TNPSC Group1 Mains Polity 2019 Questions Tamil and English
INDIAN POLITY AND EMERGING POLITICAL TRENDS ACROSS THE WORLD AFFECTING INDIA
இந்திய அரசியலமைப்பு மற்றும் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமைகளின் தாக்கம்
SECTION – A
Note:
i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.
Answer not exceeding 150 words each.
ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்.
Each question carries ten marks
iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Answer any four questions out of five questions.
(4×10 = 40)
1) இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு மாநிலத்திற்கு ஒரு உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கூறுகிறது. அதே நேரத்தில் ஏழாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1956 ன் கீழ் ஒன்று அல்லது இரண்டு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு சேர்த்து ஒரு உயர்நீதி மன்றம் அமையலாம் என்று கூறுகிறது.ஆனால் ஒரு மாநிலத்திற்கு ஒரு உயர்நீதிமன்றம் அமைந்தால் நல்லது. விவாதி.
The Constitution of India provides for a high court for each state, but the seventh amendment act of 1956 Authorised for common High Court for two or more states and a Union Territory. Now, there are only 24 High Courts in the Country. It will be better if each state has a High Court – Comment.
2) சுதந்திரம் பெற்றபோது மொழிவாரி மாகாணங்கள் அமைப்பது தொடர்பாக திரு.தார் குழுவின் அறிக்கையை விவரி.
Describe the Dhar Commission report regarding Linguistic Province formation at the time of Independence.
3) இந்திய ஜனாதிபதியின் மீதான அரசியல் சாசனக் கட்டுப்பாடுகளைப் பற்றி விவாதிக்கவும்.
Discuss the Constitutional Limitations on the Powers of the President of India.
4) இந்தியாவின் அண்டை நாடுகள் (Neighbourhood) பற்றிய வெளியுறவுக் கொள்கையைப் பற்றி விரிவாக விளக்குக.
India’s Neighbourhood foreign policy in detail.
5) பாராளுமன்ற ஜனநாயக அரசாங்க அமைப்பு முறை மகாத்மா காந்திஜியினுடைய “சுயராஜ்ஜிய பாராளுமன்ற முறை” எனும் கருத்துடன் வேறுபட்டுள்ளதா என்பதை பகுப்பாய்க.
Whether the Parliamentary democratic system of Government is in contrast with Gandhiji’s notion of “Parliamentary Swaraj System” of Government? Analyse.
SECTION – B
Note:
i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.
Answer not exceeding 250 words each.
ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்.
Each question carries fifteen marks.
ⅲ) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Answer any four questions out of five questions.
(4×15 = 60)
6) மாநிலத்தில் உயர்நீதிமன்றம் என்பது விரிவான மற்றும் செயல்வினைவுடைய உச்சநிலை மேல்முறையீட்டு அதிகாரங்களை பெற்ற நீதிமன்றம் ஆகும்.விளக்கக் குறிப்பு தருக.
The High Court is the highest court of Appeal in the state, vested with quite extensive and effective powers. Comment.
7) அனைத்து அரசியல் சார்ந்த அமைப்புகள் மீதும் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய பாராளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது இந்த வாக்கியத்தின் அடிப்படையில் இந்திய பாராளுமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகாரங்களை வெளிக்கொணர்க.
The Indian Parliament alone possesses legislative supremacy and thereby ultimate powers over all political bodies in India. In light of the above statement bring out the composition and powers of the Indian Parliament.
8) நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் முதன்மை வாய்ந்த கொள்கை சிந்தனை கூடமாகும். இந்நிறுவனம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான இலக்கு மற்றும் கொள்கை உள்ளீடுகள் மற்றுமல்லாது தொழில் நுட்பம் தொடர்புடைய ஆலோசனை வழங்குகிறது விளக்குக.
NITI Aayog is the Premier policy “Think Tank” of the Government of India providing directional and policy inputs and relevant technical advice to the Centre and States. Explain.
9) முதல் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1951ன் கீழ் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மூன்று முக்கிய திருத்தங்கள் அன்றைய கட்டத்தில் கட்டமைக்கப்பட்ட தேசிய நிர்மாணப் பணிகளோடு உள்ளிணைக்கப்பட்டதாகவே இருந்தது. இக்கூற்றினை விரிவாக ஆராய்க.
The three main amendments to the Indian constitution under the first amendment Act 1951 made the Constitution intrinsically linked with three different aspects of the National-Building project in India at that time – Explore this statement elaborately.
10) இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்ற நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களிலிருந்து தனித்து திகழ்வதற்கான சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இவற்றை உரிய உதாரணங்களோடு விவாதிக்கவும்.
The Constitution of India is remarkable for many outstanding features which distinguishes it from other constitutions. Discuss with suitable examples.
Read Also,
TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor |
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor |
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online |