HomeTAMIL NADUப.ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு | P.Jeevanandham Life History in Tamil

ப.ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு | P.Jeevanandham Life History in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

ப.ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு | P.Jeevanandham Life History in Tamil

.ஜீவானந்தம்

 • வீரத்துறவி விவேகானந்தர்க்கு பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம்.
 • நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பட்டத்தார் பிள்ளை – உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
 • பெற்றோர் இவருக்கு இட்டப் பெயர் சொரிமுத்து. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன் என்ற நாவலை எழுதினார்.
 • வ.வே.சு ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ப.ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார்.
 • 1933ல் ஜீவா எழுதிய பெண்ணுரிமை கீதாஞ்சலி என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூலாகும்.
 • தனது கொள்கையை பரப்ப 1937ல் “ஜனசக்தி” நாளிதழ் தொடங்கினார். ஜீவா தாமரை என்ற இலக்கிய இதழை 1959ல் தொடங்கினார்.
 • வைக்கம் சத்தியாகிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் பங்கேற்றார்.
 • தொழிலாளர் பாதுகாப்புக் கழகம் எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர்.
 • ஜீவா எழுதிய சோசலிச சரித்திரம் மற்றும் சோசலிசத் தத்துவம் எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
 • காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக் கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது.
 • சமதர்மம், அறிவு, ஜனசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார்.
 • ஈ.வெ.ராவுடன் கருத்து முரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ.ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து சுயமரியாதை சமதர்மக்கட்சியை உருவாக்கினார்.
 • அவ்வியக்கத்தின் இதழ்களாக சமதர்மம் மற்றும் அறிவு ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936).
 • டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். 1963ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி ஜீவா மரணமடைந்தார்.

ஜீவாவின் நூல்கள்

 • இலக்கியச்சுவை
 • ஈரோட்டுப் பாதை சரியா?
 • கலை இலக்கியத்தின் புதிய பார்வை
 • சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
 • சமதர்மக் கீதங்கள் 1934
 • சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
 • சோஷலிஸ்ட் தத்துவங்கள்
 • தேசத்தின் சொத்து (தொகுப்பு)
 • நான் நாத்திகன் ஏன்? – பகத்சிங் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பு; 1934; அரசால் பறிமுதல் செய்யப்பட்டது.
 • புதுமைப்பெண்
 • பெண்ணுரிமைக் கீதங்கள் (கடலூர்ச் சிறையில் இயற்றியவை) 1932
 • மதமும் மனித வாழ்வும்
 • மேடையில் ஜீவா (தொகுப்பு)
 • மொழியைப்பற்றி
 • ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு

நினைவகங்கள்

 • தமிழ்நாடு அரசு ப.ஜீவானந்தம் நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது.
 • இங்கு ப.ஜீவானந்தம் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்ப்பட்டுள்ளது.
 • இவரின் பெயரால் புதுச்சேரியில் ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி பெயரிடப்பட்டுள்ளது.
 • சென்னை, மேற்கு தாம்பரத்தில், இரயில்வே நிலையம் எதிரில் முழு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 08-05-1995ல் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.

இதையும் படிக்கலாமே

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கை வரலாறு | Moovalur Ramamirtham Ammaiyar Life History in Tamil
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments