Homeஆன்மீகம்அதிர்ஷ்டம் தரும் எலுமிச்சை மற்றும் மிளகாயை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

அதிர்ஷ்டம் தரும் எலுமிச்சை மற்றும் மிளகாயை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

THATSTAMIL GOOGLE NEWS

அதிர்ஷ்டம் தரும் எலுமிச்சை மற்றும் மிளகாயை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

நண்பர்களே, ஜோதிட ரீதியாக பார்க்கப் போனால் எலுமிச்சை மற்றும் மிளகாய் திருஷ்டி நீக்கும் பொருளாக இருக்கிறது.

கோவில்களிலும் சில முக்கிய நிகழ்வுகளிலும் எலுமிச்சை பழத்தை வைத்திருப்பார்கள். காரணம் என்னவென்றால் எலுமிச்சை எதிர்மறை ஆற்றலை நீக்கும் கருவியாக செயல்படுகிறது.

இந்த எலுமிச்சை மற்றும் மிளகாயை சரியாக உங்கள் வீட்டில் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

ஒவ்வொருவரும் அவர்களது மனதில் நினைப்பது என்னவெனில் எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்பதுதான். அந்த வகையில் நாம் நம்முடைய பல பிரச்சனைகளிலிருந்து விடுபட ஜோதிட ரீதியாக ஒரு சில பரிகாரங்களை பார்ப்போம் வாருங்கள்…

எலுமிச்சம் பழத்தையும் மிளகாயையும் கருப்பு நூலில் கட்டி வீட்டு வாசலிலோ அல்லது கடையிலோ வைத்திருப்பார்கள். நீங்கள் இதை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றலை அகற்ற இது பயன்படுகிறது. இது மட்டுமல்லாமல் இதில் இன்னும் பல தீர்வுகள் உள்ளன. அதை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வரவழைக்கலாம்.

அதிர்ஷ்டம் தரும் எலுமிச்சை மற்றும் மிளகாயை பற்றி உங்களுக்கு தெரியுமா

 

 

 

உங்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சனையா ?

உங்களுக்கு வேலை கிடைப்பதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பகல் 12:00 மணிக்கு முன்னதாக எலுமிச்சை பழத்தை எடுத்து அதை நான்கு துண்டுகளாக வெட்டி, உங்கள் வீட்டின் முச்சந்திப்புக்கு சென்று நான்கு துண்டுகளையும் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு திசைகள் நோக்கி எரிந்து விடுங்கள். இது உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வழிவகை செய்யும்.

சாலையோரத்தில் ஆங்காங்கே எலுமிச்சம் பழம் அல்லது எலுமிச்சை துண்டுகள் கிடப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள் அல்லவா ? அதை நீங்கள் தவறுதலாக கூட தாண்டி விடாதீர்கள். இது உங்களது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடும்.

உங்களுக்கு தொழிலில் பிரச்சனையா ?

எலுமிச்சம் பழத்தை எடுத்து நறுக்கி அதில் 4 கிராம்புகளை வைத்து ஓம் ஸ்ரீ ஹனுமதே நமஹ மந்திரத்தை உச்சரித்து வந்தால் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் நீங்கி, உங்களது தொழிலில் நீங்கள் வெற்றியை அடையலாம்.

இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்து வந்தால் உங்களுக்கு அனைத்திலும் நல்ல அதிர்ஷ்டம் கிட்டும்.

இதையும் படிக்கலாமே,

சனியின் பிடியில் சிக்கித் தவிப்பவரா நீங்கள் இதோ உங்களுக்கான வாழ்வியல் பரிகாரங்கள்
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments