மோர் ரசம்
தேவையானப் பொருட்கள்
🔹மோர் – 3 கப்
🔹மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
🔹கறிவேப்பிலை – சிறிதளவு
🔹பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
🔹கொத்தமல்லித்தழை – சிறிதளவு
🔹கடுகு – 1 டீஸ்பூன்
🔹காய்ந்த மிளகாய் 3
🔹உப்பு – தேவையான அளவு.
🔹தண்ணீர் தேவையான அளவு
🔹எண்ணெய் – தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க
🔹தனியா – 4 டீஸ்பூன்
🔹கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
🔹வெந்தயம் , மிளகு – தலா 1 டீஸ்பூன்
🔹சீரகம் – 1 டீஸ்பூன்
🔹காய்ந்த மிளகாய் 4
செய்முறை
🥣முதலில் வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ள தனியா , கடலைப்பருப்பு , சீரகம் , காய்ந்த மிலசாய் ஆசியவற்றை வெறும் வாணலியில் வருத்த , மிக்சியில் பொடிக்க வேண்டும்.
🥣பின்னர் மோருடன் மஞ்சள்தூள்,கறிவேப்பிலை , பெருங்கயைத்தாள் , 2 கப் தண்ணீர் , தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
🥣பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு , காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து , மோர் கரைசலை ஊற்றி நுரைத்து வரும் போது வறுத்துப் பொடித்த பொடி சேர்த்துக் கலந்து , கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் , சுவையான மோர் ரசம் தயார் !!!.