TNPSC GROUP 4 GENERAL TAMIL TEST
வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் அடைமொழியால் குறிப்பிடப்படும் சான்றோர்கள் பொதுத்தமிழ் தேர்வு 1 கொடுக்கப்பட்டுள்ளது.
அடைமொழியால் குறிப்பிடப்படும் சான்றோர்கள் பொதுத்தமிழ் தேர்வு 1
1. ‘தமிழ்நாட்டு பெர்னாட்ஷா’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) ஜெயகாந்தன்
ஆ) அறிஞர் அண்ணா
இ) திரு.வி.க
ஈ) மு.வரதராசனார்
விடை: ஈ
2. ‘தமிழ் தியாகப்பர்’ என போற்றப்படும் நபர் யார்?
அ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
ஆ) இலக்குமணப்பிள்ளை
இ) உடுமலை நாராயணகவி
ஈ) பாபநாசம் சிவன்
விடை: ஈ
3. ‘ஆளுடைய பிள்ளை’ எனப்படுபவர்?
அ) கவிஞர் வாலி
ஆ) திருநாவுக்கரசர்
இ) வ.உ.சிதம்பரம் பிள்ளை
ஈ) திருஞானசம்பந்தர்
விடை: ஈ
4. ‘இறைவனின் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) மாணிக்கவாசகர்
ஆ) சுந்தரர்
இ) திருநாவுக்கரசர்
ஈ) திருஞானசம்பந்தர்
விடை: ஈ
5. ‘தென்னாட்டின் பெர்னாட்ஷா’ என்று புகழப்பட்டவர் யார்?
அ) ராஜாஜி
ஆ) அறிஞர் அண்ணா
இ) திரு.வி.க
ஈ) மு. வரதராசனார்
விடை: ஆ
6. ‘செல்லிதாசன்’ எனப்படுபவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) திரு.வி.க
ஈ) மு.மேத்தா
விடை: அ
7. ‘மூதறிஞர்’ எனப்படுபவர்?
அ) ராஜாஜி
ஆ) பெரியார்
இ) அறிஞர் அண்ணா
ஈ) காமராசர்
விடை: அ
8. பேரறிஞர் எனப்படுபவர்?
அ) அறிஞர் அண்ணா
ஆ) ராஜாஜி
இ) பெரியார்
ஈ) காமராஜர்
விடை: அ
9. ‘தத்துவ போதக சுவாமி’ எனப்படுபவர்?
அ) எல்லிஸ்
ஆ) ஜி.யு.போப்
இ) ஜோசப் பெஸ்கி
ஈ) ராபர்ட். டி. நொபிலி
விடை: ஈ
10. ‘பகுத்தறிவு பகலவன்’ எனப்படுபவர்?
அ) பெரியார்
ஆ) அறிஞர் அண்ணா
இ) காமராசர்
ஈ) ராஜாஜி
விடை: அ
11. ‘பாட்டுக்கொரு புலவன்’ எனப்படுபவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
விடை: அ
12. ‘உரைநடையின் தந்தை’ எனப்படுபவர்?
அ) மீனாட்சி சுந்தரனார்
ஆ) மறைமலை அடிகள்
இ) தேவநேய பாவாணர்
ஈ) வீரமாமுனிவர்
விடை: ஈ
13. ‘உரைநடையின் வேந்தர்’ எனப்படுபவர்?
அ) ஆறுமுக நாவலர்
ஆ) பரிமேலழகர்
இ) வீரமாமுனிவர்
ஈ) நக்கீரர்
விடை: அ
14. ஒப்பிலக்கண தந்தை எனப்படுபவர்?
அ) ஆறுமுக நாவலர்
ஆ) வீரமாமுனிவர்
இ) கால்டுவெல்
ஈ) ஜி.யூ.போப்
விடை: இ
15. ‘தமிழ் நாடகத்தின் தந்தை’ எனப்படுபவர்?
அ) சுஜாதா
ஆ) பம்மல் சம்பந்த முதலியார்
இ) டி.கே.சண்முகம்
ஈ) ஆர்.எஸ்.மனோகர்
விடை: ஆ
16. ‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ எனப்படுபவர்?
அ) பொன்னம்பல அடிகளார்
ஆ) குன்றக்குடி அடிகளார்
இ) பரிதிமாற் கலைஞர்
ஈ) மறைமலை அடிகளார்
விடை: ஈ
17. ‘தமிழ் நாடக தலைமை ஆசிரியர்’ எனப்படுபவர்?
அ) அறிஞர் அண்ணா
ஆ) சங்கரதாஸ் சுவாமிகள்
இ) அவ்வை சண்முகம்
ஈ) பாரதிதாசன்
விடை: ஆ
18. ‘கவியோகி’ எனப்படுபவர்?
அ) சுப்ரமணிய பாரதியார்
ஆ) சுத்தானந்த பாரதியார்
இ) கண்ணதாசன்
ஈ) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
விடை: ஆ
19. ‘கவிக்குயில்’ எனப்படுபவர்?
அ) பாரதிதாசன்
ஆ) கவிமணி
இ) பாரதியார்
ஈ) சரோஜினி நாயுடு
விடை: ஈ
20. ‘திவ்ய கவி’ எனப்படுபவர்?
அ) கம்பர்
ஆ) பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இ) பாரதியார்
ஈ) கவிமணி
விடை: ஆ
21. ‘ஆசுகவி’ எனப்படுபவர்?
அ) வீரகவிராயர்
ஆ) ஔவையார்
இ) திருவள்ளுவர்
ஈ) மாணிக்கவாசகர்
விடை: அ
22. ‘காந்திய கவி’ எனப்படுபவர்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) ராமலிங்கம் பிள்ளை
ஈ) திரு.வி.க
விடை: இ
23. ‘கவிவலவ’ எனப்படுபவர்?
அ) சேக்கிழார்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) புகழேந்தி
ஈ) திருவள்ளுவர்
விடை: அ
24. கவிஞரேறு மற்றும் பாவலர் மணி எனப்படுபவர்?
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) பாரதியார்
ஈ) கண்ணதாசன்
விடை: ஆ
25. ‘திரைக்கவித் திலகம்’ எனப்படுபவர்?
அ) கண்ணதாசன்
ஆ) வைரமுத்து
இ) மருதகாசி
ஈ) வாலி
விடை: இ
26. ‘கவியரசு’ எனப்படுபவர்?
அ) மருதகாசி
ஆ) வாணிதாசன்
இ) கண்ணதாசன்
ஈ) சுரதா
விடை: இ
27. இசைக்குயில் எனப்படுபவர்?
அ) சொர்ணலதா
ஆ) எம்.எஸ். சுப்புலட்சுமி
இ) சித்ரா
ஈ) ஜானகி
விடை: ஆ
28. ‘புதுவைக்குயில்’ எனப்படுபவர்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ணதாசன்
ஈ) வாணிதாசன்
விடை: ஆ
29. ‘பகுத்தறிவு கவிராயர்’ எனப்படுபவர்?
அ) நாமக்கல் வெ. இராமலிங்கனார்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சுரதா
ஈ) இராமச்சந்திர கவிராயர்
விடை: ஆ
30. ‘திருமுறை கண்ட சோழன்’ எனப்படுபவர்?
அ) முதலாம் ராஜேந்திரன்
ஆ) முதலாம் ராஜராஜன்
இ) முதலாம் குலோத்துங்கன்
ஈ) கரிகால் சோழன்
விடை: ஆ
31. ‘வைக்கம் வீரர்’ எனப்படுபவர்?
அ) காமராசர்
ஆ) அறிஞர் அண்ணா
இ) பெரியார்
ஈ) ராஜாஜி
விடை: இ
32. ‘நாமக்கல் கவிஞர்’ எனப்படுபவர்?
அ) பாரதிதாசன்
ஆ) வெ.இராமலிங்கம் பிள்ளை
இ) தமிழன்பன்
ஈ) இராமலிங்க அடிகள்
விடை: ஆ
33. தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார்?
அ) தர்மாம்பாள்
ஆ) ராமாமிருதம் அம்மையார்
இ) அசலாம்பிகை அம்மையார்
ஈ) நீலாம்பிகை அம்மையார்
விடை: ஆ
34. ‘கவிக்கோ’ என்பவர் யார்?
அ) அப்துல் ரகுமான்
ஆ) மு.மேத்தா
இ) சுரதா
ஈ) தாராபாரதி
விடை: அ
35. ‘காலா காந்தி’ என அழைக்கப்பட்டவர் யார்?
அ) ராஜாஜி
ஆ) அறிஞர் அண்ணா
இ) காமராஜர்
ஈ) எம்.ஜி.ஆர்
விடை: இ
36. ‘அண்ணாமலை கவிராஜன்’ என்று சிறப்பிக்கப்படும் நபர் யார்?
அ) அண்ணாமலை செட்டியார்
ஆ) அண்ணாமலை ரெட்டியார்
இ) சின்ன அண்ணாமலை
ஈ) அழ. வள்ளியப்பா
விடை: ஆ
37. ‘ஆளுடை நம்பி’ எனப்படுபவர்?
அ) திருநாவுக்கரசர்
ஆ) சுந்தரர்
இ) மாணிக்கவாசகர்
ஈ) திருஞானசம்பந்தர்
விடை: ஆ
38. ‘ஆட்சி மொழிக் காவலர்’ எனப்படுபவர்?
அ) மு.வரதராசனார்
ஆ) டி.கே.சண்முகம்
இ) சி.இராமலிங்கனார்
ஈ) சி.சுசெல்லப்பா
விடை: இ
39. கபிலரை ‘நல்லிசை கபிலன்’ என்று போற்றியவர்
அ) இளங்கீரனார்
ஆ) நக்கீரர்
இ) நப்பசலையார்
ஈ) பெருங்குன்றூர் கிழார்
விடை: ஈ
40. ‘புலவரேறு’ என்று அழைக்கப்பட்டவர்?
அ) கவிமணி
ஆ) அ.வரதநஞ்சையப் பிள்ளை
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) ஒட்டக்கூத்தர்
விடை: ஆ
41. கபிலரை ‘வாய்மொழிக் கபிலர்’ என்று போற்றியவர்?
அ) இளங்கீரனார்
ஆ) நக்கீரர்
இ) நப்பசலையார்
ஈ) பெருங்குன்றூர் கிழார்
விடை: ஆ
42. ‘பாட்டாளிகளின் கவிஞர்’ என்று அழைக்கப்படுபவர்?
அ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆ) உடுமலை நாராயணகவி
இ) சி.சு.செல்லப்பா
ஈ) பாரதிதாசன்
விடை: அ
43. ‘விஷ்ணு சித்தர்’ என்பது எந்த ஆழ்வார் உடைய இயற்பெயர்?
அ) பேயாழ்வார்
ஆ) பூதத்தாழ்வார்
இ) பெரியாழ்வார்
ஈ) பொய்கையாழ்வார்
விடை: இ
44. வெண்பாவிற்கு ———-
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) கம்பர்
இ) புகழேந்தி
ஈ) ஒட்டக்கூத்தர்
விடை: இ
45. திருவாதவூரார் என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) திருஞானசம்பந்தர்
ஆ) மாணிக்கவாசகர்
இ) அப்பூதி அடிகள்
ஈ) திருநாவுக்கரசர்
விடை: ஆ
46. ‘சிறுகதை மன்னர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) ஜெயகாந்தன்
ஆ) சி.சு.செல்லப்பா
இ) புதுமைப்பித்தன்
ஈ) கு.ப. ராஜகோபாலன்
விடை: இ
47. ‘பக்திசாரர்’ என்பது யாருடைய சிறப்பு பெயர்?
அ) பெரியாழ்வார்
ஆ) குலசேகர ஆழ்வார்
இ) நம்மாழ்வார்
ஈ) திருமழிசையாழ்வார்
விடை: ஈ
48. ‘திருக்குறளார்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) திருவள்ளுவர்
ஆ) சுரதா
இ) வீரகவிராயர்
ஈ) வி.முனுசாமி
விடை: ஈ
49. ‘ஆட்சிமொழிக் காவலர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) சுரதா
ஆ) பாரதியார்
இ) பாரதிதாசன்
ஈ) வெ.ராமலிங்கனார்
விடை: ஈ
50. ‘வர்மன்’ என்ற அடைமொழியால் குறிக்கப்படும் மன்னர்கள் யார்?
அ) பாண்டியர்கள்
ஆ) சேரர்கள்
இ) பல்லவர்கள்
ஈ) சோழர்கள்
விடை: இ
51. ‘செம்பியர்’ என்ற சிறப்பு பெயர் எந்த மன்னர்களை குறிக்கிறது?
அ) சேரர்கள்
ஆ) சோழர்கள்
இ) பல்லவர்கள்
ஈ) பாண்டியர்கள்
விடை: ஆ
52. கபிலரை ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்’ என்று போற்றியவர் யார்?
அ) நப்பசலையார்
ஆ) நக்கீரர்
இ) இளங்கீரனார்
ஈ) பெருங்குன்றூர் கிழார்
விடை: இ
53. ‘ஆளுடைய அரசு’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) மாணிக்கவாசகர்
ஆ) சுந்தரர்
இ) திருஞானசம்பந்தர்
ஈ) அப்பர்
விடை: ஈ
54. ‘இக்கால அவ்வையார்’ என்று திரு.வி.க அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
அ) அஞ்சலை அம்மாள்
ஆ) நீலாம்பிகை அம்மையார்
இ) அசலாம்பிகை அம்மையார்
ஈ) அம்புஜத்தம்மாள்
விடை: இ
55. சடகோபன், பராங்குசன், மாறன் என்ற சிறப்பு பெயர்கள் யாரைக் குறிக்கிறது?
அ) நம்மாழ்வார்
ஆ) பெரியாழ்வார்
இ) திருப்பாணாழ்வார்
ஈ) தொண்டரடி பொடியாழ்வார்
விடை: அ
56. ‘பொய்யாநாவிற் கபிலன்’ என்று கபிலரை பாராட்டுபவர் யார்?
அ) நக்கீரர்
ஆ) நப்பசலையார்
இ) நம்மாழ்வார்
ஈ) கம்பர்
விடை: ஆ
57. ‘கவிராட்சசன்’ என்று பாராட்டப்படுபவர் யார்?
அ) காளமேகப் புலவர்
ஆ) கம்பர்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) பாரதியார்
விடை: இ
58. ‘உலக உத்தமர்’ என்று பாராட்டப்படுபவர் யார்?
அ) காமராஜர்
ஆ) தமிழண்ணல்
இ) மகாத்மா காந்தி
ஈ) ஜவகர்லால் நேரு
விடை: இ
59. ‘தேசியம் காத்த செம்மல்’ என்று பாராட்டப்படுபவர் யார்?
அ) முத்துராமலிங்க தேவர்
ஆ) பெரியார்
இ) பேரறிஞர் அண்ணா
ஈ) காமராஜர்
விடை: அ
60. ‘தென்னாட்டுத் திலகர்’ எனப்படுபவர் யார்?
அ) வ.உ.சி
ஆ) பாரதியார்
இ) பகத்சிங்
ஈ) முத்துராமலிங்கத் தேவர்
விடை: அ
61.’ரசிகமணி’ என்னும் அடைமொழிக்கு உரியவர் யார்?
அ) டி.கே.சிதம்பரநாதன்
ஆ) சுரதா
இ) திரு.வி.க
ஈ) ராமலிங்கனார்
விடை: அ
62. ‘சிறுகதை வேந்தன்’ எனப்படுபவர்?
அ) புதுமைப்பித்தன்
ஆ) மருதகாசி
இ) ராஜகோபாலன்
ஈ) வாலி
விடை: அ
63. ‘திராவிட சிசு’ என்று ஆதிசங்கரர் யாரை போற்றி பாடியுள்ளார்?
அ) அப்பர்
ஆ) சுந்தரர்
இ) திருஞானசம்பந்தர்
ஈ) மாணிக்கவாசகர்
விடை: இ
64. ‘இஸ்லாமிய தாயுமானவர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) நபிகள் நாயகம்
ஆ) அபுபக்கர்
இ) குணங்குடி மஸ்தான்
ஈ) வீரமாமுனிவர்
விடை: இ
65. ‘வரலாற்றுப் புதினத்தின் தந்தை’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
அ) கல்கி
ஆ) அகிலன்
இ) உடுமலை நாராயணகவி
ஈ) ஜெயகாந்தன்
விடை: அ
66. ‘நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர்’ என பாராட்டப்படுபவர் யார்?
அ) பொய்கையார்
ஆ) அரசஞ்சண்முகனார்
இ) கல்லாடனார்
ஈ) சேனாவரையர்
விடை: ஆ
67. ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’ யார்?
அ) பாரதிதாசன்
ஆ) கண்ணதாசன்
இ) பாரதியார்
ஈ) வைரமுத்து
விடை: இ
68. ‘விப்ர நாராயணர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) தொண்டரடி பொடியாழ்வார்
ஆ) நம்மாழ்வார்
இ) திருமால்
ஈ) சிவபெருமான்
விடை: அ
69. ‘நாச்சியார்’ என்ற அடைமொழி யாரைக் குறிக்கிறது?
அ) ஆண்டாள்
ஆ) காரைக்கால் அம்மையார்
இ) வேலு நாச்சியார்
ஈ) நப்பசலையார்
விடை: அ
70. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்?
அ) தாயுமானவர்
ஆ) திருமூலர்
இ) ராமலிங்க அடிகள்
ஈ) பாரதியார்
விடை: ஆ
71. ‘உரையாசிரிய சக்கரவர்த்தி’ எனப் போற்றப்படுபவர் யார்?
அ) கதிரேசன் செட்டியார்
ஆ) மறைமலை அடிகள்
இ) வீரமாமுனிவர்
ஈ) கோபால கிருஷ்ணமாச்சாரி
விடை: ஈ
72. ‘உச்சிமேற்கொள் புலவர்’ எனப்படுபவர்?
அ) மணக்குடவர்
ஆ) காக்கை பாடினியார்
இ) இளம்பூரணார்
ஈ) நச்சினார்க்கினியர்
விடை: ஈ
73. ‘புதுநெறி கண்ட புலவர்’ என்று பாரதியாரால் போற்றப்படுபவர் யார்?
அ) தாயுமானவர்
ஆ) வள்ளலார்
இ) அருணகிரிநாதர்
ஈ) பட்டினத்தார்
விடை: ஆ
74. ‘வன்றொண்டன்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
அ) திருநாவுக்கரசர்
ஆ) சுந்தரர்
இ) மாணிக்கவாசகர்
ஈ) திருஞானசம்பந்தர்
விடை: ஆ
75. ‘மண் தேய்த்த புகழினான்’ என சுட்டபடுபவன் யார்?
அ) அனுமன்
ஆ) சிவபெருமான்
இ) ராமன்
ஈ) பரதன்
விடை: அ
Read Also,
TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor |
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor |
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online |