Homeஅசைவ சமையல்மட்டன் சந்தை கறி குழம்பு

மட்டன் சந்தை கறி குழம்பு

THATSTAMIL-GOOGLE-NEWS

மட்டன் சந்தை கறி குழம்பு

தேவையானப் பொருட்கள்:

🔷நெஞ்சு கறி – 1 கிலோ
🔷மட்டன் சுத்து கொழுப்பு – 150 கிராம்
🔷பச்சை மிளகாய் – 8 ( அம்மிகல்லில் 🔷விழுதாக மையாக அரைத்தது )
🔷இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
🔷சின்ன வெங்காயம் – 8 ( விழுதாக மையாக அம்மிகல்லில் நசுக்கியது )
🔷தக்காளி – 1 ( விழுதாக அரைத்தது )
🔷மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
🔷கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன் 🔷வரமிளகாய் தூள் – 11/4 டீஸ்பூன்
🔷மரச்செக்கு கடலெண்ணய் – 1 டீஸ்பூன் 🔷கறிவேப்பில்ல – சிறிதளவு
🔷எலுமிச்சம்பழ சாறு – 2 டீஸ்பூன் 🔷சுடுதண்ணீர் தேவையான அளவு
🔷உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க :

🔷தேங்காய் துருவல் – 3/4 கப்
🔷முழு முந்திரி பருப்பு – 12
🔷கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
🔷சின்ன வெங்காயம் – 5 ( பொடியாக நறுக்கியது )
🔷பூண்டு – 4 பற்கள்
🔷ஏலக்காய் 2
🔷பட்டை 1/2 -இன்ச்
🔷சோம்பு – 1/4 டீஸ்பூன்
🔷பிரிஞ்சி இலை -1
🔷கறிவேப்பில்ல – 1 கொத்து
🔷மரசெக்கு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

மட்டன் சந்தை கறி குழம்பு

செய்முறை :

🦙முதலில் மட்டனை நன்றாக சுத்தமாக கழுவிய பின்னர் பிரஷர் குக்கரில் போட்டு வரமிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் , மஞ்சள் தூள் போட்டு அரை கப் சுடு தண்ணீரை ஊற்றிதேவையான அளவிலான உப்பு சேர்த்து பிரஷர் குக்கரின் மூடியை மூடி குறைந்தபட்சம் 10 நிபிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

🦙பின்னர் மட்டன் நன்றாக கொதிக்க வீட்டுகோங்க. சூடான அரை கப் தண்ணீர் சேர்த்து இறுதியில் 30 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். மட்டன் விருதுவாக ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

🦙பிறகு வாணலியில் மரச்செக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக மலம் வீசும்வீசும் வரை வதக்கவும். பின் நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் ஊற்றி நன்றாக விழுதாக நைசாக மையாக அரைத்து கொள்ள வேண்டும்.

🦙பின் அகலமான ஒரு வாணலியில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் மட்டன் சுத்து கொழுப்பை சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். அதில் இஞ்சி – பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

🦙பின்பு விழுதாக அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து அதை பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும். அதில் கறிவேப்பில்ல சேர்த்து , அதில் விழுதாக அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

மட்டன் சந்தை கறி குழம்பு

🦙கடைசியாக வேகவைத்துள்ள ஆட்டிறைச்சியை வாணலியில் ஊற்றி மசாலா கலவையில் கொதிக்க வைக்க வேண்டும். மட்டன் பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

🦙கடைசியாக அதில் 2 கப் சுடு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும் அதில் எலுமிச்சம்பழ சாறு ஊற்றி அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக சிறுதீயில் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments