TNPSC EXAM PORTAL,TNPSC,TNPSC EXAM,TNPSC GROUP 1,TNPSC GROUP 2,TNPSC GROUP 4,TNPSC CURRENT AFFAIRS,TNPSC PORTAL CURRENT AFFAIRS, STUDY MATERIALS, ONLINE TESTS, MOCK TESTS, QUIZ, TEST BATCH FOR TNPSC GROUP 4 , GROUP2A,GROUP2, GROUP1,VAO EXAMS.
TNPSC EXAM PORTAL
“ உன்னுடைய முயற்சியே
உன்னுடைய வெற்றியின் முதல் படி”
“ உன்னுடைய தோல்விகளே உன்னை
சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”
– SAKTHIVEL MURUGANANTHAM
TNPSC என்பதன் விரிவாக்கம்
TNPSC – Tamil Nadu Public Service Commission
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
கோச்சிங் சென்டர் செல்லாமல் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வில் வீட்டிலிருந்து வெற்றி பெற முடியுமா?
இந்தக் கேள்வி பெரும்பாலும் போட்டி தேர்விற்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள் மனதில் இயல்பாக தோன்றும் ஒரு சந்தேகம்தான்.
TNPSC Syllabus | Download TNPSC Syllabus Pdf |
TNPSC Group 1 Syllabus | Download |
TNPSC Group 2 Syllabus | Download |
TNPSC Group 2 Mains Tamil Syllabus | Download |
TNPSC Group 2 Prelims General English Model Question Paper | Download |
TNPSC Group 2 Mains Model Question Paper | Download |
High Court Services (All Posts) | Download |
Combined Civil Services Examination – III (TNPSC Group 3A Services) | Download |
Combined Civil Services Examination – IV (TNPSC Group 4 and VAO) | Download |
TNPSC Group 4 and VAO Model Question Paper | Download |
TNPSC Tamil Compulsory Eligibility Descriptive Type TNPSC Group 1 |
Download |
TNPSC Tamil Compulsory Eligibility Descriptive Type Model Question Paper | Download |
TNPSC Tamil Compulsory Eligibility Objective Type | Download |
TNPSC Tamil Compulsory Tamil Eligibility cum Scoring Test | Download |
TNPSC Forest Apprentice (Group-VI Services) | Download |
TNPSC EO EXAMS GRADE-I Executive Officer, Grade-I In Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (Group-VII-A Services) |
Download |
TNPSC EO EXAMS GRADE-III Executive Officer, Grade-III In Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (Group-VII-B Services) |
Download |
TNPSC EO EXAMS GRADE-IV Executive Officer, Grade-IV In Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service (Group-VIII Services) |
Download |
Post of Assistant Agricultural Officer (Tamil Version) | Download |
Post of Assistant Agricultural Officer (English Version) | Download |
ஏன் இப்படி ஒரு சந்தேகம் TNPSC போட்டித் தேர்வர்கள் மனதில் நிகழ்கிறது?
- எந்த புத்தகத்தை படிப்பது?
- எதைப் படிக்க வேண்டும்?
- எதைப் படிக்க கூடாது?
- எப்படி படிக்க வேண்டும்?
- எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்?
- எப்படி தேர்வினை அணுக வேண்டும்?
- எப்படி படித்த பாடத்தில் இருந்து குறிப்பு (Notes Making) எடுக்க வேண்டும்?
- நடப்பு நிகழ்வுகளுக்கு எவ்வாறு தயார் செய்வது?
- தேர்வுகள் எழுதி அதை பயிற்சி செய்வதன் (Test Practice) முக்கியத்துவம்?
- நேர மேலாண்மையின் முக்கியத்துவம்?
- குறைந்த நேரத்தில் எப்படி Revision செய்வது?
உங்களது TNPSC சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கு எங்களது பதில்கள் பின்வருமாறு,
எந்த புத்தகத்தை படிப்பது?
பொதுத்தமிழ் – POTHU TAMIL
- ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் தமிழ் புத்தகம் படிக்க வேண்டும்.
6th to 12th Std New Samacheer tamil books.
- ஒரு சில பாடங்கள் பழைய சமச்சீர் தமிழ் புத்தகத்தில் இருந்து படிக்க வேண்டும்.
- TNPSC GROUP 2, TNPSC GROUP 2A, TNPSC GROUP 4, VAO, EO EXAMS ➨ முந்தைய வருட வினாத்தாள்களை பயிற்சி செய்ய வேண்டும்.
- குறைந்தது ஐந்து வருட வினாத்தாள்கள் பயிற்சி செய்வது நல்லது. தமிழில் ஒரு சில கேள்விகள் திரும்பத்திரும்ப இடம்பெறும்.
- பொதுத்தமிழ் பகுதியில் இடம்பெறும் கேள்விகளின் எண்ணிக்கை ➨ 100
டிஎன்பிஎஸ்சி சிலபஸை அடிப்படையாக வைத்து பொதுத்தமிழ் கேள்விகளின் எண்ணிக்கை,
- இலக்கணத்திலிருந்து ➨ 25 வினாக்கள் முதல் 32 வினாக்கள் வரை கேட்கப்படும்.
- இலக்கியத்திலிருந்து ➨ 33 வினாக்கள் முதல் 37 வினாக்கள் வரை கேட்கப்படும்.
- தமிழ் அறிஞர்கள் பகுதியிலிருந்து ➨ 34 வினாக்கள் முதல் 38 வினாக்கள் வரை கேட்கப்படும்.
தமிழ் பாட புத்தகத்தை அடிப்படையாக வைத்து கேள்விகளின் எண்ணிக்கை,
புதிய பாட புத்தகத்தை (NEW SAMACHEER BOOKS) படித்தால்,
- 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 28 முதல் 35 கேள்விகள் வரை TNPSC வினாத்தாளில் இடம்பெறும்.
- 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை 45 முதல் 55 கேள்விகள் வரை TNPSC வினாத்தாளில் இடம்பெறும்.
- 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை 10 முதல் 15 கேள்விகள் வரை TNPSC வினாத்தாளில் இடம்பெறும்.
பழைய பாட புத்தகத்தை (OLD SAMACHEER BOOKS ) படித்தால்,
- ஒருசில பாடத்தை மட்டும் படிக்க வேண்டும்.
- 4 முதல் 8 கேள்விகள் வரை TNPSC வினாத்தாளில் இடம்பெறும்.
பொது அறிவியல் – GENERAL SCIENCE
- 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும்.
6th to 10th Std New Samacheer Science books.
- ஒருசில பாடத் தலைப்புகள் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு (Chemistry, Physics, Biology books) புத்தகம் படிக்க வேண்டும்.
நடப்பு நிகழ்வுகள் – CURRENT AFFAIRS
- தினமணி செய்தித்தாள் / தமிழ் ஹிந்து செய்தித்தாள் படிக்க வேண்டும்.
How to Study TNPSC Current Affairs – Click here
புவியியல் – GEOGRAPHY
- 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் சமூக அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும். (அதாவது சமூக அறிவியல் புத்தகம் – புவியியல் பாடத் தலைப்புகள் சிலபஸை வைத்து படிக்க வேண்டும்)
6th to 10th Std New Samacheer Social Science books – Geography Portions.
- ஒருசில பாடத் தலைப்புகள் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு புவியியல் (Geography Books) புத்தகம் படிக்க வேண்டும்.
இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் – HISTORY AND CULTURE OF INDIA
- 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் சமூக அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும். (அதாவது சமூக அறிவியல் புத்தகம் – வரலாறு பாடத் தலைப்புகள் சிலபஸை வைத்து படிக்க வேண்டும்)
6th to 10th Std New Samacheer Social Science books – History Portions.
- 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு (History Books) புத்தகம் படிக்க வேண்டும்.
India and Tamil Nadu Culture
11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு “அறவியலும் இந்திய பண்பாடும்” புத்தகம் படிக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு – INDIAN POLITY
- 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் சமூக அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும். (அதாவது சமூக அறிவியல் புத்தகம் – குடிமையியல் பாடத் தலைப்புகள் சிலபஸை வைத்து படிக்க வேண்டும்)
6th to 10th Std New Samacheer Social Science books – Civics Portions.
- 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science Books) புத்தகம் படிக்க வேண்டும்.
Read Also,
Indian Polity by M Laxmikanth – English medium students
இந்திய அரசியலமைப்பு – க. வெங்கடேசன் – Tamil medium students
இந்திய பொருளாதாரம் – INDIAN ECONOMY
- 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் சமூக அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும். (அதாவது சமூக அறிவியல் புத்தகம் – பொருளியல் பாடத் தலைப்புகள் சிலபஸை வைத்து படிக்க வேண்டும்)
6th to 10th Std New Samacheer Social Science books – Economics Portions.
- 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய பொருளாதாரம் (Indian Economy Books) புத்தகம் படிக்க வேண்டும்.
இந்திய தேசிய இயக்கம் – INDIAN NATIONAL MOVEMENT
- 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் சமூக அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும். (அதாவது சமூக அறிவியல் புத்தகம் – வரலாறு/ இந்திய தேசிய இயக்கம் பாடத் தலைப்புகள் சிலபஸை வைத்து படிக்க வேண்டும்)
6th to 10th Std New Samacheer Social Science books – History/Indian National movement Portions.
- 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு (History Books) புத்தகம் படிக்க வேண்டும்.
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
State Board School Books 6-12th Std (Syllabus areas in all subjects, including ethics books)
Government Policy Notes.
References
Official Government Sources:
தமிழ்நாட்டின் வரலாறு, மரபு பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
State Board School Books 6-12th Std (Syllabus areas in all subjects, including ethics books)
APTITUDE AND MENTAL ABILITY
6th to 10th Std Maths Books Enough. (TNPSC Aptitude Syllabus Portions Only)
TNPSC Previous Year Question Papers Practice.
TNPSC EXAMS SHORT SUMMARY
எதைப் படிக்க வேண்டும்?
மேற்குறிப்பிட்டுள்ள புத்தகங்களை டிஎன்பிஎஸ்சி சிலபஸை வைத்து பாடவாரியாக படிக்க வேண்டும்.
பொதுத்தமிழ் பாடத்திட்டத்திற்கு, பாட வாரியாகவும் அதாவது 6வது தமிழ் புத்தகம் முதல் 12வது தமிழ் புத்தகம் வரை தொடர்ந்து படித்து முடிக்கலாம். அதில் தவறு ஏதும் இல்லை. சிலபஸை கையில் வைத்துக்கொண்டு படித்தால் எளிதாக படித்து முடித்துவிடலாம்.
எதைப் படிக்க கூடாது?
ஆனால், பொதுஅறிவு பாடத்திட்டத்திற்கு அவ்வாறு புத்தகம் வாரியாக 6வது முதல் 12வது வரை புத்தகங்களை தொடர்ந்து படிக்க கூடாது. சிலபஸை வைத்துக்கொண்டுதான் படிக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக படித்து முடிக்க முடியும்.
எப்படி படிக்க வேண்டும்?
முதலில் கவன சிதறல் இல்லாத ஒரு சுற்றுச்சூழலை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அதாவது படிப்பதற்கான இடத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அந்த இடம் வீடாக இருக்கலாம் அல்லது நூலகமாக இருக்கலாம். பின்பு படிப்பதற்காக நீங்கள் ஒரு அட்டவணையை போட வேண்டும்.
அடுத்ததாக நீங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திற்கு சென்று, டிஎன்பிஎஸ்சி கொடுத்திருக்கும் சிலபஸை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி சிலபஸை பிரிண்ட் எடுத்துவிட்டு அதை ஒரு முறைக்கு இருமுறை படித்து பார்க்க வேண்டும். பிறகு, டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு என்ன தேவை? டிஎன்பிஎஸ்சி என்ன தேவை இல்லை? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிறகு சிலபஸை வைத்து நீங்கள் பாடத்தை படித்து முடிக்க வேண்டும். படிக்கும் போது கட்டாயமாக முந்தைய வருட வினாத்தாள்களை பார்க்க வேண்டும். கேள்விகள் எவ்வாறு முந்தைய வருட வினாத்தாளில் அமையப் பெற்றுள்ளன என்பதை புரிந்து அதற்கேற்றவாறு படிக்கவேண்டும்.
எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்?
டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு நீங்கள் வேலை செய்து கொண்டு பகுதி நேரமாக படிப்பவர்கள் எனில், 3 முதல் 4 மணி நேரம் குறைந்தது படிக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு நீங்கள் முழு நேரமாக படிப்பவர்கள் எனில், குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தினமும் தொடர்ந்து படிக்க வேண்டும்.
எப்படி தேர்வினை அணுக வேண்டும்?
பதட்டமில்லாமல் மற்றும் தேர்வினை பற்றிய பயமில்லாமல் முதலில் நீங்கள் இருக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி கொடுத்திருக்கும் சிலபஸை அடிப்படையாக வைத்து,
நேரத்தை சரியாக திட்டமிட்டு, முந்தைய வருட வினாத்தாள்களை பயிற்சி செய்து, பிறகு பாடங்களைப் படித்து முடிக்க வேண்டும்.
எப்படி படித்த பாடத்தில் இருந்து குறிப்பு (Notes Making) எடுக்க வேண்டும்?
தற்போது எண்ணற்ற வலைதளங்கள் வந்துவிட்டது. இதிலிருந்து நீங்கள் குறிப்பு எடுக்கலாம்.
நீங்கள் பாடத்திட்டத்தை பள்ளி பாடப் புத்தகத்தில் இருந்து படித்து முடித்த பின்பு, நீங்களாகவே குறிப்பு எடுக்கலாம் அல்லது வலைதளத்தை பயன்படுத்தி குறிப்பு எடுக்கலாம்.
எவ்வாறு குறிப்பு எடுக்க வேண்டும் – மனவரைபடம் ஆகவும், கையெழுத்துப் பிரதியாகவும், டிஜிட்டல் நோட்சாகவும், வரைப்படமாகவும் குறிப்பு எடுக்கலாம்.
Methods of TNPSC Notes Making
Mind map, Flow Diagram, charts, Tables, Shortcuts, Digital Notes, Hand written Notes…
நடப்பு நிகழ்வுகளுக்கு எவ்வாறு தயார் செய்வது?
தினமணி செய்தித்தாள் / தமிழ் ஹிந்து செய்தித்தாள் படிக்க வேண்டும்.
தேர்வுகள் எழுதி அதை பயிற்சி செய்வதன் (Test Practice) முக்கியத்துவம்?
நீங்கள் தொடர்ந்து புத்தகங்களை படித்துக் கொண்டு மட்டுமே இருந்தால், உங்களது படிப்பு திறனை மதிப்பீடு செய்ய முடியாது. ஆதலால் தேர்வு எழுதுவதன் மூலம் உங்களது பலம் மற்றும் பலவீனம் தெரியவரும். அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் உங்களது படிக்கும் திறனை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.
நேர மேலாண்மையின் முக்கியத்துவம்?
திட்டமிட்டு படிப்பதன் மூலம் பாடத்தை எளிதாக படித்து முடித்து விடலாம்.
தொடர் பயிற்சிக்கு நேர மேலாண்மையின் பங்கு மிக முக்கியம்.
ஒரு நாளை 4 பகுதியாக பிரிக்க வேண்டும். அதாவது,
- முதல் பகுதி – பொதுத்தமிழ்
- இரண்டாம் பகுதி – பொது அறிவு
- மூன்றாம் பகுதி – கணிதம்
- நான்காம் பகுதி – தினசரி செய்தி வாசிப்பு மற்றும் முந்தைய வருட வினாத்தாள்களை பயிற்சி செய்தல்.
வாரத்தில் இரு நாட்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் Revision and Test Practice செய்ய வேண்டும்.
குறைந்த நேரத்தில் எப்படி Revision செய்வது?
உங்களது பாடக்குறிப்புகள் (Your Subject Notes) ஒவ்வொரு பாடத்திற்கும் 50 பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக Revision செய்ய முடியும்.
நீங்கள் படித்ததை மட்டும் தொடர்ந்து Revision செய்ய வேண்டும். அதாவது வாரத்தில் இரு நாட்களில் Revision செய்ய வேண்டும்.
TNPSC EXAM Do’s – செய்ய வேண்டியவை
- முதலில் கவன சிதறல் இல்லாத ஒரு சுற்றுச்சூழலை தேர்வு செய்ய வேண்டும். அதாவது படிப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்த இடம் வீடாக இருக்கலாம் அல்லது நூலகமாக இருக்கலாம்.
- பின்பு படிப்பதற்காக ஒரு அட்டவணையை போட வேண்டும்.
First Create a Non- Distraction Environment and Disciplined Study Plan.
- அடுத்ததாக டிஎன்பிஎஸ்சி இணையதளத்திற்கு சென்று, அங்கு டிஎன்பிஎஸ்சி கொடுத்திருக்கும் சிலபஸை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
Next, Go to the TNPSC Website and Download TNPSC Official Syllabus.
- பதிவிறக்கம் செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி சிலபஸை பிரின்ட் எடுத்துவிட்டு அதை ஒரு முறைக்கு இருமுறை படித்துப் பார்க்க வேண்டும். முதலில் தேர்விற்கு என்ன தேவை, என்ன தேவை இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Print TNPSC Official Syllabus and Understand the Syllabus. Read one or two times in that Syllabus. First you need to know what is required and what is not required for the exam.
- டிஎன்பிஎஸ்சி சிலபஸை ஒருமுறைக்கு இருமுறை படித்த பின்பு ,அதற்கு தேவையான பாட குறிப்புகளை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
After Read Syllabus in one or two times, Collect Crucial Information and Resources for that TNPSC Syllabus.
- டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு தகுந்தாற்போல் பள்ளி பாட புத்தகங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து நாம் படித்து நோட்ஸ் எடுக்க வேண்டும். இது தான் கடைசி நேரத்தில் தேர்வர்களுக்கு Revision செய்ய உதவும்.
Collect School books as per the TNPSC Syllabus. Take notes from School books. It is Very Useful for Last time Revision.
- அடுத்ததாக தேர்வர்கள் முந்தைய வருட வினாத்தாள்களை எடுத்து Solve செய்ய வேண்டும்.
Next the Aspirants have to take the previous year’s question papers and solve them.
- தேர்வர்கள் அடுத்ததாக மாதிரி தேர்வுகளை (Model Exams) எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது இணையதளத்தில் எண்ணற்ற இலவச மாதிரித் தேர்வுகள் உள்ளன. அதை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Next Aspirants Take Model Exams. Now So Many Websites freely Provide in Model Exams.
TNPSC EXAM Don’ts – செய்யக்கூடாதவை
- டிஎன்பிஎஸ்சி சிலபஸ் வைத்து படிக்காமல் பள்ளி பாடப் புத்தகங்களை அப்படியே 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து முடிப்பது.
Aspirants Not Follow TNPSC Official Syllabus. Directly Reading in State Board School books at 6th to 12th.
- படிப்பதற்கு தேவையான பாட அட்டவணையை சரியாக தயார் செய்யாமலிருப்பது.
Not Prepare Proper Study Time Table.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோச்சிங் சென்டரில் சேர்ந்து கொள்வது அல்லது இணையதளத்தில் அதிகமான யூடியூப் சேனல்களை பார்த்து நேரத்தை வீணடிப்பது.
Joining One or More Coaching Centers or Wasting Time watching too many YouTube channels on the internet.
- ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளத்திலிருந்து நடப்பு நிகழ்வுகளை எடுத்துப் படிப்பது.
Taking and reading current events from more than one website.
- நோட்ஸ் எடுக்காமல் படிப்பது.
Reading without taking notes.
- படித்த பாடத்தை Revision செய்யாமலிருப்பது.
Not Follow Revision
- மாதிரித் தேர்வுகளை எழுதாமல் இருப்பது.
Not writing Model exams
- தொடர்ச்சியாக படிக்காமல் சில நாட்கள் படிப்பது.சில நாட்கள் படிக்காமல் இருப்பது.
Studying for a few days without reading continuously. Not reading for a few days.
- முந்தைய வருட வினாத்தாள்களை எடுத்து பயிற்சி செய்யாமல் இருப்பது.
Not taking the previous year’s question papers and solve
- சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை பயன்படுத்துவது.
Spend more time on social media.
- ஒரே நேரத்தில் பல தேர்வுகளுக்கு தயார் செய்வது.
Aspirants Prepare Multiple Exams in Same time.
Where to Study TNPSC EXAM
பொது அறிவியல் :6th to 10th Std New Science Books Enough
நடப்பு நிகழ்வுகள்:தினமணி செய்தித்தாள்அல்லதுதமிழ் ஹிந்து செய்தித்தாள்
புவியியல்:6th to 10th Std Geography Books Enough. Some Portions Read in 11th and 12th Std.
APTITUDE:6th to 10th Std Maths Books Enough.TNPSC Previous Year Question Papers Practice.6 முதல் 10 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் கணிதத்தை படித்து பயிற்சி செய்வதற்கு சிரமமாக இருந்தால் கற்கண்டு கணிதம் புத்தகத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் பற்றி கீழே விவரித்துக் கொடுத்துள்ளேன்கற்கண்டு கணிதம் புத்தகம்இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால்,ஒரு முறை மட்டும் பணம் செலுத்தினால் போதும்!!!!போட்டித்தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறும் வரை கற்கண்டு கணிதம் SHORT CUT MATHS மெட்டீரியல்கள் PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு தொடர்ந்து அனுப்பப்படும்!!!!!!Materials Purchase website:
இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம்:6th to 12th Std History Books Enough.
இந்திய அரசியலமைப்பு:6th to 10th Std Civics Books + 11th and 12th Std Political Science Books.Reference Books :இந்திய அரசியலமைப்பு – க. வெங்கடேசன் (Tamil Medium)Indian Polity – Laximikanth Book (English Medium)
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்:State Board School Books 6-12th Std(Syllabus areas in all subjects, including ethics books)Government Policy Notes.References:Official Government Sources:
தமிழ்நாட்டின் வரலாறு, மரபு பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்:State Board School Books 6-12th Std(Syllabus areas in all subjects, including ethics books)
இந்திய பொருளாதாரம்:6th to 10th Std Social Science Books + 11th and 12th Std Books Some Chapters Only.
Short Summary:
TNPSC – Self Study Prepare and Approach Tips:
- Download and Print Official TNPSC Syllabus
- Understand TNPSC Syllabus and Take Analysis Previous Year Question Paper.
- Focus on All Subjects. Don’t Ignore Anyone Subject.
- Collect Authenticated Subject Materials Like Tamil Nadu State Board Books, Some Standard text Books.
- Don’t Hunting Materials.
- Prepare Study Plan and Organize
- Sort Easy and Hard Topics
- Study Consistency – Daily 6 to 8 hours
- Don’t Follow More than one website for Current Affairs
- Study atleast Six Months before the Exam
- Revise Multiple Times
- Solve Previous Year Question Papers
- Take Minimum 15 Mock Tests