HomeMADRAS HIGH COURT EXAMMadras High Court Exam Questions and Answers 2021

Madras High Court Exam Questions and Answers 2021

THATSTAMIL-GOOGLE-NEWS

 Madras High Court Exam Questions and Answers 2021

பகுதி – அ

1.எந்த மிருகம் தாவரம் மற்றும் மற்ற விலங்குகளை உண்ணும் ?

(A) கரடி

(C) ஓநாய்

(D) ஒட்டகச்சிவிங்கி

(B) எருமை

Answer: A

2.ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் ?

(A) 11

(B) 7

(C) 8

(D) 12

Answer: C

3.இந்தியா எப்போது சுதந்திரம் அடைந்தது?

(A) 26.1.1950

(B) 26.8.1947

(C) 15.8.1947

(D) 15.8.1950

Answer: C

4.உலகில் எத்தனை கண்டங்கள் இருக்கிறது?

(A) 9

(C) 6

(B)  7

(D) 5

Answer: B

5.இந்தியாவின் தலைநகரம் எது?

(A) மும்பை    

(B) சென்னை

(C) புது டெல்லி

(D) கல்கத்தா

Answer: C

6.வானவில்லில் எத்தனை நிறங்கள் இருக்கிறது ?

(A) 5

(B) 6

(C) 7

(D) 8

Answer: C

7.கூடுகளில் வாழாத உயிரினம் எது?

(A) வவ்வால்

(B) காகம்

(C) கிளி

(D) புறா

Answer: A

8.சிங்கம், கரடி, குரங்கு ——- மேற்கண்ட விலங்குகளின் பொதுவான குணம் என்ன?

(A) அந்த விலங்குகள் பழம் மற்றும் கொட்டைகளை உண்ணும்

(B) அந்த விலங்குகளை மற்ற விலங்குகள் வேட்டையாடித் தின்னும்

(C) அந்த விலங்குகள் வீட்டு விலங்குகள்

(D) அந்த விலங்குகள் வீடு கட்டிக் கொள்ளாது. அது தங்குவதற்கு ஏதேனும் ஒரு இடத்தை தேடும்.

Answer: D

9.கீழ்க்கண்டவற்றில் எது மதம் சம்பந்தப்பட்ட விழா இல்லை?

(A) காந்தி ஜெயந்தி

(B) தீபாவளி

(C) ஈத்

(D) கிறிஸ்துமஸ்

Answer: A

10. கீழ்க்கண்டவற்றில் எதற்கு கால்கள் இல்லை?

(A) எறும்பு

(B) வண்ணத்துப்பூச்சி

(C) பல்லி

(D) மண்புழு

Answer: D

11.நாம் சாப்பிடும்போது கீழ்க்கண்டவற்றில் எதை செய்யக்கூடாது?

(A) வாயை மூடிக்கொண்டு உணவை உண்ண வேண்டும்.

(B) உணவை மெதுவாக மெல்ல  வேண்டும்

(C) பேசுவதை தவிர்க்க வேண்டும்

(D) வாய் முழுவதும் உணவால் நிரப்ப வேண்டும்

இந்தக் கேள்விக்கு இரண்டு பதிலாகும்.

வாயை மூடிக்கொண்டு உணவை உண்ண முடியாது. அதனால் A தவறானது.

வாய் முழுவதும் உணவால் நிரப்ப வேண்டும் என்பது முற்றிலும் தவறானது. அதனால் D தவறானது.

Answer: A and D

12. ஜூலை மாதம் – – – – – க்கு பின்பும் – – – – – – க்கு முன்பும் வரும்.

(A) ஜூன், மே

(B) ஆகஸ்ட், மே

(C) ஆகஸ்ட், ஜூன்

(D) ஜூன், ஆகஸ்டு

Answer:  D

13. ரூபாய் 55 விலையில் உள்ள ஒரு கிளியை வாங்க ——– பத்து ரூபாய் நோட்டுக்கள் ——– இரண்டு ரூபாய் நாணயம் ——– ஒரு ரூபாய் நாணயம் தேவைப்படும்.

(A) 5, 2, 1

(B) 6, 3, 1

(C) 5, 0, 5

(D) 5, 1, 2

Answer:  A

14.ஓட்டுரிமைக்குரிய வயது

(A) 21

(B) 25

(C) 18

(D) 20

Answer:  C

15.மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு எது?

(A) சிங்கம்

(B) புலி

(C) சீட்டா

(D) மான்

 

Answer:  C

16. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை

(A) அம்பேத்கர்

(B) மஹாத்மா காந்தி

(C) வல்லபாய் பட்டேல்

(D) லஜபதிராய்

Answer:  A

17. இந்தியாவின் முதல் பிரதமர்

(A) இந்திரா காந்தி

(B) நேரு

(C) லால் பகதூர் சாஸ்திரி

(D) மொரார்ஜி தேசாய்

Answer:  B

18. ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் இருக்கிறது?

(A) 7

(B) 8

(C) 9

(D) 5

Answer:  A

19. உன்னுடைய தாயின் சகோதரி உனக்கு – – – முறை வேண்டும்.

(B) மாமியார்

(A) அத்தை

(C) பாட்டி

(D) சித்தி

Answer:  D

20. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?

(A) 13

(B) 12

(C) 11

(D) மேற்கண்ட எதுவும் இல்லை

Answer:  C

21.பேருந்துகளில் உள்ள முதலுதவி பெட்டி எந்த நிறத்தில் இருக்கும்?

(A) வெள்ளை

(B) நீலம்

(C) கருப்பு

(D) சிவப்பு

Answer:  D

22.கீழ்க்கண்டவற்றில் எது அனைத்துண்ணி?

(A) நாய்

(C) புலி

(B) குரங்கு

(D) காண்டாமிருகம்

Answer:  A

23.ஒரு ஜோக்கர் கொண்ட ஒரு சீட்டு கட்டில் எத்தனை சீட்டுகள் இருக்கும்?

(A) 52

(B) 53

(C) 54

(D) 45

Answer:  B

24.விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டுடன்  தொடர்புடையவர் ?

(A) கிரிக்கெட்

(B) கால்பந்து

(C) பேட்மிட்டன்

(D) செஸ்

Answer:  D

25.கங்காரு எந்த நாட்டில் அதிகமாக இருக்கிறது?

(A) தென்னாப்பிரிக்கா

(B) இலங்கை

(C) நார்வே

(D) ஆஸ்திரேலியா

Answer:  D

26. தாவரங்கள் எதன் மூலம் தனது உணவை தயாரித்துக் கொள்ளும்?

(A) மகரந்தசேர்க்கை

(B) ஒளிச்சேர்க்கை

(C) பழச்சேர்க்கை

(D) மேற்கண்ட எதுவுமில்லை

Answer:  B

27. தாஜ்மஹாலை கட்டியவர் யார்?

(A) ஷாஜஹான்

(B) மாலிக்

(C) அக்பர்

(D) பாபர்

Answer:  A

28. தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர்

(A) பழனிச்சாமி

(B) பன்னீர்செல்வம்

(C) ஸ்டாலின்

(D) கருணாநிதி

Answer:  C

29.ஒரு வருடத்தில் எத்தனை மாதங்களில் 31 நாட்கள் இருக்கும் ?

(A) 6

(B) 7

(C) 8

(D) 5

Answer:  B

30. லீப் வருடத்தில் – – – – – நாட்கள்.

(A) 365

(B) 366

(C) 364

(D) 367

Answer:  B

பகுதி – ஆ

31.எந்த நாளில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது?

(A) ஜூலை 25

(B) ஆகஸ்ட் 23

(C) பிப்ரவரி 5

(D) நவம்பர் 14

Answer:  D

32.கல்லணையைக் கட்டியவர் யார்?

(A) ராஜேந்திர சோழன்

(B) ராஜராஜ சோழன்

(C) கரிகாலன்

(D) சுந்தர சோழன்

Answer:  C

33.திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் இருக்கிறது?

(A) 1330 

(B) 133

(C) 3

(D) மேற்கண்ட எதுவுமில்லை

Answer:  B

34.சிலப்பதிகாரத்தை எழுதியவர்

(A) கம்பர்

(B) சீத்தலைச் சாத்தனார்

(C) இளங்கோவடிகள்

(D) வியாசர்

Answer:  C

35. உயிரெழுத்துக்கள் எத்தனை?

(A) 18

(B) 216

(C) 247

(D) 12

Answer:  D

36. திருமலை திருப்பதி எந்த மாநிலத்தில் இருக்கிறது?

(A) கர்நாடகா

(B) புதுச்சேரி

(C) ஆந்திரா

(D) தெலுங்கானா

Answer:  C

37.இட்லி மாவு அரைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள்

(A) உளுந்து, அரிசி

(B) அரிசி, கோதுமை

(C) உளுந்து, கடலைப்பருப்பு

(D) அரிசி, துவரம்பருப்பு

Answer:  A

38.நல்ல முட்டையை எவ்வாறு கண்டறிவது?

(A) நல்ல முட்டை நீரில் மிதக்கும்

(B) நல்ல முட்டை நீரில் மூழ்கும்

(C) கெட்ட முட்டை நீரில் சுழலும்

(D) நல்ல முட்டையா அல்லது கெட்ட முட்டையா என்று கண்டறிய முடியாது

Answer:  B

39.சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் எது?

(A) சிதம்பரம்

(B) சேலம்

(C) சென்னை

(D) மதுரை

Answer:  D

40.நல்லெண்ணை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

(A) வேர்கடலை

(B) சூர்யகாந்தி

(C) எள்

(D) ஆமணக்கு

Answer:  C

41.பாம்பன் பாலம் எந்த மாவட்டத்தில் இருக்கிறது?

(A) நாகப்பட்டினம்

(B) சென்னை

(C) திருச்சி

(D) இராமநாதபுரம்

Answer:  D

42.கப்பலோட்டிய தமிழன்

(A) சிதம்பரனார்

(C) குமரன்

(B) வாஞ்சிநாதன்

(D) அரவிந்த்

Answer:  A

43. பொருத்துக.

(a) ஆத்திசூடி             – 1. வியாசர்

(b) திருக்குறள்          – 2.கல்கி

(c) பார்த்திபன் கனவு – 3.வள்ளுவர்

(d) மகாபாரதம்         – 4.ஔவையார்

          (a)  (b)  (c)  (d)

(A)     2     3    4      1

(B)     3     2    4      1

(C)     4     3    2      1

(D)     4     1    3      2

Answer:  C

44.ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலை எழுதியவர்

(A) பாரதிதாசன்

(B) பாரதியார்

(C) சந்தானபாரதி

(D) பாரதி பாஸ்கர்

Answer:  B

45. ராமரின் மனைவி

(A) பாஞ்சாலி

(B) மண்டோதரி

(C) சூர்ப்பநகை

(D) மேற்கண்ட எவருமில்லை 

Answer:  D

46. பொதுவாக காய்கறிகளை

(A) வெட்டி கழுவவேண்டும்

(B) கழுவிவெட்ட வேண்டும்

(C) கழுவத் தேவையில்லை

(D) வெட்டுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் நீரில் ஊற வைக்க வேண்டும்

Answer:  B

47. பாத்திரங்களை கழுவும் போது,

(A) குழாயின் தண்ணீரை வேகமாக திறந்துவிட்டு கழுவ வேண்டும்.

(B) குழாயின் தண்ணீரை மெதுவாக திறந்துவிட்டு கழுவ வேண்டும்.

(C) வாளியில் தண்ணீரை எடுத்து வைத்து கழுவ வேண்டும்.

(D) மேற்கண்ட எதுவுமில்லை

Answer: C

48.பொருத்துக.

(a) தூத்துக்குடி – 1.முறுக்கு

(b) மணப்பாறை – 2. நாய்

(c) ராஜபாளையம் – 3. பாய்

(d) பத்தமடை         – 4.முத்து

       (a) (b)  (c)  (d)

(A)   4    3    2     1

(B)   4    2    1     3

(C)   4    2    3     1

(D)   4    1     2    3

Answer: D

49. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் – – – – – – சுருங்கி விட்டது.

(A) காற்று

(B) மழை

(C) உலகம்

(D) விலை

Answer: C

50. உச்ச நீதிமன்றம் எங்கே  இருக்கிறது?

(A) மும்பை

(C) பாட்னா

(B) கல்கத்தா

(D) டெல்லி

Answer: D

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments