Madras High Court Office Assistant and Chobdar post answer key
பகுதி – அ
1. தமிழகத்தின் ஆளுநர் யார்?
(A) பன்வாரிலால் புரோஹித்
(B) தமிழிசை சௌந்தரராஜன்
(C) ஸ்டாலின்
(D) இறையன்பு
Answer: A
2.யாருடைய பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது?
(A) அப்துல் கலாம்
(B) நேரு
(C) மகாத்மா காந்தி
(D) ராதாகிருஷ்ணன்
Answer: D
3.இந்த வருடம் இந்தியா எத்தனையாவது சுதந்திர தினத்தை கொண்டாடியது?
(A) 74
(B) 76
(C) 75
(D) 77
Answer: C
4.காற்றை ஒலியாக மாற்றும் இசைக்கருவி
(A) தவில்
(B) மிருதங்கம்
(C) வீணை
(D) நாதஸ்வரம்
Answer: D
5.ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் பெற்ற இந்தியர் யார்?
(A) அனில் சோப்ரா
(B) ஹரி சோப்ரா
(C) நீரஜ் சோப்ரா
(D) மனிஷ் சோப்ரா
Answer: C
6.இந்திய உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி
(A) என்.வி. ரமணா
(B) சதாசிவம்
(C) ரஞ்சன் கோகாய்
(D) சந்திரசூட்
Answer: A
7.புவியியல் வரைபடத்தில் நீல நிறம் எதை குறிக்கிறது ?
(A) நீர்நிலைகள்
(B) மலைகள்
(C) பாலைவனம்
(D) சமவெளி
Answer: A
8.பாண்டிய மன்னர்களின் கொடியில் இருப்பது
(A) புலி
(B) சிங்கம்
(C) அம்பு வில்
(D) மீன்
Answer: D
9.குக்கரில் சாதம் வைக்க ஒரு டம்ளர் அரிசிக்கு பொதுவாக எத்தனை டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்?
(A) 1
(B) 2 முதல் 3
(C) 6 முதல் 8
(D) 9
Answer: B
10.வீட்டை துடைக்க பயன்படுவது
(A) லைசால்
(B) ஹார்பிக்
(C) ஆலா
(D) கிளிசரின்
Answer: A
11.மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் பொதுவாக எந்த கிழமையில் நடைபெறும்?
(A) வியாழக்கிழமை
(B) புதன் கிழமை
(C) செவ்வாய் கிழமை
(D) திங்கள் கிழமை
Answer: D
12. நீதிமன்றம் ➨நீதி என்றால்
பள்ளிக்கூடம் ➨ – – – – ஆகும்.
(A) ஆசிரியர்
(B) மாணவன்
(C) கல்வி
(D) பெற்றோர்
Answer: C
13.ஒரு செவ்வகத்தில் எத்தனை பக்கங்கள் இருக்கும்?
(A) 2
(B) 4
(C) 6
(D) 8
Answer: B
14. இந்தியாவின் மிக உயரிய விருது
(A) பத்மபூஷன்
(B) பத்மவிபூஷன்
(C) பரம்வீர் சக்ரா
(D) பாரத ரத்னா
Answer: D
15.மனித உடலின் மிகப்பெரிய எலும்பு எது?
(A) தொடை எலும்பு
(B) முதுகு தண்டுவடம்
(C) காரை எலும்பு
(D) விலா எலும்பு
Answer: A
16.சமீபத்தில் ஆப்கானிஸ்தான் முழுவதையும் – – – கைப்பற்றினர்.
(A) லஷ்கர்-இ-தொய்பா
(B) அமெரிக்கா
(C) தாலிபான்கள்
(D) மாவோயிஸ்ட்
Answer: C
17.சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைந்துள்ள இடம் எது?
(A) திருச்சி
(B) கோயம்புத்தூர்
(C) சேலம்
(D) மதுரை
Answer: D
18. 385 என்ற எண்ணை கீழ்க்கண்டவற்றில் எதனால் மிச்சமின்றி வகுக்க முடியாது?
(A) 5
(B) 7
(C) 3
(D) 11
Answer: C
19.உணவை கெட்டுப்போக செய்யும் உயிரியல் காரணி எது?
(A) உலர்தல்
(B) வெப்பம்
(C) ஈரப்பதம்
(D) பாக்டீரியா
Answer: D
20.கீழ்க்கண்டவற்றில் கார்போஹைட்ரேட் எதில் அதிகமாக இருக்கிறது?
(A) நெய்
(B) பழங்கள்
(C) அரிசி
(D) எண்ணெய்
Answer: C
21.கீழ்க்கண்டவற்றில் வித்தியாசமானவற்றை கண்டுபிடி?
(A) கங்கை
(B) அட்லாண்டிக்
(C) ஆர்க்டிக்
(D) ஆஸ்திரேலியா
Answer: A
22. எந்த உறுப்பு மூச்சு விடுதலில் ஈடுபட்டுள்ளது?
(A) சிறுநீரகம்
(B) நுரையீரல்
(C) இதயம்
(D) மூளை
Answer: B
23.கீழ்க்கண்டவற்றில் எது திடப்பொருள் ஆகும்?
(A) மண்ணெண்ணெய்
(B) காற்று
(C) நீர்
(D) ஆப்பிள்
Answer: D
24.இந்தியாவின் ஏவுகணை மனிதன் யார்?
(A) சர்.சி.வி. ராமன்
(B) டாக்டர். அப்துல்கலாம்
(C) டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன்
(D) ராமானுஜம்
Answer: B
25.பனிக்கட்டியால் சூழப்பட்ட கண்டம் எது?
(A) அண்டார்டிகா
(B) ஆசியா
(C) ஐரோப்பா
(D) ஆப்பிரிக்கா
Answer: A
26.கோழிப் பண்ணை தொழிலுக்கு பிரசித்தி பெற்ற இடம்
(A) அரியலூர்
(B) சேலம்
(C) நாமக்கல்
(D) தஞ்சாவூர்
Answer: C
27.விலங்குகளைப் பாதுகாக்க உதவும் அமைப்பு எது?
(A) ப்ளூ கிராஸ்
(B) ரெட் கிராஸ்
(C) ஒயிட் கிராஸ்
(D) பிளாக் கிராஸ்
Answer: A
28.கீழ்க்கண்டவற்றில் எந்த கோட்டை விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டது?
(A) உதயகிரி
(B) வேலூர்
(C) செஞ்சி
(D) மேற்கண்ட எதுவுமில்லை
Answer: B
29.பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
(A) எம்.ஜி.ஆர்
(B) காமராஜர்
(C) அண்ணாதுரை
(D) பக்தவச்சலம்
Answer: B
30.Covid-19 வைரஸ் எந்த ஊரில் முதன்முறையாக கண்டறியப்பட்டது?
(A) பீஜிங்
(B) வுஹான்
(C) ஷாங்காய்
(D) மேற்கண்ட எதுவுமில்லை
Answer: B
31.படித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள மாநிலம் எது?
(A) தமிழ்நாடு
(B) குஜராத்
(C) கேரளா
(D) பீகார்
Answer: C
32.சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி
(A) துருவப் பகுதி
(B) இமயமலை
(C) இந்தியா
(D) தமிழ்நாடு
Answer: A
33.மனுநீதி சோழனிடம் நீதி கேட்டு வந்த விலங்கு
(A) யானை
(B) பசு
(C) குதிரை
(D) ஆடு
Answer: B
34.மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எது?
(A) துளசி
(B) கற்பூரவள்ளி
(C) கீழாநெல்லி
(D) தூதுவளை
Answer: C
35.கீழ்க்கண்டவற்றில் முத்துலட்சுமி ரெட்டி என்பவர் நினைவாக செயல்படுத்தப்படும் திட்டம் எது?
(A) கலப்பு திருமண உதவித் திட்டம்
(B) அனாதை பெண் குழந்தைகளுக்கான உதவித் திட்டம்
(C) ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண திட்டம்
(D) விதவை மறுமண உதவித் திட்டம்
Answer: A
பகுதி – ஆ
36.குறிஞ்சி என்பது
(A) கடலும் கடல் சார்ந்த இடமும்
(B) மலையும் மலை சார்ந்த இடமும்
(C) மணலும் மணல் சார்ந்த இடமும்
(D) மேற்கண்ட எதுவும் இல்லை
Answer: B
37.சீரிளமை என்பதை பிரித்து எழுத கிடைப்பது
(A) சீர் + இளமை
(B) சீரி + இளமை
(C) சீர்மை + இளமை
(D) மேற்கண்ட எதுவுமில்லை
Answer: C
38.கீழ்க்கண்டவற்றில் எது சூரியனை குறிக்காது?
(A) ஆதவன்
(B) பகலவன்
(C) ஞாயிறு
(D) திங்கள்
Answer: D
39.அக்னி சிறகுகள் என்ற நூலை எழுதியவர்
(A)அப்துல் கலாம்
(B) கருணாநிதி
(C) அறிஞர் அண்ணா
(D) ராஜகோபாலாச்சாரி
Answer: A
40. தமிழ் + எங்கள் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
(A) தமிழங்கள்
(B) தமிழுங்கள்
(C) தமிழ் எங்கள்
(D) தமிழெங்கள்
Answer: D
41.தொன்மை என்னும் சொல்லின் பொருள்
(A) புதுமை
(B) பழமை
(C) பெருமை
(D) சிறுமை
Answer: B
42.சித்தம் என்பதன் பொருள்
(A) உள்ளம்
(B) மனம்
(C) குணம்
(D) வனம்
Answer: B
43.”கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற குறள் எந்த அதிகாரத்தில் இருக்கிறது
(A) வாய்மை
(B) கல்வி
(C) கல்லாமை
(D) ஊழ்
Answer: B
44.தவறான சொல்லை கண்டறிக.
(A) கண்டான்
(B) வென்ரான்
(C) நண்டு
(D) வண்டி
Answer: B
45.சரியான வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்.
(A) முளையிலே விளையும் தெரியும் பயிர்
(B) பயிர் விளையும் முளையிலே தெரியும்
(C) விளையும் பயிர் முளையிலே தெரியும்
(D) முளையிலே தெரியும் பயிர் விளையும்
Answer: C
46.விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
(A) நம் முகம் மாறினால்
(B) நம் வீடு மாறினால்
(C) நாம் நன்கு வரவேற்றால்
(D) நம் முகவரி மாறினால்
Answer: A
47.வீட்டு பயன்பாட்டிற்காக பொருள் வாங்குபவர்
(A) நுகர்வோர்
(B) தொழிலாளி
(C) முதலீட்டாளர்
(D) நெசவாளி
Answer: A
48.காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது?
(A) கோவை
(B) தஞ்சாவூர்
(C) மதுரை
(D) சிதம்பரம்
Answer: C
49.அன்னை தெரசாவுக்கு – – -க்கான நோபல் பரிசு கிடைத்தது.
(A) பொருளாதாரம்
(B) இயற்பியல்
(C) மருத்துவம்
(D) அமைதி
Answer: D
50. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று
(A) குறுந்தொகை
(B) நற்றினை
(C) பத்துப்பாட்டு
(D) வளையாபதி
Answer: D