Homeஆன்மீகம்விநாயகரின் ஆறுபடை வீடு பற்றிய சுவையான தகவல்கள்

விநாயகரின் ஆறுபடை வீடு பற்றிய சுவையான தகவல்கள்

THATSTAMIL-GOOGLE-NEWS

ஆறுபடைவீட்டைக் கொண்டவர் ‘முருகன்’ மட்டுமல்ல, விநாயகருக்கும் ஆறுபடை வீடு உள்ளது. ஒவ்வொரு படை வீட்டுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. இந்த ஆறுபடை வீட்டு விநாயகரும், அவரை வழிபட்டால் கிடைக்கும் பலனையும் பார்ப்போம்.

ஆறுபடை வீடு

முதல் படை வீடு: திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் ‘அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே ‘அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

இரண்டாம் படை வீடு: விருத்தாசலம்

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு “ஆழத்துப் பிள்ளையார்” என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

ஆறுபடை வீடு

மூன்றாவது படைவீடு: திருக்கடவூர்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் “கள்ள வாரண பிள்ளையார்’ அருள்பாலிக்கிறார். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், முதன் முதல் கடவுளான விநாயகரை வழிபடவேண்டும் என்பதை மறந்த காரணத்தால், அமிர்த குடத்தை எடுத்து இத்தலத் தில் ஒளித்து வைத்தார், இதனால் இவரை “கள்ள வாரண பிள்ளையார்’ எனப்படுகிறார். எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும்அதை அடைய நமக்கு மிக முக்கியத்தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிற வராக திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

நான்காம் படை வீடு: மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள “சித்தி விநாயகர்” நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஆறுபடை வீடு

ஐந்தாவது படை வீடு: பிள்ளையார்பட்டி

“பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்” ஐந்தாம் படைவீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராகஇவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தை கையில் தாங்கி அருள்புரிகிறார்.

சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த ‘கற்பக விநாயகரை’ வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

ஆறாம்படை வீடு:திருநாரையூர்

திருநாரையூரில் அருள்பாலிக்கிறார் ‘பொள்ளாப் பிள்ளையார்’. அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

RASI PALAN TODAY

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments