Homeதமிழகப் பெண்கள்டாக்டர் எஸ்.தர்மாம்பாள் வாழ்க்கை வரலாறு | Dr. S. Dharmambal Life History in Tamil

டாக்டர் எஸ்.தர்மாம்பாள் வாழ்க்கை வரலாறு | Dr. S. Dharmambal Life History in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

டாக்டர் எஸ்.தர்மாம்பாள் வாழ்க்கை வரலாறு | Dr. S. Dharmambal Life History in Tamil

டாக்டர் எஸ். தர்மாம்பாள்

  • தஞ்சாவூருக்கு அருகில் கருன்தட்டான் குடி என்ற இடத்தில் பிறந்த டாக்டர் எஸ்.தர்மாம்பாள், சித்த மருத்துவம் பயின்று சென்னையில் மருத்துவமனை ஒன்றை தொடங்கினார்.
  • பின்னர் பொதுச் சேவையில் ஈடுபட்டார். தந்தை பெரியாரின் கருத்துகள் ஈர்க்கப்பட்டு அவர் விதவைகள் மறுமணம், கலப்பு மணம் மற்றும் பெண் கல்வி போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.
  • தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் இசை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
  • இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை தண்டனை பெற்றார். 1940ம் ஆண்டு வரை சமுதாயத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு இல்லை.
  • ஊதியமும் உயர்த்தப்படவில்லை. எனவே இழவு வாரம் என்ற போராட்டத்தை தொடங்கினார்.
  • இதன் விளைவாக கல்வி அமைச்சராக இருந்த திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் தமிழாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டார்.
  • இவர் சென்னை மாணவர் மன்றத் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.
  • இவர் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி இவருக்கு வீரத் தமிழன்னை என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • இப்பட்டம் பெற்ற டாக்டர் எஸ்.தர்மாம்பாள் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு “பெரியார்” என்ற பட்டத்தையும், எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு “ஏழிசை மன்னர்” என்ற பட்டத்தையும் வழங்கினார்.
  • டாக்டர் எஸ்.தர்மாம்பாள் அம்மையார் தனது 69வது வயதில் 1959ம் ஆண்டு காலமானார்.

பெண்கள் மாநாடு

  • இவர் சமூக சேவையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். விதவைகள் மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என இம்மூன்றிற்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.
  • 1938 நவம்பர் 13 ஆம் நாள், சென்னையில், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். மறைமலை அடிகளாரின் மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரை அழைத்து, இம்மாநாட்டிற்குத் தலைமையேற்க வைத்தார்.
  • இம்மாநாட்டிலேயே, திராவிட கழகத் தலைவர் ஈ. வெ. இராமசாமிக்குப் பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டது

நீதிக்கட்சியில் ஈடுபாடு

  • தஞ்சை மாவட்டத்தில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தலைமைப் பதவிக்குப் போட்டி கடுமையாக இருந்த நிலையில் டாக்டர் எஸ்.தர்மாம்பாள் ஈடுபட்டு பட்டுக்கோட்டை அழகிரிசாமி துணையுடன் சமாதானம் பேசி நீதிக் கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தடுத்தார்.

இல்லத்தைக் கொடையாக அளித்தல்

  • தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடியில் இருந்த அவரது வீட்டை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு கொடையாக அளித்தார்.

நினைவு கூர்தல்

  • டாக்டர் எஸ்.தர்மாம்பாள் நினைவைப் போற்றும் வகையில் விதவைகளின் மறுவாழ்விற்காக “தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம்” என்னும் பெயரில் தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது.
  • சென்னை மாநகராட்சி இவர் பெயரில் ஒரு பூங்காவைப் பராமரித்து வருகிறது.

இதையும் படிக்கலாமே

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வாழ்க்கை வரலாறு | Dr.Muthulakshmi Reddy Life History in Tamil
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

Most Popular

Recent Comments