Homeவிளையாட்டுகால்பந்து விளையாட்டின் முடிசூடா மன்னன் பீலே காலமானார்

கால்பந்து விளையாட்டின் முடிசூடா மன்னன் பீலே காலமானார்

THATSTAMIL-GOOGLE-NEWS

கால்பந்து விளையாட்டின் முடிசூடா மன்னன் பீலே காலமானார்

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் பீலே காலமானார்.வீரர்கள், தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி

கால்பந்து விளையாட்டின் நட்சத்திரமாக இருந்த பீலே பெருங்குடல் புற்றுநோய் காரணமாக ஒரு மாதமாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் தற்போது காலமானார். அவருக்கு வயது 82

பீலே - Pele

 

கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற ஆபரேஷன் செய்த போது பெருங்குடலின் வலது பக்கத்தில் கேன்சர் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக ஆபரேஷன் செய்து அந்த கட்டி அகற்றப்பட்டது. பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்ட பீலே, சமீபத்தில் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் கேன்சர் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டார். கேன்சர் சிகிச்சைக்காக அவருக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பீலே அவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

கால்பந்தாட்டத்தின் கடவுள், உலக கால்பந்தாட்டத்தின் கருப்பு முத்து என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவர் பீலே ஆவார்.

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் பீலே பற்றிய குறிப்புகள்

பீலே

பிரேசிலில் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி Tres Coracoes நகரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். பீலே சின்ன வயதிலிருந்தே தனது தந்தையுடன் கால்பந்தாட்டத்தை வெகுவாக ரசித்திருக்கிறார். தொலைக்காட்சிகள் இல்லாத அந்த காலகட்டத்தில் ரேடியோ கமெண்டரி தான் மிகவும் பிரபலமானது.

அந்த சமயத்தில் 1950 ஆம் ஆண்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி தோல்வியுற்றதை ரேடியோவில் கேட்டு தனது தந்தையை அழுவதை தாங்கிக் கொள்ளாத முடியாத பிலே அவர்கள் கவலைப்படாதீங்கப்பா நான் பிரேசிலுக்காக விளையாடி கோப்பையை வசப்படுத்துவேன் என சூளுரைத்தார் அந்த ஒன்பது வயது சுட்டிச் சிறுவன் பீலே.

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் பீலே

 

16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமானார் பீலே. தன் தந்தையிடம் அளித்த சபதத்தை நிறைவேற்ற குடும்ப வறுமையை மீறி, ஷூ பாலிஷ் போட்டும் டீக்கடையில் வேலை செய்தும் சிரமப்பட்டு, சரியாக எட்டு ஆண்டுகளில் 1958 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்றார் பீலே.

கால் இறுதிப் போட்டியில் பம்பரமாய் சுழன்ற பீலே அவர்கள், அரையிறுதி போட்டியில் பிரான்சுக்கு எதிராக களம் இறங்கி ஹாட்ரிக் கோல் அடித்து வியக்க வைத்தார்.

இறுதிப் போட்டியில் ஸ்வீடனை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக பிரேசில் அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து 1962,1970 ஆம் ஆண்டுகளில் பீலே பங்கேற்று மொத்தம் மூன்று உலக கோப்பையை பிரேசிலுக்கு பெற்றுத் தந்து உலகின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வென்று சரித்திரம் படைத்தவர் பீலே ➨ 1958,1962,1970

 

தனது நாட்டு அணியில் 1971 ஆம் ஆண்டு வரை இடம்பெற்று இருந்தார் பீலே.

அடுத்தடுத்து உலகக்கோப்பை போட்டிகளில் பீலே அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 12 ஆகும்.

ஜாம்பவான் பீலே

 

தனது வாழ்நாளில் பிரேசிலுக்காக 95 போட்டிகளில் விளையாடிய பீலே 77 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீலே, கிளப் அணிகள் உட்பட முதல்தர கால்பந்து போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 1363 போட்டிகளில் 1281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Pele Birth of a Legend

ஃபிஃபா உலகக் கோப்பைகளில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்று கின்னஸ் புத்தகத்தில் பீலே இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரேசில் விளையாட்டு துறை அமைச்சராக 1995 முதல் 1998 வரையிலான மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கால்பந்தாடி அரை நூற்றாண்டு கடந்த பின்னரும் அவரின் புகழ் உலகின் மூலை முடுக்கெல்லாம் எப்போதும் ஒலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

3 முறை திருமணம் செய்து கொண்ட பீலேவுக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள இயேசு சிலைக்கு நிகராக பிரேசிலின் அடையாளமாக திகழ்ந்த பீலே அவர்களின் இந்த மறைவு கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பீலேவின் மறைவுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்பாவே தொடங்கி முன்னணி கால்பந்து பிரபலங்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சர்வதேச பிரபலங்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Read Also,

Neeraj Chopra – Indian Javelin Thrower
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments