HomeTODAY RASI PALANToday Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் - அக்டோபர் 28, 2022...

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் – அக்டோபர் 28, 2022 வெள்ளி கிழமை  

THATSTAMIL-GOOGLE-NEWS

இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி

ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டுபார்க்க வேண்டி வரும். தர்ம சங்கடமான சூழலில் சிக்கிக் கொள்வீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். நல்லன நடக்கும் நாள்.

ரிஷப ராசி

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுன ராசி

எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கடக ராசி

மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவு கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

சிம்ம ராசி

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடுதேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி ராசி

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும் விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

துலாம் ராசி

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

விருச்சிக ராசி

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

தனுசு ராசி

மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விரும்பியபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மகர ராசி

விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.

கும்ப ராசி

புதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

மீன ராசி

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

Today Rasi Palan in Tamil
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments