Homeசமையல்சமையல் குறிப்புகள்,

சமையல் குறிப்புகள்,

THATSTAMIL-GOOGLE-NEWS

சமையல் குறிப்புகள்

🔷காலிஃபிளவரை சமைக்கும் முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் காலிஃபிளவர் , வெண்மையாக இருப்பதுடன் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் அழிந்துவிடும்.

🔷தோசைக்கு , இட்லிக்கு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் தோசை , இட்லி பூவாயிருக்கும்.

🔷சாதம் மிஞ்சிவிட்டால் , ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சாதத்தை ஆவியில் சூடு பண்ணலாம். சாதம் கொதிக்கும்போது மிஞ்சிய சாதத்தையும் சேர்த்துப் போட்டு வைக்கலாம்.

🔷காய்ந்துபோன ரொட்டித் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் அவித்தால் புதியது போலாகி விடும்.

🔷போளிதட்டும்போது வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.

🔷கொதிக்கும் பாலை உடனே உறை ஊத்த வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப்போட்டு மோர் ஊற்றவும். குளிர் நேரத்தில் தயிர் உறையாது . எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மீது பாத்திரத்தை வைத்தால் , தயிர் விரைவில் உறைந்துவிடும்.

🔷தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.

🔷உப்புத்தூளை வறுத்து உபயோகித்தால் , முட்டைக்குப் போட்டு சாப்பிட வசதியாக இருக்கும்.

🔷கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன் , மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.

🔷வாழைப்பூ , வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில்போட்டுவைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேகவைக்கும் போதும் , வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும்.வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.

சமையல் குறிப்புகள்

🔷வெல்லப்பாகு , சீனிப்பாகுடன் பதம் வந்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்துவிட்டால் பாகு முற்றாது.

🔷வெங்காயம் , பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கவும் . கண்ணும் கரிக்காது.

🔷புளித்த தயிரை தலையில் தேய்த்துக்கொண்டு சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

🔷தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.

🔷தயிர் கொண்டு கை அலம்ப மண்ணெண்ணெய் வாசம் போய்விடும்.

🔷வெண்ணெய் காய்ச்சி இறக்கும் முன்னர் சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

🔷சமையலுக்குப் பின் எஞ்சியிருக்கும் இஞ்சியை மண்ணில் புதைத்து வைத்தால் வேண்டும்போது எடுத்து கொள்ளளாம்

🔷குளிர்சாதனப் பெட்டி இல்லாத வீடுகளில் கறிவேப்பிலை , கொத்துமல்லி களை பாட்டில்களில் போட்டுவைக்கலாம்.

🔷சமையலறையில் ஒரு நோட்டும் பென்சிலும் வைத்திருந்தால் தேவையான பொருட்களைக் குறித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

🔷கேக் அல்லது பிஸ்கட் செய்து முடித்தபின் ஓவன் சூடாகவே இருக்கும் . சிறிது பழைய பிஸ்கட் , முறுக்கு போன்றவற்றை உள்ளே வைத்தால் புதிதுபோல் முரமுரப்பாக இருக்கும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments