Homeசைவ சமையல்சைவ சமையல்-பாலக் பன்னீர்(Palak Panneer )

சைவ சமையல்-பாலக் பன்னீர்(Palak Panneer )

THATSTAMIL-GOOGLE-NEWS

பாலக் பன்னீர்(Palak Panneer )
தேவையான பொருட்கள் 

🔹பசலைக் கீரை – 3 கட்டு

🔹பச்சை மிளகாய் 2

🔹பொடியாக அரிந்த வெங்காயம் – 1

🔹டேபிள்ஸ்பூன் – சீரகம் – 1/2 டீஸ்பூன்

🔹மைசூர் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்

🔹தனியாபொடி – 1டேபிள்ஸ்பூன்

🔹மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்

🔹சர்க்கரை 1/4 டீஸ்பூன்

🔹எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்

🔹பனீர் ( பாலாடைக்கட்டி ) – 1 லிட்டர் பாலிலிருந்து தயார் செய்த அளவு

🔹தக்காளி பெரிய வெங்காயம் – 2 ( அ ) 3

🔹3 ( சுமாரான – 9 பல் அளவில் பூண்டு துருவிய சீஸ்

🔹1 டேபிள்ஸ்பூன் ( Grated Cheese ) கரம் மசாலா

🔹நெய் 1 டீஸ்பூன் / டீஸ்பூன்

🔹கடைந்த பாலேடு (அ )கிரீம்

பாலக் பன்னீர்(Palak Panneer )
பாலக் பன்னீர்(Palak Panneer )
செய்முறை : 

✅கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கவும் .

✅அதனோடு பருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு குக்கரில் 3 நிமிடம் வேகவைக்கவும். அது குளிர்ந்ததும் தண்ணீர் வடித்து தனியாக வைக்கவும்.

✅பூண்டை உரித்து , தக்காளி வெங்காயம் இரண்டையும் நீள வாக்கில் அரியவும்.

✅1 டேபிள்ஸ்பூன் எண்ணெயை வாணலியில் சூடாக்கி , பூண்டு வெங்காயம் வதக்கிய பின் , தக்காளி போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

✅வதங்கிய பின் அதை வேக வைத்த கீரையோடு சேர்த்து அரைக்கவும்.

✅வாணலியில் மீதி எண்ணெயை விட்டு , சீரகம் , கீரிய பச்சை மிளகாய் , பொடியாக அரிந்த வெங்காயம் சேர்க்கவும்.

✅வெங்காயம் வதங்கியதும் , தனியாதூள் , உப்பு , சர்க்கரை , மிளகாய்த்தூள் சேர்த்து அதோடு இரை அரைத்த விழுதையும் , கீரை வடித்த நீரையும் சேர்க்கவும்.

✅சிறிது நேரம் கொதித்ததும் , சிறிய சதுரங்களாக வெட்டிய பாலாடைக்கட்டியை சேர்க்கவும்.

✅சிறிது சூடாக்கிய நெய்யில் கரம் மசாலாத்தூள் சேர்த்து , கலந்து கீரையில் கொட்டவும்.

✅நன்கு கலந்து துருவிய சீஸ் , க்ரீம் அலங்கரித்து பரிமாறவும் .

✅பூரி , சப்பாத்தி போன்றதற்குத் தொட்டுக் கொள்ளலாம்.

✅பரிமாறும் போது பொடியாக அரிந்த வெங்காயம் , எலுமிச்சம்பழம் , மிளகுத்தூள் போன்றவற்றை பக்கத்தில் வைக்கவும் . விருப்பப்பட்டால் சிறிது மிளகுதூள் தூவலாம் .

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments