Homeதமிழ்காமராஜர் பற்றிய தகவல்கள் | K KAMARAJ Life History in Tamil | thatstamil

காமராஜர் பற்றிய தகவல்கள் | K KAMARAJ Life History in Tamil | thatstamil

THATSTAMIL-GOOGLE-NEWS

காமராஜர் பற்றிய தகவல்கள் | K KAMARAJ Life History in Tamil | thatstamil

காமராஜர் (K KAMARAJ)

 • காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி கிராமத்தில் 1903-ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி குமாரசாமி நாடாருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

K  Kamaraj Date of Birth – 1903-ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி

 • அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தயார் சிவகாமி அம்மையார் மட்டும் அவரை “ராஜா” என்றே அழைத்து வந்தார்.
 • நாளடையில் காமாட்சி என்ற பெயர் மாறி, காமராசு என்று ஆனது. சத்தியமூர்த்தியை குருவாக ஏற்றுக் கொண்ட காமராஜர் என்னுடைய 16-ம் வயதில் காங்கிரசில் உறுப்பினரானார்.
 • 1920ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1922ல் நேரு தலைமையில் “இந்தியக் குடியரசு காங்கிரஸ்” என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தி புகழ் பெற்றார்.
 • 1930ம் ஆண்டு இவர் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறையில் / பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
 • காமராசரின் அரசியல் குரு – சத்தியமூர்த்தி
 • 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார்.
 • சென்னை மாகாண முதல்வராக இருந்த இராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து 1954ம் ஆண்டு ஏப்ரல் 13ம் நாள் காமராஜர் முதல்வராக பதவியேற்றார்.
 • 1956ம் ஆண்டு ஏழை, மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவியாக இலவச மதிய உணவு திட்டம் (K Kamaraj Mid Day Meal) கொண்டு வந்தார்.
 • பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் தான் மதிய உணவு திட்டத்தை முதன் முதலாக காமராஜர் தொடங்கி வைத்தார்.
 • 1960ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
 • மேலும் இவரது ஆட்சியில் இலவச சீருடை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 • மூன்று முறை (1954 – 1957, 1957 – 1962, 1962 – 1963) தமிழக முதல்வராக இருந்த காமராஜர், 1963ம் ஆண்டு கே-திட்டம் (K-Plan) எனப்படும் காமராஜர் திட்டத்தை கொண்டு வந்தார்.

K Plan Kamaraj Year – 1963ம் ஆண்டு கே-திட்டம் (K-Plan)

 • அத்திட்டப்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி கட்சிப் பணியாற்ற வேண்டும்.
 • அதன்படி, காமராஜர் 1963ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் முதல்வர் பதவியிலிருந்து விலகி, பொறுப்பினை பக்தவக்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப் பணியில் ஈடுபட்டார்.
 • இவர் 1964ம் ஆண்டு புவனேஸ்வர் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார். இவர் 1964ம் ஆண்டு மே 27 அன்று பிரதமர் நேரு இறந்ததும், லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக்கினார்.
 • இந்தியாவைக் காப்போம் ஜனநாயகத்தைக் காப்போம் என்பது கர்மவீரரின் வேதவாக்கு.
 • கர்மவீரர், கருப்பு காந்தி, கல்வி கண் திறந்தவர், படிக்காத மேதை, பெருந்தலைவர், ஏழை பங்காளன், கிங் மேக்கர் போன்றவை இவரது சிறப்புப் பெயர்களாகும்.
 • பின்னர் ஜனவரி 10, 1966ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்ததும் இந்திரா காந்தியைப் பிரதமராக்கினார்.
 • இதனால் காமராஜர் கிங் மேக்கர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
 • 1967ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் நின்று தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
 • 1969ம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்ட போது காமராஜர் பழைய காங்கிரஸிலேயே இருந்தார்.
 • திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தன் வாழ்வை அர்பணித்த காமராஜர், 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் இயற்கை எய்தினார்.

K Kamaraj Death – 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள்

 • இவர் இறந்த பிறகு 1976-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
 • மேலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 • காமராஜரின் நினைவிடம், சென்னை கிண்டியில் 1976ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் திறக்கப்பட்டது.
 • அக்டோபர் 2, 2000-ல் கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் திறக்கப்பட்டது.

காமராஜர் ஆட்சியின் சாதனைகள்

கல்வி துறை | K Kamaraj Education

 • ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது.
 • 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
 • முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
 • பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.ஜி.ராமச்சந்திரனால் 1980களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.
 • அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது).
 • பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.
 • காமராசர் முதலமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார்.
 • பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.

தொழில் வளர்ச்சி

 • தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்.
 • நெய்வேலி நிலக்கரித் திட்டம்
 • பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
 • திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
 • ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
 • ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
 • கல்பாக்கம் அணுமின் நிலையம்
 • கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
 • சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
 • மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
 • கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
 • துப்பாக்கித் தொழிற்சாலை
 • நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
 • சேலம் இரும்பு உருக்காலை
 • பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
 • அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
 • சமய நல்லூர் அனல்மின் நிலையம்
 • சென்னை அனல்மின் நிலையம்
 • நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

பாசனத் திட்டங்கள்

 • கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
 • மணிமுத்தாறு
 • ஆரணியாறு
 • சாத்தனூர்
 • அமராவதி
 • கிருஷ்ணகிரி
 • வீடூர்
 • வைகை
 • காவிரி டெல்டா
 • நெய்யாறு
 • மேட்டூர்
 • பரம்பிக்குளம்
 • புள்ளம்பாடி
 • கீழ்பவானி

தொழிற்சாலைகள்

 • 159 நூல் நூற்பு ஆலைகள்
 • 4 சைக்கிள் தொழிற்சாலைகள்
 • 6 உரத் தொழிற்சாலைகள்
 • 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
 • 2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
 • ரப்பர் தொழிற்சாலை
 • காகிதத் தொழிற்சாலை
 • அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
 • கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.

காமராசருக்கு அரசு செய்த சிறப்புகள்

 • காமராசரக்கு நடுவண் அரசு “பாரதரத்னா விருது” அளித்துச் சிறப்பித்து, நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை நிறுவியது.
 • தமிழக அரசு இவரின் பெயரால் “மதுரை காமராசர் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டியது.
 • கன்னியாகுமரியில் காமராசர் மணி மண்டபம் கட்டப்பட்டது. சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் சிலை அமைத்து சிறப்பித்தது.
 • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.
 • அவரின் விருதுநகர் இல்லமும் அரசுடைமை ஆக்கி நினைவு இல்லமாக்கப்பட்டது.
 • தேனாம்பேட்டையில் காமராசர் அர்னகம் நிறுவப்பட்டது.
 • காமராசர் பிறந்த நாளான சூலை 15ஆம் நாள் ஆண்டுதோறும் “கல்வி வளர்ச்சி நாளாக” தமிழக அரசு அறிவித்துள்ளது.
 • இவரை “கல்விக் கண் திறந்தவர்” எனத் தமிழுலகம் போற்றுகிறது.

காமராசருக்குத் தமிழக அரசு செய்த சிறப்புகள்

 • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது.
 • நடுவண் அரசு 1976 ல் பாரதரத்னா விருது வழங்கியது.
 • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம், நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
 • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
 • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

மறைவு

 • 1975ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இதையும் படிக்கலாமே

தில்லையாடி வள்ளியம்மை பற்றிய தகவல்கள் | thillaiyadi valliammai life history in tamil
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments