Homeஆன்மீகம்Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்

Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்

THATSTAMIL-GOOGLE-NEWS

Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்

வைகுண்ட ஏகாதசி 2023 | Vaikunta ekadasi 2023

வைகுண்ட ஏகாதசி எப்போது?

ஜனவரி 2, 2023 அதிகாலை 3 மணி தொடக்கம்

 

சொர்க்க வாசல் திறப்பு | Sorgavasal Thirappu

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ?

ஜனவரி 2, 2023 அதிகாலை 3 மணி தொடக்கம்

 

வைகுண்ட ஏகாதசி என்றால் என்ன?

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு தினமாகும்.

வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்றைய தினம் திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்த நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து, திருமாலின் புகழ் பாடி பெருமாள் கோவிலுக்கு செல்வர்.

விடியற்காலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்கு திசையில் கதவுகள் எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும் சொர்க்க வாயில் இன்றைய தினம் மட்டுமே திறக்கப்படும். இந்த நிகழ்வினை “சொர்க்க வாயில்” திறப்பு என்பார்கள்.

Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி

கடைப்பிடிப்பவர்கள்:

வைணவர்கள், திருமாலை வழிபடுபவர்கள், இந்துக்கள்

நாள்:

தனுர் மாதம், சுக்லபட்சம், ஏகாதசி திதி

சிறப்பு:

சொர்க்கவாசல் திறக்கப்படுதல்

குறிப்பு:

மகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாக கருதப்படுகிறது.

Vaikunta ekadasi 2023 வைகுண்ட ஏகாதசி 2023

Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி 2023

பெருமாளுக்குரிய விரதங்களிலேயே மிகவும் உன்னதமான விரதமாக கூறப்படுவது ஏகாதசி விரதம். ஒரு வருடத்தில் மட்டும் 24 அல்லது 25 ஏகாதசி திதிகள் வருகின்றன. இந்த ஏகாதசி விரதத்தை பலரும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.

ஆனால் இது எல்லோராலும் கடைப்பிடிக்க முடியாது என்பதற்காக தான் வருடத்தில் ஒரே ஒருமுறையாவது ஏகாதசி விரதம் அனைவரும் இருக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது தான் இந்த வைகுண்ட ஏகாதசி ஆகும்.

வருடத்தின் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை தான் மோட்ச ஏகாதசி என்கிறோம். இந்த நன்னாளில் எவர் ஒருவர் விரதம் இருந்து பெருமாளை உள்ளன்போடு வழிபடுகிறார்களோ அவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன் மோட்சமும் கிடைக்கும் என்பது ஐதீகம் மற்றும் நம்பிக்கை.

Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி அன்று செய்யக்கூடாதவை

வைகுண்ட ஏகாதசி திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நாளில் சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. வாருங்கள் நண்பர்களே, அவை என்னவென்று பார்ப்போம்..

ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் எனப்படும் நினைவு நாள் வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். இது குறிப்பாக வைகுண்ட ஏகாதசி நாட்களில் கடைப்பிடிக்க வேண்டும்.

அன்றைய தினம் கோவில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. கூடுமானவரை கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் குழந்தைகள், நோயாளிகள் முதியவர்களுக்கு பிரசாதம் கொடுக்கலாம்.

ஏகாதசி அன்று உணவு உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவனும், மிகக் கீழான செயல்களில் ஈடுபடுபவனும் நரகத்திற்கு செல்வான்.

ஏகாதசி நாளன்று துளசி இலை பறிக்கக் கூடாது. துளசி இலை தேவைப்படும் பட்சத்தில் முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி விரத முறை

Vaikunda ekadasi 2023 வைகுண்ட ஏகாதசி விரதம்

வைகுண்ட ஏகாதசி விரதம் எப்போது துவங்க வேண்டும்?

Vaikunda Ekadasi Viratham Starting Time

தசமி,ஏகாதசி,துவாதசி ஆகிய மூன்று திதிகளில் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். இதுதான் முழுமையான விரத முறை ஆகும்.

இந்த வருடத்தில் வைகுண்ட ஏகாதசி 2023 ஆம் ஆண்டின் முதல் நிகழ்வாக ஜனவரி 2ஆம் தேதியே வருகிறது. இதனால் ஜனவரி முதல் தேதி அன்று பகல் உணவுடன் உணவு சாப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விரதத்தை துவங்க வேண்டும். ஜனவரி முதல் தேதி அன்று இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜனவரி இரண்டாம் தேதி அன்று அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்வை நேரடியாக கோவிலுக்கு சென்றோ அல்லது டிவி நேரலை வழியாகவோ காண வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்?

Vaikunda Ekadasi Viratham Rules

ஜனவரி இரண்டாம் தேதி சொர்க்க வாசல் திறந்த பிறகு விரதத்தை நீங்கள் துவங்க வேண்டும். நீங்கள் அன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.

தண்ணீர் குடிக்கலாம். தண்ணீரில் துளசி இலைகள் போட்டு தீர்த்தமாக பருகலாம்.

முழு நேரமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைகள், வயதானவர்கள் இருந்தால் கடலை, பழச்சாறு, அவல், பொரி போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம் அதில் தவறு இல்லை.

ஜனவரி இரண்டாம் தேதி அன்று வைகுண்ட ஏகாதேசி நாளில் காலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறப்புக்கு பின் மாலை அருகிலுள்ள விஷ்ணு ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும்.

எந்த நாளில் நாம் கண் விழிக்க வேண்டும் ?

ஜனவரி இரண்டாம் தேதி இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும்.

Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி மந்திரம்

Vaikunda ekadasi 2023 வைகுண்ட ஏகாதசி மந்திரம்

இரவு முழுவதும் திருப்பாவை, விஷ்ணு புராணம் மற்றும் விஷ்ணு நாமம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற நாமங்களை பாராயணம் செய்யலாம்.

இதை செய்ய முடியாதவர்கள் விஷ்ணுவின் எட்டெழுத்து மந்திரமான “ஓம் நமோ நாராயணாய” என எத்தனை முறை உங்களால் முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்யலாம்.

Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி விரதத்தை நிறைவு செய்யும் முறை

ஜனவரி 3 ஆம் தேதி அதிகாலையிலேயே குளித்து, பெருமாளை வணங்கி விரதத்தை நல்லபடியாக இருக்க அருள் செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

பிறகு சமைக்க துவங்கலாம். ஒரு சிலர் 21 வகை காய்கறிகளை பயன்படுத்தி சமைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று பெருமாள் எதிர்பார்க்க மாட்டார். உங்களால் என்ன முடியுமோ அதை சமைத்து, பெருமாளுக்கு தலிகை போட்டு நெய் வைத்தியம் செய்த பிறகு நாமும் சாப்பிடலாம்.

குறிப்பாக உணவில் நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை நிச்சயம் இடம்பெற வேண்டும்.

ஜனவரி 3ஆம் தேதி துவாதசி திதியில் பகலில் வழக்கமான உணவினை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக பகல் முழுவதும் நீங்கள் தூங்க கூடாது.

ஜனவரி 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கேற்றி வழிபட்ட பிறகு தான் நீங்கள் தூங்க செல்ல வேண்டும்.

Vaikunda ekadasi 2023 | திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவ தலங்களில் முதன்மையாக கருதப்படுகின்ற தலம் திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி திருக்கோயில். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பகல் பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு நாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வந்து அருள் பாலிக்கிறார்.

ஏகாதசி நாளன்று ரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளியே வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் எனப்படும் பரமபத வாசல் அல்லது சொர்க்கவாசல் வழியே உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்

Vaikunda ekadasi 2023 | திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை எனப்படும் திருப்பதியிலும் “வைகுண்ட ஏகாதசி விழா” கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் “வைகுண்ட துவாரம்” என அழைக்கப்படுகிறது.

இவ்வாயில் வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும். இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது.

Vaikunda Ekadasi 2023 Date | Vaikunda Ekadasi in English Overview

 

Vaikunda Ekadashi, also known as Mukkoti Ekadasi, is one of the most Popular important Ekadashi. Kerala it is known as Swargavathil Ekadasi

Vaikunda Ekadasi 2023 Date is January 2, 2023

Swarga Vaasal or Paramapada opening is from 3:00 AM on January 2,2023

Please note that in United States and UK it is marked on January 2,2023

In Australia and New Zealand it is marked on January 2,2023

Vaikunda Ekadasi is observed in the Margazhi Month (margali Masam) as per Tamil Calendar and in Dhanurmasam as per Telugu Calendar.

Ekadasi is an Auspicious day dedicated to Bhagvan Srihari Vishnu and falls on the eleventh day of every lunar fortnight in traditional Hindu calendar.

Vaikunda Ekadasi is celebrated with great importance in Tirupati Balaji Temple and
Srirangam Ranganatha swamy Temple and Bhadrachalam Sita Ramachandra Swamy temple. Apart from these temples and all the Vishnu temples dedicated to Bhagvan Vishnu and his incarnations in South India celebrate Vaikunta Ekadasi festival.

The most important ritual on the day in temples is the opening of the Vaikunta Dwaram or Paramapada Vasal door or Sorgavasal thirappu in Vishnu Temples. This Paramapada Vasal door is only opened on the Vaikunda Ekadasi day and devotees are allowed to pass through it. Symbolically the door leads to the Vaikunda abode of Vishnu.

இதையும் படிக்கலாமே,

Marriage Porutham

2023 ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டில் தப்பி தவறி கூட இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கி விடாதீர்கள் அது வீட்டிற்கு நல்லதல்ல!
Happy New year 2023 wishes in Tamil | ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
பொங்கல் பரிசு தொகுப்பு 2022
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments