இன்றைய ராசி பலன்கள்
உறவினர்களால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் நீங்கி சுமுகமான சூழ்நிலை ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். இளைய சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்துவிடும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.
உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்பு கூடும் நாள்.
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
குடும்பத்திலிருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.
உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பணிகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியா பாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
Today Rasi Palan in Tamil |
Great Work..Keep it Up