Homeகீரைகளின் பயன்கள்முருங்கையின் மகத்தான மருத்துவ பயன்கள்

முருங்கையின் மகத்தான மருத்துவ பயன்கள்

THATSTAMIL GOOGLE NEWS

முருங்கை

வேறு பெயர் : சிக்குரு , கிரஞ்சனம் , கிளவி , சோபாஞ்சனம் , பிரம்மவிருக்ஷம்

🔹உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்கும்,கண்ணெரிச்சல் நீங்கும்
🔹தாதுக்கள் பலப்படும்
🔹ஆண்மை பெருகும்
🔹கை காலசதி போக்கும்
🔹எலும்புகளை உறுதியாக்கும்
🔹மலக்கட்டை ஒழிக்கும்

முருங்கைமரம் இலைமுதல் அடிவேர்வரை சிறந்த உணவுப் பொருளாகவும் , மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது . முருங்கைக் கீரையில் உயிர்ச்சத்துக்களும் , புரதப் பொருள்களும் சுண்ணாம்பு , இரும்புச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

இக் கீரையைப் பொரியல் செய்தும் , தாளிதம் செய்தும்,உணவுடன் சேர்த்து உண்ணலாம். துவரம்பருப்புடன் இக்கீரையைச் சேர்த்துத் துவட்டலாகச் செய்து உண்பது மிக்க சுவை அளிக்கும்.

முருங்கைப் பிஞ்சு சிறந்த கறி உணவாகும். பூவில் இருந்து பிஞ்சு தோன்றியவுடன் எடுத்துப்பாகம் செய்து உண்ணும் உணவு சிறந்த உணவாகக் கருதப்படுகின்றது.

முருங்கை

முருங்கைக் காய் பலவகைகளில் பயன்படுத்தப்படுகிறது. காயில் இருக்கும் முற்றாத விதையுடன் கூடிய உட்சதை மிக்க சுவையுடையது. நாருடன் கூடிய அதன் மேற்பாகம் இனிப்புச்சுவை நிறைந்தது. மேற்றோலை மெல்லுவதால் பல்லுக்கு உறுதி ஏற்படுகின்றது.

முருங்கை காயில் அமைந்திருக்கும் விதையும் அதனுள்ளிருக்கும் பருப்பும் மிக்க சுவையுடையன.கொழுப்புச்சத்து நிறைந்தன. உடல்வலுவுக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தன . முருங்கையிலை , பூ , பிஞ்சு , காய் அனைத்துமே சிறந்த பத்தியக் கறியாகும். சுருங்கக்கூறின் முருங்கைமரமானது அடி முதல் நுனிவரை மருந்துக்காகப் பயன்படுகிறது.

முருங்கைக் கீரை உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்க வல்லது. ஏழுவகைத் தாதுக்களின் சூட்டைத் தணிக்கவல்லது. சிறு நீரைப் பெருக்கித்தள்ளும் ஆற்றலுடையது. நரம்பு இசிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமையுடையது.சுக்கில உற்பத்தியைப் பெருக்கும்.

முருங்கைக் கீரை உண்பதால் சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும் , கண்ஒளி பெருகும் , முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்துச் சமைத்து உண்டுவர நீரிழிவுநோய் நீங்கும் , உடல் வலுப்பெறும் , காமாலை , மாலைக்கண் போன்ற நோய்களையும் நீக்கும்.

இக்கீரை இரத்தவிருத்திக்கும் , தாது பலம் பெறவும் பெரிதும் பயன்படும். முருங்கைப் பூவைப் பருப்புடன் வேக வைத்து உண்டுவந்தால் தலைக்கேறிய பித்தமும் வெப்பமும் தணிந்து கண்ணெரிச்சல் நீங்கும். முருங்கைப் பூவைப் பசுப் பாலில் சேர்த்து வேகவைத்துப் பாலையும் பருகிப் பூவையும் தின்றால் தாது பெருகும்.ஆண்மைச் சக்தியும் உண்டாகும் .

முருங்கைக்காய்க் குழம்புவகைகளை உண்பதால் மார்புச்சளி கபம் ஆகியன நீங்கும். நரம்புகள் வலிமைபெறும். அதிகமாக உண்டால் உஷ்ணவாய்வு நோய்கள் உண்டாகும்.

குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்கு சுரக்கும். முருங்கைக் கீரைச் சாற்றுடன் சிறிது சுண்ணாம்பும் தேனும் கலந்து தொண்டைக் குழியில் தடவ இருமல் , குரல் கம்மல் முதலியன நீங்கும்.

இதயம் வலிமைபெற விரும்புவோர் முருங்கைப் பூவை அவித்து உணவோடு சேர்த்துச் சில நாட்கள் தொடர்ந்து உண்டால் பூரண பயன் கிடைக்கும்.

வாதம் , முடக்குவாதம் , இளம்பிள்ளை வாதம் முதலியவற்றிற்கு முருங்கை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாதவலி தீர்க்கும் பூச்சுமருந்தாகப் பயன்படுகிறது.

முருங்கைப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு பல தைலங்களில் சேர்க்கப்படுகின்றது . முருங்கைப்பட்டையைத் தூளாக்கி வீக்கங்கள் , கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டுவதும் உண்டு.

முருங்கைப்பட்டைச் சாற்றுடன் குப்பைமேனிச் சாற்றைச் சேர்த்து எண்ணெய்விட்டுக் காய்ச்சி கரப்பன் , சொறி , சிரங்கு ஆகியனவற்றுக்குப்பூசஅவை நீங்கும்.

முருங்கைப்பிசினை நல்லெண்ணெயில் கரைத்துக் காதில் விடக் காதுவலி நீங்கும். முருங்கைவேரின் சாற்றுடன் பால் சேர்த்து தக்க அளவாக உண்டுவர விக்கல், ஆஸ்துமா , கீழ் வாதம் , உள்ளுறுப்புகளின் வீக்கம் , முதுகுவலி முதலியன நீங்கும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments