Homeதமிழ்சத்தியமூர்த்தி பற்றிய தகவல்கள் | Sundara Sastri Satyamurti History in Tamil | thatstamil

சத்தியமூர்த்தி பற்றிய தகவல்கள் | Sundara Sastri Satyamurti History in Tamil | thatstamil

THATSTAMIL-GOOGLE-NEWS

சத்தியமூர்த்தி பற்றிய தகவல்கள் | Sundara Sastri Satyamurti History in Tamil | thatstamil

சத்தியமூர்த்தி

  • சத்தியமூர்த்தி ஓர் காங்கிரஸ் அரசியல் வாதி மற்றும் இந்திய விடுதலை வீரராவார்.
  • இவர் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் என்ற ஊரில் 1887ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் நாள் சத்தியமூர்த்தி பிறந்தார்.
  • சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.
  • இவரது பேச்சாற்றல் திறமையைக் கண்ட காங்கிரஸ் 1919ம் ஆண்டு மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்கள் மற்றும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட, காங்கிரஸின் பிரதிநிதியாக இவரை இங்கிலாந்து அனுப்பியது.
  • இவர் இங்கிலாந்தில் இருந்த போது “தி இந்து” (The Hindu) ஆங்கில நாளிதழின் லண்டன் செய்தியாளராக 10 நாள் பணியாற்றினார்.
  • 1930ம் ஆண்டு சென்னை பார்த்தசாரதி கோயில் இந்தியப் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
  • 1936ல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சத்தியமூர்த்தி மற்றும் அவரது சீடர் காமராஜர் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1939ம் ஆண்டு இவர் சென்னை மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • அப்போது சென்னையில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க, அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் சர்.ஆர்தர்ஹோப் உதவியுடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • 1942ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது செய்யப்பட்டு நாக்பூரில் உள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.
  • அங்கு செல்லும்போது ஏற்பட்ட முதுகு தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட அவர் 1943ம் ஆண்டு மார்ச் 28ம் நாள் சென்னை பொது மருத்துவமனையில், சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலேயே இறந்தார்.
  • 1944ம் ஆண்டு பூண்டி நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது இவர் உயிருடன் இல்லை அவரது முதன்மை சீடரான காமராஜர் இந்த நீர்த்தேக்கத்திற்கு “சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்”என அவரது பெயரை வைத்தார்.
  • தீரர் என்றும், தீரர் சத்தியமூர்த்தி என்றும் அழைக்கப்பட்ட இவரின் நினைவாக 1987-ம் ஆண்டு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
  • தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர்.
  • அவரது பங்காற்றலை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது.

 

இதையும் படிக்கலாமே

தந்தை பெரியார் பற்றிய தகவல்கள் | Thanthai Periyar History in Tamil | thatstamil
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

Most Popular

Recent Comments