டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வாழ்க்கை வரலாறு | Dr.Muthulakshmi Reddy Life History in Tamil
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜுலை 30, 1886ம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார். இவரே இந்தியாவின் முதல் பெண் மருத்துவராவார்.
- 1923ம் ஆண்டு இவரது தங்கை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் புற்று நோயை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சபதம் மேற்கொண்டார்.
- எனவே 1949-ம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண மருத்துவமனையை தொடங்கினார். இவரது சீறிய முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
- இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த மருத்துவமனைக்கான அடிக்கலை நாட்டினார்.
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசியல், மருத்துவம் மட்டுமின்றி சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.
- தமிழ்நாட்டில் காணப்பட்ட கொடிய பழக்கமான தேவதாசி முறையை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
- தேவதாசி முறை ஒழிப்பில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக, 1929ம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
- இவரது முயற்சியில் விளைவாக நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.
- 1930ஆம் ஆண்டு பூனாவில் அனைத்திந்திய பெண்கள் மாநாட்டை நடத்தினார். 1933 முதல் 1947வரை, இடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்கத் தலைவியாக இருந்தார்.
- ஆதரவற்றவர்களுக்கு – மறுவாழ்வு தரும் பொருட்டு அவ்வை இல்லம் என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார்.
- இவர் 1968ம் ஆண்டு தனது 82வது வயதில் இந்த உலக வாழ்வைத் துறந்தார்.
தமிழ்ப் பணிகள்
- இந்தி மொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார்.
- மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான ‘ஸ்திரீ தருமம்’ என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.
சமூகப்பணி
- 1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார்.
- அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
- அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
- 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுகளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
- அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
- அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி ரெட்டி.
- சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
- இந்தியாவின் இரண்டாவது பெரிய புற்றுநோய் மருத்துவமனையான இது சுமார் 80000 நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளது.
விருதுகள்
- முத்துலட்சுமி ரெட்டியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்தது.
இதையும் படிக்கலாமே
காமராஜர் பற்றிய தகவல்கள் | K KAMARAJ Life History in Tamil | thatstamil |