நவரத்தின குருமா
தேவையான பொருட்கள் :
♦பனீர் ( பாலாடைக் கட்டி ) – 100 கிராம்
♦பொடியாக அரிந்த காய்கறிகள் – 2 கப் ( கேரட் , பீன்ஸ் , உருளைக் கிழங்கு காலிப்பிளவர் , உரித்த பட்டாணி )
♦தக்காளி 3 பெரியது )
♦வெங்காயம் – 2
♦இஞ்சி , பூண்டு அரைத்த விழுது 1/2 டீஸ்பூன்.
♦தனியா தூள் – 2 1 டீஸ்பூன்
♦மிளகாய்த்தூள் – 1 % டீஸ்பூன்
♦மஞ்சள் தூள் / 4 டீஸ்பூன்
♦கரம் மசாலாத் தூள் – 1/2 டீஸ்பூன்
♦கிரீம் ( கடைந்த பால் ஏடு ) – 2 டேபிள் ஸ்பூன்
♦பால் – 1 கப் நெய் அல்லது எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
♦உப்பு ருசிக்கேற்ப பைன் ஆப்பிள் ( அன்னாசி ) துண்டுகளாக நறுக்கியவை ( முள்ளில் கிடைப்பது )
♦முந்திரி , திராட்சை , டுட்டி புருட்டி ( தேவையானால் 4 கப் )
செய்முறை
♦பனீர் ( பாலாடைக் கட்டி ) சிறு துண்டங்களாக நறுக்கி , எண்ணெயில் பொரிக்கவும்.பிறகு சிறிது நேரம் வெந்நீரில் போட்டு வைக்கவும் . வெங்காயத்தை தோல் நீக்கி துருவவும் .
♦தக்காளியை வெந்நீரில் போட்டு எடுத்து தோல் உரித்து அரைத்து வடிகட்டவும்.
♦வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு காயவைத்து , இஞ்சி , பூண்டு விழுது , பிறகு துருவிய வெங்காயம் சேர்த்து , அடிப்பிடிக்காமல் கிளறவும்.
♦எண்ணெய் மசாலாவிலிருந்து பிரியும் போது தக்காளி விழுது , மஞ்சள் தூள் , மசாலா தூள் , தனியா தூள் , மிளகாய் தூள் , உப்பு சேர்க்கவும்.
♦சில நிமிடங்கள் வதக்கிய பிறகு , வேகவைத்த காய்கறிகளை சேர்த்து , கொதிக்கவிடவும்.
♦சில நிமிடங்கள் கழித்து பாலையும் கிரீமையும் சேர்க்கவும் .. பொரித்த பனீர் , பைன் ஆப்பிள் ( அன்னாசி ) மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்
♦முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும் . நறுக்கிய கொத்தமல்லித் தழைகளால் , மேலே அலங்கரிக்கவும் , பரிமாறும் போது பொடியாக நறுக்கிய வெங்காயம் எலுமிச்சை , தனியாக ஒரு தட்டில் வைக்கவும் . தேவையானாவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம் .