Homeசித்த மருத்துவம்சித்த மருத்துவம்-அகட்டு வாயு அகற்றி-Carminative

சித்த மருத்துவம்-அகட்டு வாயு அகற்றி-Carminative

THATSTAMIL-GOOGLE-NEWS

சித்த மருத்துவம்-அகட்டு வாயு அகற்றி -Carminative

இரைப்பையிலும் அதனோடு தொடர்பான குடலில் ஏற்படுகின்ற தீங்கு விளைவிக்கின்ற காற்றை நீக்கி ( வயிற்றுப் பொருமல் ) வேதனையைக் குறைக்கும் மருந்துப் பொருட்களை அகட்டுவாய்வு அகற்றி என அழைக்கலாம்.

The drug used for explusion of gas from the stomach and intestine thereby relieves pain and flatulence

முக்கிய மூலிகைகள்

🔹இஞ்சி
🔹ஏலம்
🔹சுக்கு
🔹மிளகு
🔹பெருங்காயம்
🔹வெள்ளை பூண்டு
🔹கிராம்பு
🔹சாதிக்காய்
🔹இலவங்கம்
🔹புதினா
🔹திப்பிலி
🔹ஓமம்
🔹சீரகம்

சித்த மருத்துவம்

உபயோகிக்கும் முறை

இஞ்சி:

5 கிராம் இஞ்சி எடுத்து புறத்தோல் சீவி துப்புரவு செய்து பசுப்பால் சிறிது விட்டரைத்து 20 மி.லி. பசுப்பாலில் கலந்து காலை , மாலை இரு வேளை சாப்பிட்டுவர வயிற்றிலுள்ள வாய்வு நீங்கும்.வயிற்று மந்தம் நீங்கி , பசியுண்டாகும் . இது ஒரு கற்ப மூலிகையாகும்.

ஏலம்

ஏலரிசித்தூள் 15 கிராம் எடுத்து வாயில் போட்டு , நற்சீரகம் ஊறிய நீர் 30 மி.லி. மூன்று வேளை அருந்திவர வயிற்றுவலி , செரியாமை , பசிமந்தம் ஆகியன தீரும்.

சுக்கு

சுக்கினைப் பொடித்து வைத்துக் கொண்டு அதில் மூன்று விரல் அளவுப் பிரமாணப் பொடியை , 170 மி.லி . உடனே கறந்த பசுப் பாலில் ( தாரோட்டம் ) கலந்து தினம் ஒரு வேளை குடித்துவரப் பசியுண்டாகும்.

மிளகு

மிளகுத் தூள் 50 கிராம் எடுத்து , 700 மி.லி. நீரில் போட்டு ஊறவைத்து , பின் அடுப்பேற்றி காய்ச்சி கால் பங்காகக் குறுக்கி எடுத்து அதில் 30-60 . மி.லி. தினம் இரு வேளை குடித்துவர தொண்டைக் கம்மல் , தொண்டைப்புண் , வயிற்று நோய்கள் நீங்கும்.
“பத்து மிளகு வீட்டில் இருந்தால் பக்கத்து வீட்டுப் பகைவனிடமும் சாப்பிடலாம் “
என்ற வாசகத்தை இங்கு நினைவுகூருதல் நன்று.

பெருங்காயம்

நற்சீரகம், சுக்கு , மிளகு , திற்பலி , ஓமம் , கறிவேப்பிலை , இந்துப்பு இவைகளைச் சம எடை சேர்த்துப் பொடித்து வைத்துக்கொண்டு அதனில் 300-600 மி.கிராம் எடை அளவு சோற்றுடன் முதற் பிடியாக உண்டுவர பசியும் , சீரணமும் உண்டாகும்.

அத்துடன் வயிற்று உப்புசம் , மந்தம் நீங்கும் .பெருங்காயச் சத்து 2 துளியை 30 மி.லி. நீரில் கலந்து குடித்துவர பசியுண்டாகும்.

சித்த மருத்துவம்

வெள்ளைப் பூண்டு

வெள்ளுள்ளி , மிளகு , கையாந்தகரை இலை ஆகியன சம எடையாக எடுத்து அரைத்து உண்டு வர வயிற்றுப்புசம் நீங்கும்.

வெள்ளுள்ளியைத் தணலில் போட்டுச் சுட்டு உண்டுவர வயிற்றில் உள்ள வாய்வுக் கோளாறுகள் நீங்கும்.

இலவங்கம் , கராம்பு

சுக்கு , இலவங்கப் பட்டை , பெருஞ்சீரகம் , வாய்விடங்கம் , கராம்பு வகைக்கு 5 கிராம் எடுத்து குடிநீர் செய்து கால் பங்காகச் சுருக்கி வடித்தெடுத்து 15-30 மி.லி.தினமும் இரு வேளை குடித்துவர வயிற்றுவலி , குன்மம் தீரும் .

சாதிக்காய்

🔹சாதிக்காய் 130 கிராம்
🔹சுக்குத் தூள் 130 கிராம்
🔹நற்சீரகம் 325 கிராம்

இவற்றை எடுத்துப் பொடித்து , அதில் 1 – 2 தேக் கரண்டி வீதம் உணவுக்கு முன் , தினமும் ஒரு வேளை உண்டுவர வயிற்றில் உண்டாகும் வாயுவைப் போக்கிச் செரிமானத்தை உண்டுபண்ணும்.

புதினாக் கீரை

இதில் சிறிதளவு எடுத்துத் துப்புரவு செய்து பின்னர் அதனை நன்கு அரைத்து நீரில் கலந்து உட்கொள்ள வயிற்றுவலி நீங்கி , பசியை உண்டு பண்ணும்.

சித்த மருத்துவம்

திற்பலி

அரிசித்திற்பலியைப் பொடித்து , சர்க்கரை கலந்து வேளைக்கு ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை உட்கொள்ள வயிற்று உப்புசம் தீரும்.

ஓமம்

ஓமம் 30 கிராம் , மிளகு 30 கிராம் இரண்டையும் வெதுப்பி 30 கிராம் வெல்லத்துடன் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு பத்து நாட்களுக்கு உண்டுவர வயிற்றுப்பொருமல் நீங்கும்.

சீரகம்
நற்சீரகத்தைப் பொடித்து அதனுடன் சம அளவு சீனி கலந்து , அதனில் மூன்று கிராம் அளவு தினமும் இருவேளை உண்டுவர வயிற்றுப் பொருமல் , எரிவு நீங்கும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments