Homeஆன்மீகம்2023 ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டில் தப்பி தவறி கூட இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கி...

2023 ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டில் தப்பி தவறி கூட இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கி விடாதீர்கள் அது வீட்டிற்கு நல்லதல்ல!

THATSTAMIL GOOGLE NEWS

2023 ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டில் தப்பி தவறி கூட இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கி விடாதீர்கள் அது வீட்டிற்கு நல்லதல்ல!

 

ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கம் என்பது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய அற்புதமான ஒரு நாளாக மக்களுக்கு இருக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டில் நாம் வாங்கும் பொருட்களுக்கும் நாம் செய்யும் செயல்களுக்கும் கூட பலன்கள் உள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டில் வாங்க கூடாத பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள் நண்பர்களே,

Nalla nalil vanga kudathavai

பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஆன்மீக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது. அதேபோல புத்தம் புதிய இந்த புத்தாண்டின் துவக்கத்தில் எவருக்கும் கடனாக பணத்தை நீங்கள் கொடுக்கக் கூடாது. பணம் உங்கள் கையில் இருந்து எக்காரணம் கொண்டும் வீணாக விரயம் ஆகக்கூடாது. அதுபோல அவசர தேவைக்கு கூட நகைகளை இந்த நன்னாளில் அடமானம் வைக்காதீர்கள். இதுவும் உங்களுக்கு ஒரு கடன் போன்றது தான்.

New year tips in Tamil

நல்ல நாட்களிலும் விசேஷமான நாட்களிலும் வாங்க கூடாத ஒரு பொருள் என்னவென்றால் அது எண்ணெய் ஆகும். இந்த எண்ணையை புத்தாண்டு தினமாகிய நன்னாளில் உங்கள் வீட்டிற்க்காக தவறியும் நீங்கள் வாங்காதீர்கள். கோவிலுக்கு எண்ணெய் தானம் செய்பவர்கள் செய்து கொள்ளலாம் அதில் எதுவும் தவறு இல்லை. ஆனால் எந்த வகை எண்ணையாக இருந்தாலும் அதை வீட்டு பயன்பாட்டிற்கு நீங்கள் அன்றைய தினத்தில் வாங்குவதை தவிர்ப்பது நன்மை அளிக்கும். அப்படி எண்ணெய் தீர்ந்து விட்டால் முந்தைய நாளோ அல்லது மறுநாளோ வாங்கிக் கொள்ளுங்கள் புத்தாண்டு தினத்தில் வாங்காதீர்கள். நல்ல நாட்களிலும் மற்றும் விசேஷமான நாட்களிலும் கூட வாங்காதீர்கள்.

இரும்புச் சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் எதுவாயினும் புத்தாண்டின் துவக்கத்தில் வாங்குவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இரும்பால் செய்யப்பட்ட கத்தி, அரிவாள் மனை, அரிவாள், நகவெட்டி, கடப்பாரை,மண்வெட்டி போன்ற வெட்ட கூடிய எந்த வகையான ஆயுதங்களையும் இந்த நன்னாளில் வாங்குவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இரும்பால் செய்யப்பட்ட கூர்மையான ஆயுதங்கள் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கக் கூடியது என்பதால் தான் புதிய ஆண்டின் துவக்கத்தில் இதை வாங்குவது நல்லதல்ல என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் விளக்குகிறது.

Puthandil seiyya kudathavai

உடல்நல குறைபாடு உள்ளவர்கள், அடிக்கடி மருந்து மாத்திரைகளை வாங்குபவர்கள் உங்களுக்கு மருந்து தீர்ந்து போகும் நிலையில் இருந்தால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.புத்தாண்டு தினத்தில் ஒருபோதும் மருந்து மாத்திரைகளை வாங்க வேண்டாம். நமக்கு நல்ல ஒரு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும், இருக்கின்ற உடல்நல குறைபாடுகள் எல்லாம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக்கூடிய அற்புதமான புத்தாண்டின் துவக்கத்தில் இந்த சில பொருட்களை காசு கொடுத்து வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.

Puthandu kurippugal Tamil

குறிப்பாக நெடு எடுக்கக்கூடிய எந்த ஒரு விஷயத்தையும் வீட்டில் புத்தாண்டு தினத்தில் வறுக்கவோ, அரைக்கவோ வேண்டாம். அதாவது, வீட்டில் மிளகாய் பொடி தீர்ந்து விட்டது அல்லது குழம்பு மிளகாய் தூள் காலி ஆகிவிட்டது என்று புத்தாண்டு தினத்தில் மிளகாயை வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்து வந்து விடாதீர்கள். அதேபோல் வீட்டில் புத்தாண்டு தினத்தில் நெடு எடுக்கக்கூடிய மிளகாய் எதையும் வறுக்க வேண்டாம். அப்படி உங்களுக்கு தேவை என்றால் அதை புத்தாண்டு முடிந்த பின்பு மறுநாளில் நீங்கள் அதை செய்வது நல்லது. புத்தாண்டு தினத்தில் தவிர்த்திடுங்கள்.

குறிப்பு:

  • மேற் சொல்லப்பட்ட இரும்பாலான கூர்மையான ஆயுதங்கள், இரும்பால் செய்யப்பட்ட பொருட்கள், நெடு எடுக்கக்கூடிய காரங்கள், மிளகாய், மிளகாய் தூள், எண்ணெய் வகைகள், மருந்து மாத்திரைகள், வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுப்பது போன்ற அனைத்தையும் நல்ல நாட்களிலும் மற்றும் விசேஷமான நாட்களிலும் தவிர்த்து விடுவது நன்மை அளிக்கும். அதற்கு பதிலாக விசேஷ நாட்கள் அல்லது நல்ல நாட்களுக்கு முன்பாக அல்லது நல்ல நாட்கள் விசேஷ நாட்கள் முடிந்த பின்பு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

 

இதையும் படிக்கலாமே,

Happy New year 2023 wishes in Tamil | ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
பொங்கல் பரிசு தொகுப்பு 2022
மரவள்ளி கிழங்கு நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ பயன்கள்
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!