HomeTAMIL NADUம.பொ.சிவஞானம் வாழ்க்கை வரலாறு | Mylai Ponnuswamy Sivagnanam Life History in Tamil

ம.பொ.சிவஞானம் வாழ்க்கை வரலாறு | Mylai Ponnuswamy Sivagnanam Life History in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

ம.பொ.சிவஞானம் வாழ்க்கை வரலாறு | Mylai Ponnuswamy Sivagnanam Life History in Tamil

.பொ.சிவஞானம்

  • ம.பொ.சிவஞானம் (ஜூன் 26, 1906 – அக்டோபர் 3, 1995) தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார்.
  • இவர் ம.பொ.சி. என அழைக்கப்பட்டார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பது ம.பொ.சி என்று ஆயிற்று.
  • சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 1906, ஜூன் 26ல் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார்.
  • சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார்.
  • இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற விருது, சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது.
  • 1946-ம் ஆண்டில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 1954-ம் ஆண்டு, ம.பொ.சி காங்கிரசிலிருந்து விலகினார்.
  • மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் போராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது வடக்கு எல்லை போராட்டத்தை நடத்தி திருத்தணியை தமிழகத்துடன் இணைத்தார்.
  • இவர் கட்டபொம்மன் மற்றும் வ.உ.சிதம்பரம் ஆகியோரின் வரலாற்றை நூல்களாக எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு 1966ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • இவர் “எனது போராட்டம்” என்ற பெயரில் தன் வரலாற்றை எழுதியுள்ளார். அவர் செங்கோல் என்ற வார இதழையும் தமிழ் முரசு என்ற இதழையும் நடத்தினார்.
  • தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார். 2006ம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடமையாக்கம் மற்றும் இவரது உருவம் பொறித்த நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டும் சிறப்பு செய்துள்ளது.

பாரதியைப் பற்றி ம.பொ.சி. பல ஆராய்ச்சி நூல்கள்

  • வள்ளலாரும் பாரதியும் [1965]
  • எங்கள் கவி பாரதி [1953]
  • பாரதியாரும் ஆங்கிலமும் [1961]
  • பாரதி கண்ட ஒருமைப்பாடு [1962]
  • உலக மகாகவி பாரதி [1966]
  • பாரதியார் பாதையிலே [1974]
  • பாரதியின் போர்க்குரல் [1979]
  • பாரதியார் பற்றிய ம.பொ.சி. பேருரை [1983]

சிலப்பதிகாரம் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்

  • சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]
  • கண்ணகி வழிபாடு [1950]
  • இளங்கோவின் சிலம்பு [1953]
  • வீரக்கண்ணகி [1958]
  • நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961]
  • மாதவியின் மாண்பு [1968]
  • கோவலன் குற்றவாளியா? [1971]
  • சிலப்பதிகாரத் திறனாய்வு [1973]
  • சிலப்பதிகார யாத்திரை [1977]
  • சிலப்பதிகார ஆய்வுரை [1979]
  • சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980]
  • சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990]
  • சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]

சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்

  • கப்பலோட்டிய தமிழன் [1944]
  • தளபதி சிதம்பரனார் [1950]
  • கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]

கட்டபொம்மன் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்

  • வீரபாண்டிய கட்டபொம்மன் [1949]
  • கயத்தாற்றில் கட்டபொம்மன் [1950]
  • சுதந்திர வீரன் கட்டபொம்மன் [1950]

திருவள்ளுவர் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்

  • வள்ளுவர் வகுத்த வழி [1952]
  • திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960]
  • திருக்குறளில் கலை பற்றிக் கூறாததேன்? [1974]

இராமலிங்க அடிகள் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்

  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு [1963] எனும் நூலுக்காக 1966ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்
  • வள்ளலாரும் பாரதியும் [1965]
  • வள்ளலார் வளர்த்த தமிழ் [1966]
  • வள்ளலார் வகுத்த வழி [1970]
  • வள்ளலார் கண்ட சாகாக் கலை [1970]
  • வானொலியில் வள்ளலார் [1976]
  • வள்ளலாரும் காந்தியடிகளும் [1977]
  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]

ஆங்கில நூல்கள்

  • The Great Patriot V.O. Chidambaram Pillai
  • The First Patriot Veera Pandia Katta Bomman
  • The Universal Vision of Saint Ramalinga

சிறப்புகள்

  • சிலம்புச் செல்வர்’ என்ற விருது, சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.
  • சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு ‘டாக்டர்’ பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தன.
  • மதுரைப் பல்கலைக் கழகம், ‘பேரவைச் செல்வர்’ என்ற பட்டம் வழங்கியது.
  • மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.
  • தமிழக மேலவையின் தலைவராகப் பணியாற்றினார்.
  • ‘செங்கோல்’ என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார்.
  • தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார்.
  • சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராகப் பணியாற்றினார்.

இதையும் படிக்கலாமே

ப.ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு | P.Jeevanandham Life History in Tamil
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments