேத்கர்
(B) முனைவர். எமினோ
(C) காந்தியடிகள்
(D) ஜி.யு. போப்
(E) விடை தெரியவில்லை

22.தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்.

(A) வாணிதாசன்
(B) உவமைக் கவிஞர் சுரதா
(C) மு. மேத்தா
(D) ஈரோடு தமிழன்பன்
(E) விடை தெரியவில்லை

23.’பகுத்தறிவுக் கவிஞர்’ என்று புகழப்படுபவர் யார்?

(A) கவியரசர் கண்ணதாசன்
(B) உடுமலை நாராயண கவி
(C) கவிச்சக்கரவர்த்தி கம்பர்
(D) கவிவேந்தர் மு. மேத்தா
(E) விடை தெரியவில்லை

24.“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்

(A) மகாகவி பாரதியார்
(B) கவிஞர் வாணிதாசன்
(C) பாவேந்தர் பாரதிதாசன்
(D) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
(E) விடை தெரியவில்லை

25.‘வா’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று

(A) வந்தாள்
(B) வந்த
(C) வந்து
(D) வந்தவர்
(E) விடை தெரியவில்லை

26.இராமன் வந்தான் – எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.

(A) வினைமுற்றுத் தொடர்
(B) எழுவாய்த் தொடர்
(C) பெயரெச்சத் தொடர்
(D) வினையெச்சத் தொடர்
(E) விடை தெரியவில்லை

27.ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது….எதுகை ஆகும்.

(A) கூழை எதுகை
(B) கீழ்க்கதுவாய் எதுகை
(C) ஒருஉ எதுகை
(D) மேற்கதுவாய் எதுகை
(E) விடை தெரியவில்லை

28. படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை

(A) இணை மோனை
(B) ஒரூஉ மோனை
(C) பொழிப்பு மோனை
(D) கூழை மோனை
(E) விடை தெரியவில்லை

29. எவ்வகை வாக்கியம் என அறிக.

பூக்களைப் பறிக்காதீர்

(A) செய்தி வாக்கியம்
(B) கட்டளை வாக்கியம்
(C) வினா வாக்கியம்
(D) பிறவினை வாக்கியம்
(E) விடை தெரியவில்லை

30.இமிழிசை – இலக்கணக் குறிப்பு அறிக.

(A) பண்புத் தொகை
(B) வினைத் தொகை
(C) வினையாலணையும் பெயர்
(D) வினைமுற்று
(E) விடை தெரியவில்லை

31.மல்லிகை சூடினாள் என்பது

(A) பண்பாகு பெயர்
(B) தொழிலாகு பெயர்
(C) பொருளாகு பெயர்
(D) காலவாகு பெயர்
(E) விடை தெரியவில்லை

32. பொருத்துக :

(a) அலெக்சாண்டர் பெயின் – 1. குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி – 2. இணைய வணிகம்
(c) ஜான் – ஷெப்பர்டு பாரன் – 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச் – 4. தானியங்கிப் பண இயந்திரம்
    (a) (b) (c) (d)
(A) 1   3   4   2
(B) 1   4   2  3
(C) 1  3   2   4
(D) 2  4  1   3
(E) விடை தெரியவில்லை

33. “தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்” என்று போற்றப்படுபவர்.

(A) சச்சிதானந்தன்
(B) ஆறுமுகநாவலர்
(C) சி.வை. தாமோதரனார்
(D) உ.வே. சாமிநாதர்
(E) விடை தெரியவில்லை

34.கூற்று 1: மாநகராட்சிக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் இராஜாஜி. கூற்று 2: அக்கூட்டத்தில் “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி. முழங்கினார்

(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 2 மட்டும் சரி
(C) கூற்று 1ம் கூற்று 2ம் சரி
(D) இரு கூற்றுகளும் தவறு
(E) விடை தெரியவில்லை

35.திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலையை” அமைத்தவர்

(A) தேவநேயப்பாவாணர்
(B) இரா. இளங்குமரனார்
(C) ம.பொ. சிவஞானம்
(D) காயிதே மில்லத்
(E) விடை தெரியவில்லை

36.இராசராச சோழனுக்கு கோயில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கோயில் எது?

(A) இராமேஸ்வரம் கோயில்
(B) பல்லவ குடைவரைக் கோயில்
(C) மதுரை மீனாட்சி கோயில்
(D) இராசசிம்மேச்சுரம் கோயில்
(E) விடை தெரியவில்லை

37.சங்க இலக்கியங்களில் ‘கரகாட்டம்’ எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

(A) குடக்கூத்து
(B) தெருக்கூத்து
(C) சக்திக்கரகம்
(D) உடுக்கை ஆட்டம்
(E) விடை தெரியவில்லை

38.“யோக சமாதி உகந்தவர் சித்தரே” என்றவர்

(A) அகத்தியர்
(B) திருமூலர்
(C) கடுவெளிச் சித்தர்
(D) பாரதியார்
(E) விடை தெரியவில்லை

39.வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்

(A) பாம்பாட்டிச் சித்தர்
(B) குதம்பைச் சித்தர்
(C) அழுகுணிச் சித்தர்
(D) கடுவெளிச் சித்தர்
(E) விடை தெரியவில்லை

40.அகர வரிசைப்படுத்துக.

கேள்வர். பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்

(A) கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், மஞ்ஞை, போத்து
(B) சாவகர், நசைஇ, நல்குவர், கேள்வர், பொளிக்கும், மஞ்ஞை, போத்து
(C) கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர். பொளிக்கும், போத்து, மஞ்ஞை
(D) கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், போத்து, மஞ்ஞை
(E) விடை தெரியவில்லை

41.தா என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்

(A) தந்து
(B) தந்த
(C) தந்தது
(D) தந்தவர்
(E) விடை தெரியவில்லை

42.வேர்ச்சொல்லை தேர்வு செய்க.

மலர் வீட்டுக்குச் சென்றாள்.

(A) சென்ற
(B) செல்ல
(C) செல்
(D) சென்று
(E) விடை தெரியவில்லை

43.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.

சூல், சூழ், சூள்

(A) கருப்பம், சுற்று, சபதம்
(B) சபதம், சுவர், தானியம்
(C) ஆலோசனை, ஆணை, வாயில்
(D) ஆணை, முற்றுகையிடு, சருமம்
(E) விடை தெரியவில்லை

44.பிழையற்ற தொடரைக் கண்டறிக.

(A) எங்களூரில் புலவர் ஒருவர் வாழ்ந்தார்
(B) எங்களூரில் புலவர் இருவர் வாழ்ந்தது
(C) எங்களூரில் பல புலவர்கள் வாழ்ந்தார்
(D) எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்
(E) விடை தெரியவில்லை

45.“பாடை மாக்கள்” என அழைக்கப்படுபவர்கள் யாவர்?

(A) சமயத் தத்துவவாதிகள்
(B) பல மொழி பேசும் மக்கள்
(C) படை வீரர்கள்
(D) வணிகர்கள்
(E) விடை தெரியவில்லை

46. பொருத்துக:

(a) மணிமேகலை 1. சேக்கிழார்
(b) சிலப்பதிகாரம் 2. சீத்தலைச்சாத்தனார்
(c) பெரியபுராணம் 3. பரஞ்சோதி முனிவர்
(d) திருவிளையாடற் புராணம் 4. இளங்கோவடிகள்
     (a) (b) (c) (d)
(A) 3   4    1   2
(B) 2   4    1  3
(C) 2   1    4  3
(D) 1  2    3  4
(E) விடை தெரியவில்லை

47.‘முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது’ என அழைக்கப்படும் காப்பியம் எது?

(A) கம்பராமாயணம்
(B) பெரியபுராணம்
(C) சீவகசிந்தாமணி
(D) சிலப்பதிகாரம்
(E) விடை தெரியவில்லை

48.“ஓங்கு தண்பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்” இவ்வடியில் நீப வனம் என்பது

(A) கடம்பவனம்
(B) உவவனம்
(C) பாலைவனம்
(D) மலர்வனம்
(E) விடை தெரியவில்லை

49.திருவரங்கத்தில் நாயக்க மன்னர் மற்றும் அவரது பட்டத்தரசியின் உருவங்கள் கம்பீரமாகக் காட்சியளிப்பது

(A) நாற்பது அடி உயரத்தில்
(B) அறுபது அடி உயரத்தில்
(C) ஆறு அடி உயரத்தில்
(D) நான்கு அடி உயரத்தில்
(E) விடை தெரியவில்லை

50. பொருத்துக:

(a) அக்ஷராப்பியாசம் 1. தாழை மடல்
(b) வித்தியாப்பியாசம் 2. கல்விப் பயிற்சி
(c) வித்தியாரம்பம் 3. எழுத்துப் பயிற்சி
(d) சீதாள பத்திரம் 4. கல்வித் தொடக்கம்
        (a) (b) (c) (d)
(A)    2   3    1   4
(B)   1   3    4   2
(C)  4   1    3   2
(D) 3   2    4   1
(E) விடை தெரியவில்லை

51.“எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு: அவற்றோடு மானமும் உண்டு” – என்று கூறிய தமிழறிஞர்

(A) மறைமலையடிகள்
(B) தேவநேயப்பாவாணர்
(C) ம.பொ. சிவஞானம்
(D) பரிதிமாற்கலைஞர்
(E) விடை தெரியவில்லை

52. இச்சொல்லின் பொருள்

நனந்தலை உலகம்

(A) அகன்ற உலகம்
(B) நீர் சூழ் உலகம்
(C) மலை சூழ் உலகம்
(D) மழை தரும் உலகம்
(E) விடை தெரியவில்லை

53.பழமொழியினை நிறைவு செய்க.

மரத்தை இலை காக்கும்

(A) மானத்தை மழை காக்கும்
(B) பயிரை குணம் காக்கும்
(C) மானத்தைப் பணம் காக்கும்
(D) உயிரைச் சொல் காக்கும்
(E) விடை தெரியவில்லை

54.மோனைச் சொல்லைக் கண்டறி.

நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!

(A) கண் – பண்ணோடு
(B) நந்தவனம் – நற்றமிழ்
(C) பண்ணோடு – வந்தாயோ
(D) திறந்து – நற்றமிழ்
(E) விடை தெரியவில்லை

55. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க

‘நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல’

(A) பயனற்ற செயல்
(B) தற்செயல் நிகழ்வு
(C) தடையின்றி மிகுதியாக
(D) ஒற்றுமையின்மை
(E) விடை தெரியவில்லை

56.பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்

(A) வலிமையற்றவர்
(B) கல்லாதவர்
(C) ஒழுக்கமற்றவர்
(D) அன்பில்லாதவர்
(E) விடை தெரியவில்லை

57.திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்

(A) தீக்காயம் பட்டவர்
(B) தீயினால் சுட்டவர்
(C) பொருளைக் காக்காதவர்
(D) நாவைக் காக்காதவர்
(E) விடை தெரியவில்லை

58.நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?

(A) உவமையணி
(B) பிறிதுமொழிதல் அணி
(C) வேற்றுமையணி
(D) தன்மையணி
(E) விடை தெரியவில்லை

59.கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்

(A) வெற்றி வேற்கை
(B) அருங்கலச்செப்பு
(C) நன்னெறி
(D) ஞானக்குறள்
(E) விடை தெரியவில்லை

60.‘புலமைப் பெருங்கடல்’ என அழைக்கப் பெற்றவர்.

(A) உ.வே. சாமிநாதர்
(B) மு. வரதராசனார்
(C) வ.சுப. மாணிக்கனார்
(D) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
(E) விடை தெரியவில்லை

61.காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர். 

(A) மு. வரதராசனார்
(B) ம.பொ. சிவஞானம்
(C) திரு.வி. கலியாணசுந்தரனார்
(D) சி.என். அண்ணாதுரை
(E) விடை தெரியவில்லை

62.தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி – எனக் கூறியவர்

(A) அகத்தியலிங்கம்
(B) ஹோக்கன்
(C) கால்டுவெல்
(D) பிரான்ஸிஸ் எல்லிஸ்
(E) விடை தெரியவில்லை

63.“தாதாசாகேப் பால்கே” விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

(A) 1965
(B) 1969
(C) 1990
(D) 1996
(E) விடை தெரியவில்லை

64.“நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றவர்

(A) சங்கரதாசு சுவாமிகள்
(B) ந.முத்துசாமி
(C) பம்மல் சம்பந்த முதலியார்
(D) கோமல் சுவாமிநாதன்
(E) விடை தெரியவில்லை

65.குந்தி தின்றால் குன்றும் கரையும் என்னும் பழமொழி உணர்த்தும் பொருளை எழுது.

(A) பயனற்ற சொல்
(B) உழைக்காதவன் செல்வம் அழியும்
(C) எளிதில் மனதில் பதித்தல்
(D) தற்செயல் நிகழ்வு
(E) விடை தெரியவில்லை

66.அகர வரிசைப்படுத்துக.

இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.

படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி

(A) தவில், படகம், கணப்பறை, நாகசுரம், மகுடி, உடுக்கை
(B) உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி
(C) படகம், உடுக்கை, மகுடி, நாகசுரம், கணப்பறை, தவில்
(D) நாகசுரம், கணப்பறை, உடுக்கை, தவில், மகுடி, படகம்
(E) விடை தெரியவில்லை

67.பாரதியார் பாடிய பாடல்களுள் ஒன்று

(A) குடும்ப விளக்கு
(B) மருமக்கள் வழி மாண்மியம்
(C) குயில் பாட்டு
(D) சீறாப்புராணம்
(E) விடை தெரியவில்லை

68.‘வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? …………. நாலு
எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?

(A) சொக்கநாதர் பலபட்டடையார்
(B) அழகிய சொக்கநாதர்
(C) கவி காளமேகம்
(D) குமரேசர்
(E) விடை தெரியவில்லை

69. சரியானதைக் கண்டறிக.

(I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
(II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
(III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
(IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.

(A) (I) மற்றும் (II)
(B) (I) (II) மற்றும் (III)
(C) (I), (II), (IV) சரி
(D) அனைத்தும் சரி
(E) விடை தெரியவில்லை

70. கீழ்க்காணும் சொல்வழக்கினை வரிசைப்படுத்துக.

(I) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
(II) மங்கலமான சொற்களை மாற்றி மங்கலம் இல்லாச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
(III) ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறையே இடக்கரடக்கல், மங்கலம் ஆகியனவாகும்.

(A) (I) சரி (II) சரி (III) தவறு
(B) (I) சரி (II) தவறு (III) சரி
(C) (I) சரி (II) தவறு (III) தவறு
(D) (I) தவறு (II) சரி (III) சரி
(E) விடை தெரியவில்லை

71. வெண்பா-வுக்குரிய ஓசை

(A) துள்ளல்
(B) தூங்கல்
(C) அகவல்
(D) செப்பல்
(E) விடை தெரியவில்லை

72. பொருத்துக:

(a) முல்லைப்பாட்டு 1. கண்ணதாசன்
(b) காசிக்காண்டம் 2. இளங்கோவடிகள்
(c) சிலப்பதிகாரம் 3. நப்பூதனார்
(d) காலக்கணிதம் 4. அதிவீரராமப்பாண்டியர்

        (a) (b) (c) (d)
(A)    1   2    3   4
(B)    3   4    2  1
(C)   2    4   3  1
(D)  2     3  1   4
(E) விடை தெரியவில்லை

73.படைப்பாளன் தன் கருத்துக்களை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம்

(A) நாடகம்
(B) கதை
(C) கவிதை
(D) கட்டுரை
(E) விடை தெரியவில்லை

74.தேர்ந்தெடுத்து எழுதுக.

‘மக்கள் கவிஞர்’ என்றழைக்கப்படுபவர் ——
‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்றழைக்கப்படுவர் —– முறையே.

(A) வாணிதாசன் பெருஞ்சித்திரனார்
(B) பாரதியார் – கண்ணதாசன்
(C) ந. பிச்சமூர்த்தி – மு. மேத்தா
(D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -உடுமலை நாராயண கவி
(E) விடை தெரியவில்லை

75.தவறான தொடரைத் தேர்ந்தெடுக்க.

(A) ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் தஞ்சை சரசுவதி மகால் நூலகமாகும்
(B) இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகும்
(C) உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கன்னிமாரா நூலகம்
(D) கொல்கத்தாவின் தேசிய நூலகமே இந்தியாவின் பெரிய நூலகமாகும்
(E) விடை தெரியவில்லை

76. விடைக்கேற்ற வினா அமைக்க.

மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.

(A) தல புராணங்கள் என்றால் என்ன?
(B) தல புராணங்கள் எத்தனை வகைப்படும்?
(C) மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களை எப்படி பாடினார்?
(D) தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
(E) விடை தெரியவில்லை

77.செந்தமிழ் இலக்கணக் குறிப்பு தருக.

(A) ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
(B) இரண்டாம் வேற்றுமைத் தொகை
(C) பண்புத் தொகை
(D) வினைத் தொகை
(E) விடை தெரியவில்லை

78. ‘காவ்ய தரிசனம்’ எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.

(A) மாறனலங்காரம்
(B) தண்டியலங்காரம்
(C) திவாகர நிகண்டு
(D) பிங்கல நிகண்டு
(E) விடை தெரியவில்லை

79. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.

(A) வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
(B) இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
(C) இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
(D) வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
(E) விடை தெரியவில்லை

80.கரைபொரு – இலக்கணக் குறிப்பு வரைக.

(A) ஆறாம் வேற்றுமை தொகை
(B) இரண்டாம் வேற்றுமை தொகை
(C) உவமைத் தொகை
(D) பண்புத் தொகை
(E) விடை தெரியவில்லை

81.புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

(A) திரு. கால்டுவெல்
(B) திரு. ஜி.யு. போப்
(C) திரு. வீரமாமுனிவர்
(D) திரு. சீகன்பால்கு
(E) விடை தெரியவில்லை

82. “வலவன் ஏவா வானூர்தி” – எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்

(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) குறுந்தொகை
(E) விடை தெரியவில்லை

83. புறநானூறு – இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of poems from Classical Tamil, the Purananuru தலைப்பில் மொழிபெயர்த்தவர்

(A) டாக்டர். கால்டுவெல்
(B) ஜி.யு. போப்
(C) பெர்சிவல் பாதிரியார்
(D) ஜார்ஜ் எல். ஹார்ட்
(E) விடை தெரியவில்லை

84. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது

(A) அண்ணா நூற்றாண்டு நூலகம்
(B) திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
(C) கன்னிமாரா நூலகம்
(D) தஞ்சை சரசுவதி மகால் நூலகம்
(E) விடை தெரியவில்லை

85. மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி

(A) கீழ்க்காய்நெல்லி
(B) கீழாநெல்லி
(C) கீழ்வாய்நெல்லி
(D) இவை மூன்றும்
(E) விடை தெரியவில்லை

86.உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.

(A) அலைவாய்க் கரையில்
(B) கரிப்பு மணிகள்
(C) ஒரு கடலோர கிராமம்
(D) சேற்றில் மனிதர்கள்
(E) விடை தெரியவில்லை

87.‘தினத்தந்தி’ நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்

(A) மா. இராமலிங்கம்
(B) ப. சிங்காரம்
(C) ஜெயகாந்தன்
(D) பிச்சாமூர்த்தி
(E) விடை தெரியவில்லை

88.முத்துராமலிங்கத்தேவரை ‘தேசியம் காத்த செம்மல்’ என்று பாராட்டியவர் யார்?

(A) ப. ஜீவானந்தம்
(B) திரு.வி. கலியாணசுந்தரனார்
(C) காமராசர்
(D) அறிஞர். அண்ணா
(E) விடை தெரியவில்லை

89.“மனக்குரங்கு” என்னும் சொல்லிற்கு இலக்கணக் குறிப்புத் தருக.

(A) உருவகம்
(B) வினையெச்சம்
(C) உவமைத்தொகை
(D) உரிச்சொற்றொடர்
(E) விடை தெரியவில்லை

90.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(A) கடல்
(B) ஆழி
(C) பரவை
(D) ஆறு
(E) விடை தெரியவில்லை

91.பிழை திருத்தம் செய்க.

(A) மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
(B) மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
(C) மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்
(D) மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
(E) விடை தெரியவில்லை

92.பிழை திருத்தம் செய்க.

(A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
(B) வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
(C) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
(D) வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
(E) விடை தெரியவில்லை

93.ஐ – எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

(A) அரசன்
(B) வீரன்
(C) ஒற்றன்
(D) தலைவன்
(E) விடை தெரியவில்லை

94.Fiction என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்

(A) வனைவு
(B) புனைவு
(C) புதுமை
(D) வளைவு
(E) விடை தெரியவில்லை

95.“கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்” – பாரதியார்.
– இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக.

(A) திணை வழுவமைதி
(B) பால் வழுவமைதி
(C) மரபு வழுவமைதி
(D) இட வழுவமைதி
(E) விடை தெரியவில்லை

96.மணிமொழிக்கோவை -அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.

(A) நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை
(B) இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது
(C) இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை
(D) பழமொழி, ஏலாதி, ஆசாரக்கோவை
(E) விடை தெரியவில்லை

97.’திருவிருத்தம்’ என்ற நூலின் ஆசிரியர்

(A) நம்மாழ்வார்
(B) திருப்பாணாழ்வார்
(C) மதுரகவியாழ்வார்
(D) பேயாழ்வார்
(E) விடை தெரியவில்லை

98.‘திருக்கேதாரப்’ பதிகத்தைப் பாடியவர் யார்?

(A) அப்பர்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
(E) விடை தெரியவில்லை

99. மார்கழித் திங்களில் திருமால் கோயில்களிலும் வீடுகளிலும் ஓதப்படும் பாடல்

(A) திருப்பாவை
(B) திருவாய்மொழி
(C) நாச்சியார் திருமொழி
(D) தேவாரம்
(E) விடை தெரியவில்லை

100. ‘தமிழ்ப் பெருங்காவலர்’ என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?

(A) மறைமலையடிகள்
(C) தேவநேயப்பாவாணர்
(E) விடை தெரிபவில்லை
(B) பேரா. தனிநாயகம்
(D) உ.வே. சாமிநாதர்

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments