Homeஅசைவ சமையல்கொங்கு நாட்டு கோழி குழம்பு(Chicken Curry)

கொங்கு நாட்டு கோழி குழம்பு(Chicken Curry)

THATSTAMIL-GOOGLE-NEWS

கொங்கு நாட்டு கோழி குழம்பு (Chicken Curry)

தேவையானப் பொருட்கள் :

🔷நாட்டுக் கோழி – 1/2 கிலோ.
🔷வெங்காயம் -3 ( பொடியாக நறுக்கியது ) 🔷தக்காளி – 2 ( நறுக்கியது )
🔷இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் 🔷கறிவேப்பிலை சிறிது
🔷கொத்தமல்லி – சிறிது
🔷உப்பு தேவையான அளவு
🔷மரசெக்கு கடலெண்ணய் தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு

🔷சின்ன வெங்காயம் – 10
🔷வரமிளகாய் – 8
🔷மிளகு – 2 டீஸ்பூன்
🔷சோம்பு – 1/2 டீஸ்பூன்
🔷கசகசா – 1/2 டீஸ்பூன்
🔷சீரகம் – 1/2 டீஸ்பூன்
🔷துருவிய தேங்காய் – 1
🔷டேபிள் ஸ்பூன்
🔷மல்லித் தூள் – 2 டீஸ்பூன்.

தாளிப்பதற்கு

🔷கிராம்பு – 4
🔷பட்டை -1 இஞ்ச்
🔷சோம்பு -1/2டீஸ்பூன்

கொங்கு நாட்டு கோழி குழம்பு

செய்முறை

✴️முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி , நீரை முற்றிலும் வடித்து , பின் அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள் , 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

✴️பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து , அதில் 1 டீஸ்பூன் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் , வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லித் தூளைத் தவிர அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். இறுதியில் மல்லித் தூளை சேர்த்து பிரட்டி இறக்கி , குளிர வைத்து , மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

✴️பின்பு மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து , அதில் 1 டேபிள் ஸ்பூன் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் , பட்டை , கிராம்பு , சோம்பு சேர்த்து தாளித்து , பின் கறிவேப்பிலை , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

✴️பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி , ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

✴️பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து , 2 கப் தண்ணீர் ஊற்றி , தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து , மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

✴️சிக்கனானது நன்கு வெந்ததும் , அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் , கொங்கு நாட்டு கோழிக் குழம்பு தயார் !!!

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments