English learn through Tamil language
நண்பர்களே, ஆங்கில மொழியை எளிமையாக நமது தாய்மொழி தமிழில் கற்றுக் கொள்வோம்.
இந்த ஆங்கில மொழியை கற்றுக் கொள்வதற்கு தேவையான சில அடிப்படை தகவல்கள்:
1. Spoken English என்றால் என்ன?
- எளிமையான ஆங்கில வாக்கியங்களை (simple sentences) தொடர்ச்சியாக பேசுவது.
2. Written English என்றால் என்ன?
Written English என்பது கலப்பு ஆங்கில வாக்கியங்களை (complex sentences) கொண்ட அமைப்பாகும்.
அதாவது, ஒரு கலப்பு வாக்கியமானது அதிக இலக்கண விதிகளை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கும்.
- நண்பர்களே, ஆங்கில இலக்கணத்தை [English Grammar] நன்கு தெரிந்து கொண்டால்தான் கலப்பு வாக்கியத்தில் இருக்கும் தகவல்களை ஒருவர் தெள்ளத் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
இந்த கலப்பு வாக்கியமானது (complex sentences) புத்தகங்கள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
3. Spoken English – ம் Written English -ம் ஒன்றாக நாம் பயன்படுத்துகிறோமா?
- இல்லை, Spoken English பேசுவதற்கும், Written English எழுதுவதற்கும் பயன்படுத்துகிறோம்.
- ஆங்கிலத்தை சரளமாக பேசுவதற்கு நாம் எளிமையான வாக்கிய அமைப்பை கொண்ட ஆங்கிலத்தை பயன்படுத்த வேண்டும்.
4. ஏன் எளிமையான ஆங்கில வாக்கிய அமைப்பை பேசுவதற்கு பயன்படுத்துகிறோம்?
- ஒருவர் குறுகிய நேரத்தில் ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமானால் யோசித்தல், வாக்கியங்களை அமைத்தல், வாக்கியங்களை உச்சரித்தல் போன்றவற்றை செய்ய வேண்டும். அதனால், எளிமையான வாக்கியங்களை பயன்படுத்தினால் ஆங்கிலத்தை வேகமாக பேசுவதற்கு சிரமமாக இருக்காது.
- நாம் எழுதுவதற்கு பயன்படுத்தும் கலப்பு ஆங்கில வாக்கியத்தை (complex sentences) இங்கிலீஷ் பேசுவதற்கு பயன்படுத்தினால் வாக்கியத்தை அமைப்பதிலும், அதனை உச்சரிப்பதிலும் கால தாமதம் ஏற்படும்.
- இதன் காரணமாகவே, நாம் எளிமையான ஆங்கில வாக்கியத்தை பேசுவதற்கு (Spoken English) பயன்படுத்துகிறோம்.
5.நாம் ஆங்கில மொழியை எழுதுவதற்கு கலப்பு வாக்கிய அமைப்பை (complex sentences) பயன்படுத்துவதற்கான காரணங்கள்:
- கலப்பு வாக்கியத்தில் (complex sentences) ஒரே வார்த்தை மீண்டும் அந்த வாக்கியத்தில் திரும்ப வராதபடி பார்த்துக் கொள்ளப்படுகிறது. காரணம், இங்கு இலக்கண விதிகள் (Grammar Rules) பயன்படுத்தப்படுகிறது.
- எளிமையான ஆங்கில வாக்கியத்தை (Simple Sentences) எழுதுவதற்கு பயன்படுத்தினால் தினசரி செய்தித்தாள்களில் பக்கங்கள் அதிகரிக்கக்கூடும், நாம் படிக்கும் புத்தகங்களின் பக்கங்களும் அதிகரிக்கக்கூடும். ஆகவே, அதை கருத்தில் கொண்டு கலப்பு வாக்கியத்தை (Complex Sentences) பயன்படுத்தி வருகிறோம்.இதற்கு குறைந்த அளவு காகிதம் போதுமானது.
- நாம் ஆங்கில இலக்கணத்தை (English Grammar) நன்கு தெரிந்து கொண்டால்தான் கலப்பு வாக்கியத்தில் (Complex Sentences) இருக்கும் கருத்துகளை ஒருவர் தெள்ளத் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
6. ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு நாம் முதலில் ஆங்கில செய்தித்தாளைப் (English Newspaper) படிக்க வேண்டுமா?
- நிச்சயமாக இல்லை நண்பர்களே. செய்தித்தாள்களில் அமைந்திருக்கும் வாக்கியம் கலப்பு வாக்கியம் (Complex Sentences) ஆகும்.
- நீங்கள் ஆங்கிலத்தில் எளிமையாக பேச கற்றுக் கொள்வதற்கு குழந்தைகள் நடித்த ஆங்கிலத் திரைப்படங்களை பார்க்க தொடங்குங்கள். அது உங்களுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்க உதவி செய்யும்.
7. ஆங்கிலத்தில் சரளமாக பேச கற்றுக் கொள்பவர் எப்போதும் ஆங்கிலத்தில் தான் யோசிக்க வேண்டும். தமிழில் யோசிக்கவே கூடாது என்று சொல்கிறார்களே இந்த கூற்று சரியானதா?
- கண்டிப்பாக தவறானது நண்பர்களே. யோசித்தல் என்ற செயல் நமது மூளையின் Physical Memory – ன் மூலமாகவே நடைபெறுகிறது.
- Physical Memory ஆனது நம்முடைய ஐம்புலன்களின் Signal மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
- Physical Memory – யில் உருவாக்கிய கருத்தை நாம் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ வாக்கியமாக அமைத்து பேசுகிறோம்.
- இதனால் ஒருவர் எந்த மொழியில் வேண்டுமானாலும் யோசித்து பேச இயலும்.
குறிப்பு:
- எளிமையான ஆங்கில வாக்கியங்களை (Simple Sentences) புரிந்து கொள்வதற்கு, ஆங்கில இலக்கண விதிகள் (Grammar Rules) தேவைப்படாது.
- அதனால், ஒருவர் அவருக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேச (Spoken English) முடியும்.
- கலப்பு வாக்கியங்களை (Complex Sentences) புரிந்து கொள்வதற்கு மட்டுமே நமக்கு இலக்கண விதிகள் (Grammar Rules) தேவைப்படும்.
- இந்த கலப்பு வாக்கிய அமைப்பு எழுதுவதற்கு (Written English) மட்டுமே பயன்படும்.
- ஒரு மொழியை கற்றுக் கொள்வதற்கு நாம் முதலில் அந்த மொழியில் சில வார்த்தைகளைக் கொண்டு பேச வேண்டும். பின்புதான், அதை படிக்க மற்றும் எழுத கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் ஆங்கிலத்தில் என்ன செய்கிறோம் ?
- ஆங்கில மொழியை எழுத மற்றும் படிக்க கற்றுக் கொண்ட பிறகு தான் பேச கற்றுக் கொள்கிறோம். இந்த தவறின் காரணமாகவே நம்மில் பலருக்கு ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள கடினமாக இருக்கிறது.
- நாம் பேசும் தாய்மொழியான தமிழ் அந்தக் காலத்தில் படிக்காதவர்கள், பள்ளி செல்லாதவர்கள் கூட புரிந்துகொள்ள முடிந்தது. காரணம் நாம் சிறுவயதில் இருந்தே பேச கற்றுக்கொண்டோம், பின்புதான் எழுத,படிக்க கற்றுக் கொண்டோம்.
He swims every morning. (Simple Sentence)
While I was cooking he was still playing games on the Mobile. (Complex Sentence)
- எனவே , ஒரு மொழியை சரளமாக பேசுவதற்கு (Spoken English) இலக்கணம் (Grammar) ஒரு தடையில்லை.
- நம்மில் பலர் , நாம் நினைக்கும் கருத்தை அப்படியே ஆங்கிலத்தில் பேசாமல் அதை தமிழில் மொழிபெயர்த்து, பின்பு வாக்கியத்தை அமைத்து அப்படி தான் பேசுகிறோம். இது ஒரு தவறான செயலாகும். tamil to english