Homeசைவ சமையல்வாதநாராயண கீரை அடை

வாதநாராயண கீரை அடை

THATSTAMIL-GOOGLE-NEWS

வாதநாராயண கீரை அடை

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 2 பாகம்
வாநாராயண கீரை ( ஆய்ந்தது ) – 1/2 பாகம்
பச்சைமிளகாய் – 4 நறுக்கி கொள்ளவும்
நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
கடுகு , கறிவேப்பிலை , மல்லிதழை,உப்பு , எண்ணெய் , பெருங்காயத்தூள் – தேவையான அளவு

வாதநாராயண கீரை அடை

செய்முறை :

வாணலியல் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்தவுடன் பச்சைமிளகாய் , வெங்காயம் சேர்த்து வதக்கி பின்பு கீரையையும் சேர்த்து வதக்கி கேழ்வரகு மாவில் கொட்டி , உப்பு , பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை , மல்லிதழை சேர்த்து தேவையான அளவு நீர்விட்டு பிசைந்து உருண்டும் பதத்தில் வைக்கவும் .

பின்பு தோசைக்கல்லில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு உருண்டை மாவு எடுத்து அடையாக தட்டி ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு சிறிது எண்ணெய்விட்டு மறுபக்கமும் வெங்தவுடன் எடுத்துச் சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி ( அ ) பூண்டு சட்னி ஏற்றது. மிகவும் சுவையாக இருக்கும்.

பலன் :

வாதத்தைக் குறைப்பதாலேயே இது வாத நாராயணக் கீரை ஆகும்.

கேழ்வரகில் உள்ள அதிகளவு கால்சியமும் , கீரையும் மூட்டு வலி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது .

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments