தயிரின் மருத்துவ குணங்கள்
தயிரின் மருத்துவ குணம்:
🔹பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
🔹நன்மை செய்யும் பாகடீரியாவை உருவாக்குகிறது.
🔹இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.
🔹சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும் , தோல் பகுதிகளையும் , தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
தயிரில் உள்ள சத்துக்கள்
🔹தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும் , புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.
🔹கால்சியமும் , ரிபோஃபளேவின் என்ற வைட்டமின் B யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.
🔹தயிரில் உள்ள புரோட்டீன் பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் பாலை உட்கொண்ட ஒருமணிநேரத்தில் சிரு சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செலகிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது.
தயிர்தான் சிறந்த மருந்து
🔹மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.
🔹உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.
🔹குடலில் சதை வளரும் அப்பண்டிசைடிஸ் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் கிருமிகள் தயிர் , மோர் இவற்றில் உள்ள லேகடிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.
🔹ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.