HomeMEANING IN TAMILCredentials Meaning in Tamil

Credentials Meaning in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

Credentials Meaning in Tamil

Credentials என்றால் என்ன என்பதனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

Credentials என்பது ஒரு பெயர்ச்சொல் (Noun) ஆகும்.

Credentials என்ற பெயர்ச்சொல் தமிழில் வெளிப்படுத்தும் அர்த்தம் அல்லது பொருள்:

1. சான்றுகள் அல்லது ஆதாரம்

2. நம்பிக்கை சான்று அல்லது உறுதிப் பத்திரம்

3. ஒருவருக்கு நற்சான்று அளித்தல்.

4. தகுதிக்கான சான்று மற்றும் அங்கீகாரம்

5. சில இடங்களில் அறிமுகச் சான்று என்று பொருள் கொள்ளப்படும்.

What is meant by Credentials

Credentials என்பது தமிழில் ஆதார சான்று அல்லது அறிமுகச் சான்று என்று பொருள் வழங்கப்படும்.

Credentials ➨ஆதாரச்சான்றுகள்

Credentials ஆனது ஆங்கிலத்தில் Reference Certification, Proof என பல்வேறு பொருள் தருமாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Credentials meaning in tamil

இந்த Credentials ஆனது தமிழில் நற்சான்று அளித்தல், ஆதாரம் பற்றிய குறிப்புகளை வழங்குதல் என்று பொருள் வழங்கப்படுகிறது.

பொதுவாக இந்த Credentials என்ற சொல் வங்கி மற்றும் இணையதள அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

இணையதள அமைப்புகளில் நாம் பயன்படுத்தும் ஜிமெயில் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக கணக்குகளில் நீங்கள் உங்களது பாஸ்வேர்டினை மறந்து விட்டீர்கள் எனில் உங்களுக்கு இதுபோன்ற Credentials என்ற வார்த்தை பரிச்சயமாகி இருக்கும்.

இந்த இடங்களில் உங்களது பாஸ்வேர்டு ரெகவரி செய்வதற்கு நீங்கள் உங்களது பிறந்த தேதி அல்லது உங்களைப் பற்றிய ஒரு சில விவரங்களை கொடுத்து அதாவது மின்னஞ்சல், பயனாளர் பெயர் போன்றவற்றினை கொடுத்து நீங்கள் ரெக்கவரி (Recovery) செய்வீர்கள்.

Credentials என்பது இந்த இடத்தில் இது ஒரு ஆதாரச் சான்று என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

இதே போன்ற அமைப்புகளில் இணையதளங்களில் வங்கி கணக்குகளை உபயோகிக்கும்போது Credentials என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

சில இடங்களில் Credential என்பது ஒரு அறிமுக கடிதம் ஆகவும் அல்லது நற்சாட்சி பத்திரமாகவும் தமிழில் பொருள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

சில அரசு சார்ந்த அமைப்புகளிலும் Credential என்ற வார்த்தை பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Cringe Meaning in Tamil

Credentials பற்றிய ஒரு விரிவான விளக்கம்:

Credentials உபயோகிக்கபடும் இடங்கள்:

  1. ஒரு நபரின் சாதனை பற்றியும் அல்லது அவரைப் பற்றிய குறிப்புகளையும் குறிக்கப் பயன்படுவது. அதாவது ஒரு நபரின் தரம், தகுதி,சாதனை மற்றும் பின்னணி போன்ற குறிப்புகளை குறிக்கப் பயன்படுகிறது.
  2. ஒரு நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக பயன்படுத்தப்படுகிறது.
  3. அரசு சார்பில் வழங்கப்படும் ஒரு அறிமுகக் கடிதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  4. ஒருவருக்கு நற்சான்று வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.
  5. ஏற்கனவே கூறப்பட்ட உண்மைத் தன்மைகளை உறுதி செய்யும் ஒரு உறுதிபடுத்தும் ஆவணமாகவும் பயன்படுகிறது.

வாருங்கள் நண்பர்களே, இந்த Credentials என்ற வார்த்தை எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று இனி அடுத்தடுத்த தலைப்புகளில் பார்ப்போம்.

Login Credentials meaning in tamil

Login Credentials meaning in tamil

Login Credentials ➨உள்நுழைவு சான்றுகள்

தமிழில் இது உள்நுழைவு சான்றுகள் என்று பொருள் கொள்ளப்படும்.

Invalid Login Credentials meaning in tamil

Invalid Login Credentials ➨ தவறான உள்நுழைவு சான்றுகள்

தமிழில் இது தவறான உள்நுழைவு சான்றுகள் என்று பொருள் கொள்ளப்படும்.

அப்படி, இந்தவிதமான சமூக மற்றும் இணையதள கணக்குகளை (Account) அணுகும்போது ஒருவேளை நீங்கள் தவறுதலான பயனாளர் குறியீட்டினை அதாவது பாஸ்வேர்ட் கொடுத்து விட்டீர்கள் எனில் உங்களுக்கு Invalid Login Credentials என்று ஒரு டிஸ்ப்ளே (Display) செய்யப்படும்.

Invalid Credentials meaning in tamil

Invalid Credentials ➨ தவறான ஆவண சான்றுகள்

நீங்கள் ஒரு புதிய இணையதளத் கணக்கினை துவங்குகிறீர்கள் எனில் அது ஜிமெயில் அல்லது பேஸ்புக் அல்லது வேறு ஏதாவது ஒரு சமூக கணக்காக இருக்கலாம்.(Social Accounts like Gmail, Facebook or anything) இதில் கணக்கினை துவங்கும்போது நீங்கள் எதாவது உங்களது தகவல்களை கொடுக்கும்போது அவற்றில் ஏற்கனவே உள்ள ஒரு பார்மட்டில் (Format) சரியான தகவல்களை, நீங்கள் கொடுக்க தவறும் பட்சத்தில் உங்களுக்கு Invalid Credentials என்று டிஸ்ப்ளே (Display) செய்யப்படும்.

Read Also

english to tamil

blog angle

Leave Letter In Tamil

TAMILNADU HISTORY BOOK COMPLETE GUIDE

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments