இன்றைய ராசி பலன்கள்
சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மனதில் பட்டதை பளிச்சென்று பேசிமற்றும் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். சொத்து சம்பந்தமான பிரச்னைக்கு நல்லதீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பும் லாபம் கிடைக்கும். வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகார பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகன வசதி உயரும். வியாபாரத்தில் பற்று வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.
கணவன்- மனைவிக்குள் அன்னியோம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்க்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
குடும்பத்தில் உள்ளவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும்.
Today Rasi Palan in Tamil |
Very useful information thanks ….thatstamil team