தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

ஆட்டு ஈரல் வறுவல் (Mutton Liver Fry)

ஆட்டு ஈரல் வறுவல் (Mutton Liver Fry)

தேவையானப் பொருட்கள் :

🔷ஆட்டு இதயம் – 3 ( பொடியாக நறுக்கியது )
🔷ஆட்டு விரை -3 ( துண்டுகளாக நறுக்கியது )
🔷ஆட்டு கத்து கொழுப்பு – 100 கிராம்
🔷சின்ன வெங்காயம் – 8 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் – 12 ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது )
இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன் வரமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
குரு மிளகு தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
பட்டை 2 இன்ச்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பில்ல – சிறிதளவு. கொத்தமல்லித்தழை – சிறிதளவு ( பொடியாக நறுக்கியது )
உப்பு – தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் தேவையான அளவு

ஆட்டு ஈரல் வறுவல்

செய்முறை

🥣முதலில் ஆட்டின் இதயத்தை மற்றும் ஆட்டின் விரையை நன்றாக கழுவி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

🥣பிறகு அதில் பட்டை , கிராம்பு , ஏலக்காய் , மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும். நசுக்கிய பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

🥣பின் அதனுடன் இஞ்சி – பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் வரமிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

🥣பின்னர் ஆட்டு இதயத்தையும் அதில் ஆட்டு விரை துண்டுகளையும் சேர்த்து அதில் தேவையான அளவிலான தண்ணீர் ஊற்றி அதில் சிறிது நேரம் கொதிக்க விட்டு அதன் பிறகு பிரஷர் குக்கரின் மூடியை மூடி குறைந்தபட்சமாக 20 விசில் வரை வேக விட வேண்டும். இது வேக ஆட்டு இறைச்சியை விட நேரம் அதிகம் எடுத்து கொள்ளும்.

🥣விசில் முழுவதுமாக அடங்கியதும் இதை வாணலியில் மாற்றி கொள்ள வேண்டும் . இதை தண்ணீர் முழுமையாக வற்றும் வரை பொறுமையாக இருந்து அடுப்பை மிதமான தியில் வைத்து மரசெக்கு கடலெண்ணய் சிறிது சிறிதாக விட்டு நன்றாக ஃப்ரை யாக மசாலாவுடன் வதக்க வேண்டும்.

🥣கடைசியாக பொடியாக வைத்துள்ள குருமிளகு தூளை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் . அடுப்பை அணைத்து விட்டு இறக்கும் சமயத்துல பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

 

 

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!