Homeஅசைவ சமையல்பெரிய நாயக்கன்பாளையம் ஆட்டு கறி குழம்பு

பெரிய நாயக்கன்பாளையம் ஆட்டு கறி குழம்பு

THATSTAMIL-GOOGLE-NEWS

பெரிய நாயக்கன்பாளையம் ஆட்டு கறி குழம்பு(Mutton curry)

தேவையானப் பொருட்கள் :

🔷வெள்ளாட்டு முன்னங்கால் கறி – 600 கிராம்
🔷வெள்ளாட்டு நெஞ்சு கரி – 300 கிராம் 🔷வெள்ளாட்டு சுத்து கொழுப்பு – 100 கிராம்
🔷மரசெக்கு கடலெண்ணய் – தேவையான அளவு

வறுத்து அரைக்க

🔷சின்ன வெங்காயம்- 26
🔷நாட்டு தக்காளி – 2 ( பொடியாக நறுக்கியது )
🔷தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
🔷இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
🔷 கொத்தமல்லி விதை – 2 டீஸ்பூன்
🔷சீரகம் – 1 டீஸ்பூன்
🔷மஞ்சள் கொம்பு – 1 இன்ச்
🔷மிளகு – 2 டீஸ்பூன்
🔷வரமிளகாய் – 5
🔷சோம்பு – 1 டீஸ்பூன்
🔷பட்டை – 1 இன்ச்
🔷கிராம்பு – 3
🔷 அன்னாசி பூ – 1
🔷மராட்டிய மொக்கு – 1
🔷கறிவேப்பில்ல – 1 கைப்பிடி
🔷கசாகசா – 1 டீஸ்பூன்
🔷மரசெக்கு கடலெண்ணய்

தாளிக்க

🔷பசு வெண்ணைய் – 1 டீஸ்பூன்
🔷சின்ன வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )
🔷கறிவேப்பில்ல – 1 கொத்து
🔷முந்திரி பருப்பு – 15
🔷பட்டை -1
🔷ஏலக்காய் – 1
🔷கடுகு – 1/2 டீஸ்பூன் 1 –

பெரிய நாயக்கன்பாளையம் ஆட்டு கறி குழம்பு

செய்முறை :

🥣முதலில் ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்துக் கொள்ளவும். பின் ஆறியதும் மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

🥣பின்னர் பொடியாக நறுக்கிய வைத்துள்ள வெங்காயம் , தக்காளி , இஞ்சி – பூண்டு விழுது மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைத்து கொள்ளவும். அம்மியில் அனைத்து பொருட்களையும் வைத்து நன்றாக மசித்து சிறிது சிறிதாக குளிர்ந்த தண்ணீர் விட்டு நன்றாக மையமாக விழுதாக நைசாக அரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும் .

🥣பின் ஒரு அகலமான வாணலியில் அடுப்பில் வைத்து அதில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் ஆட்டிறைச்சி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

🥣பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து அதில் தேவையான அளவிலான உப்பையும் சேர்த்து , தேவையான அளவிலான தண்ணீர் சேர்த்து , வாணலியை தட்டு கொண்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.

🥣பிறகு ஆட்டிறைச்சி நன்றாக வேக ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான வைத்து கொதிக்க வைக்க வேண்டும் . தட்டை திறந்து பார்த்து குழம்பை கிளறி விடவும் . கவனம் தேவை அடிபிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

🥣கடைசியாக வாணலியில் வைத்து அதில் பசு வெண்ணை விட்டு நன்றாக காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை கொண்டு தாளித்து ஆட்டிறைச்சி குழம்புல சேர்த்து . அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து , அடுப்பில் இருந்து இறக்கி சாதத்துடனும் , இட்லி , தோசை , சப்பாத்தி , பூரியுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும் .

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments