Neeraj Chopra – Indian Javelin Thrower
வணக்கம் நண்பர்களே,
வானம் வசப்படும் என்ற இன்றைய பதிவில் நாம் காண இருப்பது ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, சரித்திர நாயகனான நீரஜ் சோப்ரா அவர்களைப் பற்றியது.
நீரஜ் சோப்ரா அவர்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு, ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் இந்தியா வென்ற பதக்கங்களைப் பற்றி பார்ப்போம்.
ஒலிம்பிக்கில் இந்தியா 1900 முதல் 2021 வரை 36 பதக்கங்களை வென்றுள்ளது.
1900ம் ஆண்டு பாரிசில் (Paris – France) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கம் வென்றது.
அதற்குப் பிறகு, சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2021 டோக்கியோ (Tokyo – Japan) ஒலிம்பிக் தடகளப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
ஈட்டி எறிதல் போட்டியில் (Javelin throwing) முதல் மூன்று சுற்றுகளில் அதிகபட்சமாக 87.58 மீ. தூரம் வீசி நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஈட்டி எறிதல்:
பெரிய அளவிற்கு ஸ்பான்சர்கள் (sponsors) மற்றும் யாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத ஒரு தடகள போட்டிதான் இந்த ஈட்டி எறிதல். அதில் நீரஜ் சோப்ரா அவர்கள் தங்கம் வென்றுள்ளது மிகப் பெரிய சரித்திர சாதனையாகும்.
யார் இந்த சரித்திர நாயகன் நீரஜ் சோப்ரா ?
இவர் 24 டிசம்பர் 1997 இல் ஹரியானா மாநிலத்தில் பானிபட் மாவட்டத்திலுள்ள கந்த்ரா என்ற கிராமத்தில் பிறந்துள்ளார்.
இவரது குடும்பம் கூட்டுக்குடும்பம் ஆகும். இவரின் தந்தையார் ஒரு விவசாயி ஆவார். இந்த குடும்பத்தில் மொத்தம் 17 பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த பிள்ளை நீரஜ் சோப்ரா ஆவார்.
குடும்பத்தில் மூத்த பிள்ளையாக இருப்பதால் அவரின் தந்தை மற்றும் தாயார் மற்றும் தாத்தா பாட்டி அனைவரும் நீரஜ் சோப்ராவை செல்லப் பிள்ளையாக வளர்த்து வந்தனர்.
இவருக்கு என்றே எப்போதும் வீட்டில் பால் மற்றும் வெண்ணெய் தனியாக வைக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக அவரின் உடல் எடை சரசரவென்று ஏறிக்கொண்டே சென்றது.
நீரஜ் சோப்ரா 12 வயதில் 90 கிலோ உடல்பருமனை கொண்டிருந்தார்.
தீபாவளி நாளன்று, நீரஜ் சோப்ராவிற்கு அவர்கள் தாத்தா, பாட்டி ஒரு வெள்ளை நிற பைஜான் ஆடையினை பரிசளித்தனர்.
அந்த பைஜான் ஆடையினை போட்டுக்கொண்டு அவரது கிராமத்தில் நீரஜ் சோப்ரா நடந்து சென்றார். அப்போது அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள், மற்றவர்கள் சேர்ந்துகொண்டு நீ இந்த வயதில் நாட்டாமை மாதிரி இருக்க என்று அனைவரும் கேலி செய்தனர். அதனால் மனம் வருந்திய நீரஜ் சோப்ரா அவரது அப்பாவிடம் சென்று தெரிவித்தார்.
அதற்குப் பின்பு, ஈட்டி எறிதல் நடைபெறும் பயிற்சி இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தொடங்கியது அவரது வாழ்க்கையின் திருப்புமுனை. இந்த ஈட்டி எறிதல் விளையாட்டானது நீரஜ் சோப்ராவிற்கு மிகவும் பிடித்துப் போயிற்று.
இவர் 12 வயதிலிருந்து ஈட்டி எறிதல் போட்டியில் பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளார்.அதிலிருந்து இன்றுவரை பதினோரு ஆண்டுகாலமாக நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் பயிற்சி செய்து கொண்டுள்ளார்.
இவரின் விடாமுயற்சி காரணமாக இவர் இந்திய ராணுவத்தில் உள்ள ஹவில்தார் பதவியில் சேர்ந்துள்ளார்.
இப்போது அவர் உலகம் பேசும் சரித்திர நாயகனாக ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தடகளப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். சுதந்திர இந்தியாவில் ஈட்டி எறிதலில் முதல் தங்கம் வென்று கொடுத்த நபர் இவராவார்.
இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு பிடித்த விஷயத்தை செய்தீர்கள் என்றால் நீங்களும் சரித்திர இடத்தில் பங்கு பெறலாம்.
நண்பர்களே, உங்களது கருத்துக்களை (Comments) கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.
Read also
Alloy Press – An Information Bank (English)