HomeSCIENCE AND TECHNOLOGYWhat is 1G,2G,3G,4G,5G in Tamil

What is 1G,2G,3G,4G,5G in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

What is 1G,2G,3G,4G,5G in Tamil

5ஜி (5G) என்பது 5வது தலைமுறை தொழில்நுட்பம் ஆகும்.

5G – 5th Generation Mobile Network

உலகிலேயே முதன் முதலாக 5G டெக்னாலஜி  பயன்படுத்தப்பட்ட இடம் எது?

பியாங்சங் ஒலிம்பிக் கிராமம்  (தென் கொரியா)

5G-இல் பல  வகைகள் இருக்கின்றன. அது டேட்டாவை அனுப்பவும் பெறவும் பல்வேறு வகையான ரேடியோ சிக்னல்களை பயன்படுத்துகின்றன. இந்த வெவ்வேறு வகைகள்  ஒவ்வொன்றும் பல வேறுபட்ட பண்புகளை கொண்டுள்ளது.

5G சேவையின் இரண்டு முக்கிய வகைகள் :

1.மில்லிமீட்டர் வேவ் : இது MM Wave என அழைக்கப்படுகிறது.

MM Wave:

மில்லிமீட்டர் வேவ் (Millimeter Wave) ஆனது ஒரே நேரத்தில் நிறைய தரவை (Data) பெறுகின்றது.

மில்லிமீட்டர் வேவ் தொழில்நுட்பம் வேகமான, நிலையான 4G-ஐ விட 50 மடங்கு வேகமாக இருக்கும்.

MM Wave – Millimeter Wave

Millimeter waves என்பது எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியோ அலைகள்  ஆகும்.

இது ஒரு ஜிபி (1GB) தரவை (Data) சில நொடிகளில் மாற்றும் திறனை பெற்றுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு சில நொடிகளில் எந்த ஒரு திரைப்படத்தையும் பதிவிறக்கம்  செய்ய முடியும்.

2. சப் – 6 ஜிகா ஹெர்ட்ஸ்  – Sub 6 Gigahertz

இந்த சப் – 6 ஜிகாஹெர்ட்ஸ் பிரிவானது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

A) லோ பேண்ட் (Low Band)

B) மிட்-பேண்ட் (Mid Band)

இந்த தொழில்நுட்பமானது, வயர்லெஸ் நெட்வொர்க்கின்  (Wireless Network) வேக திறனை அதிகரிக்க உதவுகிறது.

Speed Sales:

5G தொழில்நுட்பத்தின் இரண்டாவது தளமான வேக அடிப்படை, மில்லி மீட்டர் வேவ் வரம்பில் வரும் பிரச்சினைகளுக்கு ஈடு செய்ய உதவுகிறது.

Bimforming :

Bimforming என்பது அனைத்து மூலங்களிலும் ஒரு மானிட்டரை வைத்திருக்கக்கூடிய ஒரு தொழில் நுட்பமாகும். மேலும் ஒரு சமிக்ஞையில் தடையாக இருந்தால் உடனடியாக மற்றொரு வேக கோபுரத்திற்கு மாற்ற இயலும்.

Phool duplex :

Phool duplex என்பது அதிர்வெண் இசைக்குழுவுடன் ஒரே நேரத்தில் தரவை அனுப்பும் மற்றும் பெறும் திறன் கொண்டது.

Maximum MIMO:

பல உள்ளீடு மற்றும் பல வெளியீடு இந்த தொழில்நுட்பத்தின் ஐந்தாவது அடிப்படைக் கூறு ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், இணைய போக்குவரத்தை நிர்வகிப்பதன் மூலம் பெரிய செல் கோபுரங்களின் வேக திறனை பராமரிக்க இது உதவுகிறது.

What is NEST?

NEST – New Emerging Strategy Technology 

NEST ஆனது 5ஜி (5G) மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில்(Artificial intelligence), நமது நாட்டுடன் வெளிநாட்டுப் பங்குதாரர்கள் (Collaboration With Foreign Partners) சேர்ந்து செயல்பட வழிவகை செய்யும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1G சேவை :

  • முதன்முதலில் வர்த்தகரீதியாக பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவையாகும்.
  • இந்த சேவையானது 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த சேவையானது நமக்கு அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது.
  • அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை  மட்டுமே  கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அன்றைய காலகட்டத்தில், இந்த 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த பேட்டரி சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Drawbacks of 1G

  • Poor Battery
  • Poor voice quality
  • Large in size 
  • No security
  • Frequency call drop

2G சேவை :

  • 1991 ஆம் ஆண்டு முதன் முதலாக 2G சேவை பின்லாந்து நாட்டில் தொடங்கப்பட்டது.
  • முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்திய சேவை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
  •  இந்த சேவையில் போனில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம். 2G சேவையில் தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் இதில் அறிமுகமாகின.
  •  இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இன்டர்நெட் சேவைகளுக்கு முதல் விதை போட்டது இந்த 2G சேவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
  •  இந்த 2G சேவையில் தான் முதன் முதலாக சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன.
  • 2G சேவையானது இப்போது இருக்கும் இன்டர்நெட் வேகத்தை ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே இன்டர்நெட் வேகத்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

3G சேவை :

  • 2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை  அதிகமானதையடுத்து,  அதிகமான இன்டர்நெட் வேகத்தின் தேவை ஏற்பட்டது. இதன் காரணமாக சிக்னல்களை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் ‘Packet Switching System’ அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது.
  • 3G சேவையிலும் கூட பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இன்டர்நெட் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  •  நம் இந்திய நாட்டுக்கு மிக தாமதமாக தான் 3G வந்து சேர்ந்தது என்றாலும், ஜப்பான் நாட்டில் 2001-ம் ஆண்டே இந்த சேவை அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
  • வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ் வசதி ஆகியவை இதற்குப் பிறகுதான் சாத்தியமானது என்பது இந்த சேவையில் மட்டுமே.

4G சேவை :

  • 3G சேவையைவிட அதிக இன்டர்நெட் வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவையானது உருவாக்கப்பட்டது.
  • 2009 ஆம் ஆண்டு முதன் முதலாக தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  •  அதிவேகமான இன்டர்நெட் வசதி, துல்லியமான வீடியோ கால்கள் வசதி, நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது என தொலைத் தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது தான் இந்த 4G சேவை. ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேலும் லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை என்பது  குறிப்பிடத்தக்கது.

5G சேவை :

  • 4G சேவை தான் வந்துவிட்டதே, இனி இன்டர்நெட் உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் 5G சேவையானது அறிமுகமாக இருக்கிறது.
  •  இந்த சேவையானது அறிமுகமான பிறகு, இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றம் ஆனது 70 சதவீதத்திற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் (Cloud) வசதியில் சேமிக்கப்படும் என்று அறிவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.                
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments