Homeசித்த மருத்துவம்ஆண்மை பலத்தை அதிகரிக்கும் மூலிகைகள்

ஆண்மை பலத்தை அதிகரிக்கும் மூலிகைகள்

THATSTAMIL-GOOGLE-NEWS

ஆண்மை பலத்தை அதிகரிக்கும் மூலிகைகள்

இன்பம் பெருக்கி ( காமவர்த்தநி )

கலவி இன்பத்தைப் பெருக்கும் பொருள்.

Drug that stimaiates sexunl exoitement.

💚முக்கிய மூலிகைகள்💚

🔷பூனைக்காலி வித்து
🔷வாதுமைப் பருப்பு
🔷 வெண்டைக்காய்
🔷மதனகாமப் பூ
🔷வெங்காயம்
🔷வெற்றிலை
🔷தண்ணீர் விட்டான் கிழங்கு
🔷நிலப் பூசணி
🔷ஓரிதழ்த் தாமரை
🔷சீந்தில்
🔷அமுக்கிராக் கிழங்கு
🔷 உளுந்து

ஆண்மை பலத்தை அதிகரிக்கும் மூலிகைகள்

உபயோகிக்கும் முறைகள்

🪴பூனைக்காலி வித்து🪴

இதனை எடுத்துப் பொடித்து 500- 1000 மி.கி. பசுப்பாலில் கலந்து உள்ளெடுக்க ஆண்மை பெருகும்.

🪴மதனகாமப்பூ🪴

இதனை உலர்த்தி வேறு மருந்துகளுடன் சேர்த்துப் பொடித்துக் காலை மாலை உண்டுவர உடல் வன்மை பெற்று ஆண்மை உண்டாகும்.

🪴வெங்காயம்🪴

இதனை உலர்த்தி , பொடித்துச் சீனியுடன் கலந்து வேளைக்கு 3-4 கிராம் உண்டுவர ஆண்மை பெருகும். வெங்காயத்தை நெய்யில் அல்லது தேவையான எண்ணெய்யில் பொரித்து உணவுடன் சேர்த்து உண்ண ஆண்மை பெருகும்.

🪴வெற்றிலை🪴

காமப் பெருக்கை உண்டாக்கும் பொருட்களுடன் வெற்றிலையையும் சேர்த்து உண்டு வந்தால் கலவியில் இச்சை உண்டாகும்.

🪴அமுக்கிராக் கிழங்கு🪴

இதன் சூரணம் அல்லது லேகியத்தை உண்டுவர நரம்பு மண்டலம் பலமடைந்து இன்பம் பெருகும்.

🪴உளுந்து🪴

உளுந்தை மாவாக்கி உணவுப் பண்டங்களாகச் செய்து உண்டுவர உடம்பு வன்மையாகி இன்பம் பெருகும்.

🪴வாதுமைப்(பாதாம்) பருப்பு ( இனிப்பு வகை )🪴

இதனை லேகியங்களில் அல்லது மணப்பாகில் சேர்த்து உண்டுவர உடல் பலமடைந்து , ஆண்மை பெருகும்.

வாதுமைப் பருப்பை பதப்படுத்தி பசுப் பாலுடன் சேர்த்து உண்டுவர நரம்பு மண்டலம் விருத்தியடை யும்.

🪴வெண்டைக்காய்🪴

வெண்டைக்காயை எடுத்துச் சமைத்து உண்ணத் தேகம் பலம் பெற்று இன்பம் பெருகும்.

🪴தண்ணீர்விட்டான் கிழங்கு🪴

இதன் கிழங்குச் சாறு -4 பங்கு வெண்ணெய் -1 பங்கு
பசுப்பால் – 10 பங்கு

இவற்றை நெய்யாகத் தயாரித்துச் சர்க்கரை , தேன் , திற்பலி சேர்த்து உண்ண ஆண்மை பெருகும்.

🪴நிலப்பூசணி🪴

இதன் பச்சைக் கிழங்குச் சாற்றுடன் பசுப்பால் சம அளவு கூட்டி , சர்க்கரையும் கலந்து 60 – 120 மி.லி. வரை காலையில் உண்டுவரத் தேகம் பலம் அடைந்து ஆண்மை பெருகும்.

🪴ஓரிதழ்த் தாமரை🪴

ஒரு பழகிய மட்பாண்டம் எடுத்து , அதனுன் 700 மி . லி . பசும்பால் விட்டு , வாயை வெள்ளைத் துணியால் மூடி வேடு கட்டவும் . பின்பு ஓரிதழ்த் தாமரை மலரையும் அதன் இளம் தளிரையும் தூய்மை யாக்கி 250 கிராம் அளவு வேடு கட்டிய துணியில் வைத்து இன்னொரு மண் சட்டியால் மூடி அடுப் பேற்றி எரிக்கவும் . மலரும் , இளந் தளிரும் நன்கு வெந்தவுடன் எடுத்து நன்கு உலர வைத்து இடித்துத் தூளாக்கி கண்ணாடிப் பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்.இத் தூளில் நாள் தோறும் 30-50மி.லி கிராம் வரை எடுத்து 200மி.லி காட்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டு வர கலவியில் திருப்தி உண்டாகும்.

🪴சீந்தில்🪴

சீந்தில் சர்க்கரையை கிருஷ்ண அப்பிரக செந்துரத்துடன் கலந்து கொடுக்க உடலுக்கு ஊட்டம் தந்து விந்து ஊறும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments