Homeசித்த மருத்துவம்உடல் வலிமை பெற உதவும் அற்புத மூலிகைகள்

உடல் வலிமை பெற உதவும் அற்புத மூலிகைகள்

THATSTAMIL-GOOGLE-NEWS

உடல் வலிமை பெற உதவும் அற்புத மூலிகைகள்

உடல் தேற்றி -Alterative

உடல் முழுவதும் உண்டாகக் கூடிய நோயை அல்லது குறிப்பிட்ட சில உறுப்புக்களில் மட்டும் ஏற்படக் கூடிய நோயை நீக்கி , உடலை நன் நிலைக்கு கொண்டுவரும் பொருள் உடல் தேற்றியாகும்.

Drug that alters the morbid processes of nutrition and excretion restoring the normal function of an organ or of the systems.

🪴முக்கிய மூலிகைகள்🪴

🔷அமுக்கிரா
🔷சீந்தில்
🔷வல்லாரை
🔷தேற்றான்
🔷கற்றாழை
🔷கரிசாலை
🔷சந்தனம்
🔷நன்னாரி
🔷பொன்னாங்காணி
🔷மணத்தக்காளி
🔷கிச்சிலிக்கிழங்கு
🔷இலுப்பை

உடல் வலிமை பெற

🍯உபயோகிக்கும் முறைகள்🍯

🪴அமுக்கிரா🪴

தூய்மை செய்த சீர்மை அமுக்கிராக் கிழங்கைப் பொடியாக்கி எடுத்த தூளின் ஒரு பங்கும் சீனி / கற்கண்டு மூன்று பங்கும் ஒன்று சேர்த்து காலை மாலை 4கிராம் வீதம் சாப்பிட்டு , காய்சிய பசும்பால் குடித்து வர உடல் வலிமை பெறும்.

🪴சீந்தில்🪴

சீந்திலைக் கொண்டு தயாரிக்கப்படும் அமுது சர்க்கரைச் சூரணத்துடன் அப்பிரக பஸ்பம் கலந்து உண்டுவர உடலுக்கு வலிமை உண்டாகும்.

இது மதுமேக நோயாளிகளுக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

🪴வல்லாரை🪴

இதனைக் கற்ப முறையாக அல்லது உணவு முறையாகச் சாப்பிட்டுவர , தேகத்துக்கு வன்மையைத் தரும். நோயையும் அணுகவிடாது .

🪴தேற்றான்🪴

இதன் விதையைக் கொண்டு தயாரிக்கப்படும் லேகியத்தைச் சாப்பிட்டுவர தேகம் பலம் பெறும்.

🪴கற்றாழை🪴

கற்றாழைச் சாறு- 85 கிராம் சிற்றாமணக்கெண்ணெய் – 340 கிராம்

இவை இரண்டையும் ஒன்று சேர்த்துக் காய்ச்சி இறக்கி வடிகட்டி , காலை அல்லது இரவில் 30 மி.லி. குடித்து வர உடலின் சூட்டை நீக்கி , உடலை வலிமை அடையச் செய்யும்.

உடல் வலிமை பெற

🪴கரிசாலை🪴

இதனைச் சுண்டிச் சமைத்துண்ண உடல் வலிமை அடையும்.

🪴சந்தனம்🪴

சந்தனத் துளை மைபோல் அரைத்து பசுப் பாலில் அல்லது ஊநீரில் கலந்து உட்பிரயோகமாகக் கொடுக்க , உடம்புச் சூடு தணிந்து , உடல் வலிமை அடையும்.

🪴நன்னாரி🪴

இதனைச் சேர்த்துச் செய்யப்படும் குளிர்பானம் ( சர்பத் ) அருந்திவர தேசுத்தில் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கி , குளிர்ச்சியுண்டாகி உடல் வலிமை அடையும்.

🪴பொன்னாங்காணி🪴

இதனைத் தினமும் வறுத்துச் ( சுண்டி ) சாப்பிட உடல் ஒளி பெற்று வலிமையடையும்.

🪴மணத்தக்காளி🪴

இதனின் இலை , காய் , கனி , வேர் இவைகளைக் கொண்டு குடிநீர் , ஊறுகாய் , வற்றல் முதலியவைகளை உட்கொள்ள நோயற்று நீண்ட நாள் வாழலாம். ( கறுப்பு இனம்சிறந்தது)

🪴கிச்சிலிக் கிழங்கு🪴

இதனை வெற்றிலையோடு சேர்த்துண்ண நறு மணத்தையூட்டுவதோடு தேக வலிமையும் அடையும்.

🪴இலுப்பை 🪴

இதனுடைய பூவை வெல்லத்துடன் சேர்த்துப் பாகு செய்து உண்ண தேகம் வலிமை பெறும் .

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments