தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கை வரலாறு | Moovalur Ramamirtham Ammaiyar Life History in Tamil

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கை வரலாறு | Moovalur Ramamirtham Ammaiyar Life History in Tamil

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

 • 1883ம் ஆண்டு திருவாரூரில் பிறந்த இராமாமிர்தம் அம்மையார், மயிலாடுதுறை அருகிலுள்ள மூவலூர் என்ற கிராமத்தில் வளர்ந்தார்.
 • எனவே மூவலூர் இராமாமிர்தம் என்றழைக்கப்பட்டார். இவர் இசை வேளாளர் குலத்தைச் சார்ந்தவர்.
 • பழங்காலத்தில் இக்குலத்தில் பிறந்த பெண்கள் இறைப்பணி மற்றும் கலைப் பணிக்காக அர்பணிக்கப்பட்டனர்.
 • இச்சமூகம் கால மாற்றத்தில் சிக்கிச் சீரழிந்தது பிரபுகள் மற்றும் ஜமீன்தாரர்களால் அவமானப்படுத்தப்பட்டார்கள்.
 • தம் குலத்துப் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பததையும், பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதையும் உணர்ந்த இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.
 • நாடு முழுவதும் தங்கள் இனப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்லி, அவர்களது விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.
 • காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் 1925ம் ஆண்டு மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநாட்டைக் கூட்டினார்.
 • இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை (அல்லது) மதி பெற்ற மைனர், தாசிகளின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
 • தேவதாசி முறைக்கு எதிரான இவரது போராட்டம், தமிழக பெண்களை மட்டுமல்லாது தேசிய அளவில் பெண்கள் விழிப்படையச் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது.
 • சமூகப் பணிகளில் மட்டுமல்லாமல் தேசிய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்ட அம்மையார் பெண்கள் பெருமளவில் தேசிய இயக்கத்தில் ஈடுபட ஊக்குவித்தார்.
 • 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.
 • இவரது அரிய உழைப்பையும் தியாகத்தையும் போற்றும் வகையில் தமிழக அரசு ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு சமூகத் திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்” என்று பெயரிட்டு இவரைக் கௌரவித்தது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்

 • அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
 • இத்திட்டத்தின் மூலம், யுஜி பட்டப்படிப்பு/டிப்ளமோ/ஐடிஐ/ வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை நிதி உதவியாக பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
 • இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்

இதையும் படிக்கலாமே

டாக்டர் எஸ்.தர்மாம்பாள் வாழ்க்கை வரலாறு | Dr. S. Dharmambal Life History in Tamil

thatstamil google news

                         

top articles

Related Articles

error: Content is protected !!