Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் – அக்டோபர் 21, 2022 வெள்ளி கிழமை | THATSTAMIL
இன்றைய ராசிபலன் | அக்டோபர் 21, 2022
நமது தட்ஸ்தமிழ் இணையதளத்திற்கு வருகை தந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வணக்கம்.
இன்று நாம் காண இருப்பது தினசரி ராசிபலன் அக்டோபர் 21-ம் தேதி காண மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான பலன்களை சிறப்பு குறிப்புகளுடன் கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஆஸ்ட்ரோ சிவா அவர்கள்,
27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் ராசி பலன்களை கணித்திருக்கிறார் ஜோதிடர் ஆஸ்ட்ரோ சிவா அவர்கள்,
மேஷ ராசி அன்பர்களே,
இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மனதில் தேவையற்ற சிந்தனை மற்றும் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
உறவினர் வகையில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
இன்று விநாயகர் வழிபாடு நன்மை அளிக்கும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும் நாளாக அமையும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் விரையம் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே,
இன்று உங்களுக்கு தேவையான பணம் கிடைக்கும்.
தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
வீண் அலைச்சலை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இன்று இருக்கும்.
முருகப் பெருமானை வழிபடுவது நன்மையளிக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் இன்று ஆதாயம் ஏற்படும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மாமன் வழியில் இன்று எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று பிற்பகலுக்கு பிறகு வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுன ராசி அன்பர்களே,
இன்று காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
குடும்பத்தில் முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
குடும்பத்தை அனுசரித்து செல்வது நல்லது.
வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். லாபம் மற்றும் நட்டம் எதுவுமின்றி…
நடராஜப் பெருமானை வழிபடுவது நன்மையளிக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை அளிக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணையினால் இன்று மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படும்.
கடக ராசி அன்பர்களே,
சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும் நாள்…
இன்று சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.
கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும்.
இன்று வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.
இன்று மகா விஷ்ணுவை வழிபடுவது நன்மையளிக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று கடன் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே,
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள்.
எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் இன்று எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
பைரவரை வழிபடுவது நன்மையளிக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் எதிர்பார்த்த காரியம் இன்று அனுகூலமாக முடியும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று எதிர்பாராத பணவரவுடன் செலவுகளுக்கும் வாய்ப்புண்டு.
கன்னி ராசி அன்பர்களே,
இன்று மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
இன்று வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
இன்று செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சி உண்டாகும் வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
அம்பிகையை வழிபடுவது நன்மையளிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று வாழ்க்கை துணைக்காக இன்று செலவு செய்ய வேண்டி வரும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
துலாம் ராசி அன்பர்களே,
இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடிவது நன்மை தரும்.
இன்று எதிரிகளால் மறைமுகமாக ஆதாயம் உண்டாகும்.
சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும் நாள் இன்று.
எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்பு உண்டு.
வியாபாரத்தில் விற்பனையும் லாபம் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.
விநாயகரை வழிபடுவது நன்மையளிக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
விருச்சிக ராசி அன்பர்களே,
இன்று எடுத்த காரியங்கள் அனுகூலமாகும் முடியும்.
குடும்பத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.
உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரம் நன்றாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் இன்று சில சங்கடங்கள் ஏற்படும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் எதுவும் ஈடுபடவேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே,
இன்று உங்களுக்கு மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.
தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மையளிக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று எதிர்பார்த்த சுப செய்தி கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
மகர ராசி அன்பர்களே,
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
வேலைகளில் கவனம் தேவை.
தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் இன்று ஏற்படும்.
தேவையற்ற வீண் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.
வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மை அளிக்கும்.
சிவபெருமானை வழிபடுவது நன்மையளிக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் உண்டாகும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.
கும்ப ராசி அன்பர்களே,
எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைக்கும்.
கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
வியாபாரம் இன்று விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மையளிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
மீன ராசி அன்பர்களே,
புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.
வீரபத்திர சுவாமியை வழிபடுவது நன்மையளிக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.
Today Rasi Palan in Tamil |