Homeசினிமாபிச்சைக்காரன் 2 விமர்சனம் | இப்படி ஒரு விஜய் ஆண்டனியின் படமா? பிச்சைக்காரன் 2 படத்தில்...

பிச்சைக்காரன் 2 விமர்சனம் | இப்படி ஒரு விஜய் ஆண்டனியின் படமா? பிச்சைக்காரன் 2 படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி

THATSTAMIL-GOOGLE-NEWS

பிச்சைக்காரன் 2 விமர்சனம் | இப்படி ஒரு விஜய் ஆண்டனியின் படமா? பிச்சைக்காரன் 2 படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் படமானது 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி ஒரு புது அவதாரம் எடுத்து இயக்குனராக பிச்சைக்காரன் 2 படத்தில் அவரது இன்னொரு முகத்தை காட்டியுள்ளார்.

Pichaikkaran 2 Release date ➨ 19 May 2023

 

பிச்சைக்காரன் 2 படமானது தெலுங்கில் பிச்சகாடு 2 என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தின் மையக்கருத்து என்ன ?

பிச்சைக்காரன் 2 விமர்சனம் pichaikkaran 2 review tamil

பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடங்களில் பணக்காரனாகவும் பிச்சைக்காரனாகவும் நடித்துள்ளார். பணக்காரனாக நடித்த விஜய் ஆண்டனிக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்கின்றனர். இதற்குப் பிறகுதான் கதை சூடு பிடிக்கிறது. பிச்சைக்காரனாக படத்தில் வலம் வரும் விஜய் ஆண்டனி எப்படி அவருடைய எதார்த்த பாணியில் கதையைக் கொண்டு செல்கிறார் என்பதுதான் மீதி கதை…

பிச்சைக்காரன் 2 படத்தில் முதல் பாதியில் கதை சுவாரசியமாக அமையவில்லை என்றாலும் இரண்டாவது பாதியில் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 2 படத்தின் இரண்டாவது பாதியில் சண்டைக் காட்சிகள் மற்றும் வசனங்கள், செண்டிமெண்ட் காட்சிகள் போன்றவைகளில் தூள் கிளப்பியுள்ளார் விஜய் ஆண்டனி…

Pichaikkaran 2 Cast

விஜய் குருமூர்த்தி மற்றும் சத்யா என இரட்டை வேடத்தில் விஜய் ஆண்டனி

ஹேமாவாக காவ்யா தாபர்

ஒய்.ஜி.மகேந்திரன் விஜய் குருமூர்த்தி தந்தையின் செக்ரட்டரி

மன்சூர் அலிகான் கோபாலாக

ஹரீஷ் பெராடி டாக்டராக

ஜான் விஜய் விஜய் குருமூர்த்தியின் நண்பராக

அரவிந்தனாக தேவ் கில்

யோகி பாபு பிச்சைக்காரனாக

ராதா ரவி முதல்வராக

பிச்சைக்காரன் 2 படத்தில் ஆண்டி பிகிலி (Anti bikili)

Pichaikkaran 2 Anti bikili movie review in tamil

பிச்சைக்காரன் 2 படத்தில் ஆண்டி பிகிலி (Anti bikili) என்ற பெயரில் ஒரு புது மீனிங்கை விஜய் ஆண்டனி உருவாக்கியுள்ளார். மக்களை சுரண்டி கொள்ளையடிக்கும் பணக்காரர்களுக்கு வைக்கும் பெயர் இந்த ஆண்டி பிகிலி என புதுப்புது அர்த்தத்தை வெவ்வேறு விதமாக பல விளக்கங்களை விளக்கி எதார்த்தமாக விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை கொண்டு சென்றுள்ளார்.

பிச்சைக்காரன் 2 விமர்சனம் | Pichaikkaran 2 Review Tamil

பிச்சைக்காரன் 2 விமர்சனம்

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பாதியை கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கலாம். பிச்சைக்காரன் 2 படத்தின் இரண்டாவது பாதியில் தூள் கிளப்பியுள்ளார் விஜய் ஆண்டனி. ரொமான்ஸ் காட்சிகள் அந்த அளவிற்கு இடம்பெறவில்லை. இருந்தாலும் செண்டிமெண்ட் காட்சிகளில் கதை விறுவிறுப்பாக செல்கிறது. காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். காமெடி காட்சிகள் அந்த அளவிற்கு இடம்பெறவில்லை. பிச்சைக்காரன் 2 படத்தின் தீம் மியூசிக் வேற லெவல்… ஆண்டி பிகிலி பெயரில் விஜய் ஆண்டனி கொடுக்கும் விளக்கம் விறுவிறுப்பாக கதையை கொண்டு செல்கிறது. மொத்தத்தில் சமூகத்திற்கான ஒரு சிறந்த படமாக பிச்சைக்காரன் 2 படம் இருக்கிறது.

அது என்னமோ தெரியல விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் வெளியான சில நாட்களில் பண மதிப்பு இழப்பு ரூபாய் 500, 1000 செல்லாது என்று அறிவிப்பு வெளியானது. அதேபோல் இந்த பிச்சைக்காரன் 2 படமும் வெளியான பின்பு ரூபாய் 2000 செப்டம்பர் மாதத்திற்கு பின்பு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தத்தில் ஊழலற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என விஜய் ஆண்டனியும் அவருடைய படத்தில் வெளிப்படுத்துகிறார். அதேபோல அவரது படம் வெளியாகிய சில நாட்களில் ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்கலாமே,

அதிர்ஷ்டம் தரும் எலுமிச்சை மற்றும் மிளகாயை பற்றி உங்களுக்கு தெரியுமா ?
சனியின் பிடியில் சிக்கித் தவிப்பவரா நீங்கள் இதோ உங்களுக்கான வாழ்வியல் பரிகாரங்கள்
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments